நெத்தியடி! ஒரு பக்கக் கதை.

 நெத்தியடி! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

டாஸ்மாக்கிலிருந்து ஃபுல்லாக குடித்துவிட்டு தள்ளாடியபடி வீட்டுக்குள் நுழைந்த கதிரேசன் கண்களில் அவனது மகன் நரேஷ் தென்பட்டான். கை நிறைய சாக்லேட்களுடன் ஒன்றை உரித்து வாயில் போட்டு சுவைத்தபடி இருந்த நரேஷைப் பார்த்ததும் கதிரேசனுக்கு கோபம் கோபமாக வந்தது.
“டேய் நரேஷ்! இங்க வாடா! உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?” சாக்லேட்ஸ் அதிகம் சாப்பிடக் கூடாதுன்னு? கை நிறைய சாக்லேட் வச்சிட்டு சாப்பிட்டுக்கிட்டு இருக்கே?”
கொஞ்சம் பம்மியபடி வந்த நரேஷ், ”அப்பா! சாக்லேட்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்பா!” என்றான்.
”ஆனா சாக்லேட்ஸ் நிறைய சாப்பிட்டா உடம்புக்கு நல்லது இல்லை! பல் சொத்தையாகும், கறைபிடிக்கும்!”
”அப்ப சாக்லேட்ஸ் சாப்பிடக் கூடாதாப்பா?”
”உடம்புக்கு கெடுதின்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்? நீ சொன்ன பேச்சைக் கேட்க மாட்டியா?”
”அப்ப நம்ம உடம்புக்கு கெடுதி பண்ற எதையும் நாம சாப்பிடக் கூடாது சரியாப்பா?”
“வெரிகுட் டா! கண்ணா! அப்பா சொன்னதை சரியாப் புரிஞ்சுகிட்டு இருக்கிறே? இனிமே சாக்லேட் சாப்பிடறதை விட்டுடு!”
”சரிப்பா! நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்கட்டுமா?”
“பயப்படாமா கேளுடா ராஜா! என்ன கேட்கப் போறே?”
”சாக்லேட் உடம்புக்கு கெடுதின்னு என்னை சாப்பிடக் கூடாதுன்னு சொல்றீங்க! ஆனா குடிக்கிறது உடம்புக்கு கெடுதின்னு உங்களுக்குத் தெரியாதாப்பா? சொல்லப் போனா சாக்லேட்ஸை விட குடிப்பழக்கம் ரொம்பவே கெடுதி உயிரைப் பறிக்கும்னு எங்க மிஸ் சொல்லி இருக்காங்க! நான் சாக்லேட்ஸ் சாப்பிடறதை விட்டுடறேன்! நீங்க எப்ப குடிக்கிறதை விடப் போறீங்கப்பா!”
மகன் கேட்ட நெத்தியடி கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து நின்றான் கதிரேசன்.

(கதிர்ஸ் மின்னிதழ் பிரசுரம்)

All r

Comments

  1. நல்ல கேள்வி - அப்பா திருந்தினால் சரி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2