நந்தி மேல் நர்த்தனமாடும் சிவன்!
நந்தி மேல் நர்த்தனமாடும்
சிவன்!
உலகெலாம் உய்விக்கும் ஈசன்
அம்பலத்தே நடனம் ஆடும் காட்சியை நடராஜ சொருபமாய் கோயில்களில் காண்கிறோம்.
வெள்ளிசபை, தாமிரசபை, ரத்தின சபை, பொன் சபை,மாணிக்க சபை என்று சிவன் நடராஜராக நடனமாடும் சபைகள் பலவாறு அழைக்கப்பட்டு
சிறப்பு செய்யப்படுகின்றன.
பிரதோஷ காலத்தில் சிவன் நந்தியின்
இரு கொம்புகளுக்கு இடையே நின்று நடனம் புரிவதால் நந்திக்கு விசேஷமாக அபிஷேக
ஆராதனைகள் செய்து வழிபடுகின்றோம். இந்த நந்திமேல் சிவன் ஆடும் நர்த்தன காட்சியை
எந்த கோவிலிலாவது கண்டு களித்தது உண்டா நீங்கள்?
நந்தியின் மீது சிவன் ஆடும் நர்த்தன கோலத்தை
மேலக்கடம்பூர் அமிர்த கடேஸ்வரர் ஆலயத்தில் நாம் காணலாம். மேலக்கடம்பூர் அது எங்கே
இருக்கிறது?
தென்னாற்காடு மாவட்டம் சிதம்பரத்தை அடுத்து
உள்ள காட்டுமன்னார் கோயில் என்னும் ஊரிலிருந்து வடமேற்கில் ஆறு கிலோ மீட்டர்
தொலைவில் அமைந்துள்ளது மேலக்கடம்பூர் என்று தற்சமயம் வழங்கப்படும் திருக்கடம்பூர்.
திருக்கடம்பூரின் சிறப்பு என்ன?
இந்திரனின் தாய் இந்த தல
இறைவன் மீது பக்தி கொண்டு பூஜித்து வந்தாள். அமிர்தகடேஸ்வரர் மேல் பக்தி கொண்ட
தாயை இவ்வளவு தூரம் வந்து பூஜை செய்து கஷ்டப்பட வேண்டுமா? இந்த கோயிலையே இந்திர
லோகத்திற்கு எடுத்து வந்துவிடுகிறேன்! என்று கர்வமுடன் சொன்னான் இந்திரன்.
கரிமுகன் கணபதிக்கு இந்த செய்தி கசிந்தது!
இந்திரனின் ஆணவத்தை அடக்க நினைத்தார். இதற்குள் இந்திரன் கோவிலின் கர்ப்ப
கிருகத்தை தேர்ச்சக்கரங்கள் மூலம் இணைத்து குதிரைகளை பிணைத்து இழுக்க முயற்சி
செய்தான்.
கணபதி தன் பெருவிரலால் தேரை அழுத்த தேர்
சிறிதும் நகரவில்லை! அப்படியே சாய்ந்து நின்றுவிட்டது. இந்திரன் தன் தவறை
உணர்ந்தான். நாம் தான் இறைவனை நாடி செல்ல வேண்டும். இறைவன் நம்மை நாடி வரமாட்டான்
என்று உணர்ந்தான். ஆணவம் புகும் உள்ளத்தில் ஆண்டவன் குடிபுகமாட்டான் என்று தவறை
உணர்ந்து இறைவனை வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்தான். அந்த
தலத்திலேயே தனது தவறுக்கு பிராயச்சித்தமாக கோடி லிங்கங்களை பிரதிஷ்டை செய்து
சிவபெருமான் அருளைப் பெற்றான்.
கோயில் தேர் வடிவில் அழகுற அமைந்துள்ளது.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் மணிவாசகர் ஆகிய நால்வரும் பாடிய திருத்தலம்.
இந்திரனுக்கு அமிர்தகலசம் இங்குதான் கிடைத்தது. எனவே அமிர்தகடேஸ்வரர் என்று இறைவன்
வழங்கப்படுகிறார்.
கோயிலில் உமா மகேஸ்வரர், அர்த்த
நாரீஸ்வரர், கன்னிவிநாயகர், மீனாட்சி அம்மன் சந்நிதிகள் உள்ளன. நந்தியின் மீது
சிவன் நடனமாடும் சிலை காணக் கிடைக்காத ஒன்று. மிக அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஊழிக் காலத்தில் சிவன் விஷம் உண்டு நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நர்த்தனம்
புரிந்ததை அழகுற சிலை வடித்துள்ளனர்.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் இந்த சிலை
மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டுவரப்பட்டது என்றும் சொல்கிறார்கள். மிக அழகிய
இந்த சிலை வேறு எந்த கோயிலிலும் காணக் கிடைக்காது.
இந்திரனுக்கு அமிர்தம் அருளிய அமிர்த
கடேஸ்வரரையும் நந்தி மீது நர்த்தனம் ஆடும் சிவனையும் ஒருமுறை தரிசித்து வாருங்கள்!
நல்லன நடக்கும் .
டிஸ்கி} 1500 வது பதிவு இது. நான்கு வருடங்கள் முன்பு விளையாட்டாய் எழுத ஆரம்பித்து இடையில் எழுத்தார்வத்தை காபி- பேஸ்ட் சினிமா செய்திகள் பீடித்து நண்பர் கொன்றை வானத் தம்பிரான் புண்ணியத்தில் அதிலிருந்து மீண்டு இன்று இந்த ஆயிரத்து ஐநூறாவது பதிவில் கால்பதித்து இருக்கிறது தளிர். மேலும் விருட்சமாக வளர்ந்தோங்க வாழ்த்துங்கள்! இத்தனை காலமும் என்மீது நம்பிக்கை வைத்து என்னுடைய பதிவுகளை படித்து ஊக்கப்படுத்தி கருத்துக்கள் இட்டு குறை களைந்து வளர்க்கும் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக பதிவர்களுக்கும் எனது நன்றிகள்.
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
வணக்கம் சகோதரர்
ReplyDelete1500 ஆவது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். 1500 என்பது என்னை வியக்க வைக்கிறது. அதன் பின் உழைப்புக்கும் தங்களின் தமிழ்ப்பணிக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இன்னும் மேலும் மேலும் அருமையான ப்டைப்புகளைத் தந்து பார் போற்றிட இணைய வானில் வலம் வர வாழ்த்துகள்..
-----------
அருமையான புதிய செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரர். திருக்கடம்பூர் செய்தியை மட்டும் கூறி விட்டு விடாமல் அதன் வரலாற்றையும் கூறியது சிறப்பு. படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரர்..
நன்றி நண்பரே! உங்களைப் போன்றவர்களின் ஊக்கமூட்டும் கருத்துக்கள் என்னை தொடர்ந்து எழுதச் செய்கிறது! நன்றி!
Deleteஎன் பேரனை வாழ்த்திய உங்கள் பதிவு தேடி வந்தேன். 1500-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். திருக்கடம்பூர் திருக்கடையூர் இரண்டு பெயர்களும் கொஞ்சம் கன்ஃப்யூஸ் செய்தது. திருக்கடையூரிலும் இறைவன் அமிர்த கடேசர்தான். புகைப் படங்கள் நன்கு வந்திருக்கின்றன. நீங்களே எடுத்ததா. ? வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி ஐயா! நானும் இதுவரை இந்த தலத்திற்கு சென்றது இல்லை! ஆன்மிக இதழில் படித்ததை என் பாணியில் எழுதினேன். படங்கள் கூகூளில் கிடைத்தது.நேரமும் இறைவன் விருப்பமும் இருந்தால் தரிசிக்க வேண்டும். நன்றி!
Deleteநினைக்கவே மலைப்பாக இருக்கிறது
ReplyDelete1500 வது பதிவு
மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் நண்பரே
திருக்கடம்பூர் கோவில் அறிமுகம் நன்று.1500 க்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅமிர்த கடேஸ்வரர் ஆலய அறிமுகம் நன்று. அறிந்திராத கோவிலின் சிறப்பை பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது.
ReplyDeleteஅடேங்கப்பா!!! 1500 பதிவுகள். மிக்க மகிழ்ச்சி.
தொடரட்டும் தங்களின் தமிழ் பணி. வாழ்த்துக்கள்