“தலைவருக்கு சீட் கெடச்சிருச்சு!” ஜோக்ஸ்!
ஜோக்ஸ்!
1.
தலைவர்கிட்ட மின் அஞ்சல்
முகவரி கேட்டதுக்கு கோபிச்சுக்கிறாரா ஏன்?
மின் பற்றாக்குறை
இருக்கிற இந்த நேரத்துல எதுக்கு மின்னஞ்சல்னு கேக்கிறாரு!
2.
தலைவர் சீட்
கெடச்சிருச்சு! சீட் கெடச்சிருச்சுன்னு சொல்றாரே! எந்த தொகுதியில நிக்கறாரு?
நீ வேற அவர் பிரச்சார
மேடையில உக்காரதுக்கு சீட் கெடச்சதைத்தான் பெருமையா அப்படிச் சொல்றார்!
3.
சமையல் சரியில்லைன்னு
அம்மா வீட்டுக்கு கோச்சுக்கிட்டு போனியே அப்புறம் என்ன ஆச்சு?
அங்கேயும் எங்கப்பா
சமையல் சரியில்லை!
4.
வீடு வீடாப் போய் வாக்கு
சேகரிக்கலாம்னு சொன்னதை தலைவர் தப்பா புரிஞ்சிக்கிட்டாரு!
அப்புறம்?
ஓட்டுப்பெட்டியை வீடுவீடா
தூக்கிட்டு கிளம்பிட்டாரு!
5.
அந்த பேச்சாளர் எதுக்கு
பேசறதுக்கு முன்னாடி தேன் குடிக்கிறார்?
அதுவொண்ணுமில்லைங்க! அவர்
எப்பவும் பேச்சுல தேன் தடவித்தான் பேசுவாராம்! அதான்!
6.
தலைவர் காருல பல லட்ச
ரூபாயோட பறக்கும்படைகிட்ட சிக்கிகிட்டாராமே!
ஆனா தலைவர் அசரலை!
இது “வாக்குசேகரிப்புநிதி’ன்னு சொல்லி
சமாளிச்சிட்டாராம்.
7.
பஸ் கண்டக்டரை
காதலிக்கிறது ரொம்ப தப்பா போச்சா? ஏன்?
எப்ப எது வாங்கித்தரச்
சொன்னாலும் சில்லறை இல்லைன்னு சில்லறை இல்லைன்னு சொல்லிடறாரு!
8.
மன்னா எதிரிகள் போருக்கு
புறப்பட்டு விட்டார்களாம்!
அப்படியானால் நாம்
பதுங்குக் குழிக்கு புறப்பட்டுவிடவேண்டியதுதானே மந்திரியாரே!
9.
மன்னா! அரண்மணையில்
எதிரிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது!
அப்படியானால் அரண்மணை
இடமாற்றம் ஆகப்போகிறது என்று சொல்லுங்கள்!
10. அந்த வேட்பாளருக்கு குழந்தை மனசு!
அதுக்காக இப்படி நடைவண்டி
ஓட்டிக்கிட்டு வந்து ஓட்டு கேக்கறது எல்லாம் நல்லா இல்லை!
11. தலைவர் பிரச்சாரத்துல மானத்தை வாங்கிட்டாரா எப்படி?
எங்க தலைவர் நடத்தும்
வங்கியை ரெய்ட் செய்கிறீர்களே! அந்த கட்சிக்கு உள்ள வாக்கு வங்கியை ரெய்டு
செய்தீர்களான்னு கேக்கறார்!
12. இந்த ஆட்சியில் ஊழல் ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது என்று
சொல்பவர்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன்! எங்கள் ஆட்சியிலாவது ஊழல் ஆறு ஓடுகிறது
உங்கள் ஆட்சியில் எந்த ஆறில் தண்ணீர் ஓடியது!
13. உன்னோட வீட்டுல தண்ணித் தெளிச்சி விட்டுட்டாங்களா?
ஆமாம்! அப்புறம் நான் தான் போயி கோலம் போட்டேன்.
14. வங்கியிலே போய் லோன் கேட்டதுக்கு அடிச்சிட்டாங்களா? ஏன்?
இரத்தவங்கியிலே போய் லோன்
கேட்டா அடிக்காம என்ன செய்வாங்க?
15. இப்படி திருடி மாட்டிக்கொண்டு எத்தனை முறை என் முன்னால்
நிற்பாய்? வெட்கமாயில்லை!
மன்னிச்சுக்கோங்க எசமான்!
உங்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்காததுக்கு நான் காரணம் இல்லை!
16. அந்த டாக்டர் ஒரு சந்தேகப் பேர்வழியா? எப்படிச்சொல்றே?
மயக்க மருந்து
கொடுத்ததுக்கு அப்புறமும் சுத்தியல்ல மண்டையில ஒரு தட்டு தட்டிட்டுதான் ஆபரேஷனை
ஆரம்பிப்பார்!
17. மன்னர் ஏன் அரசவைப்புலவரை நீக்கிவிட்டார்!
மன்னரை புகழ்ந்து பாடல்
எழுதுகிறேன் என்று ஓலைகள் நிறைய வாங்கி வீடு கட்டிவிட்டாராம்! அதனால்தான்!
18. தலைவர் எதுக்கு சிமெண்டும் கையுமா அலைஞ்சிகிட்டு இருக்கார்!
கட்சியில ஏற்பட்ட பிளவை
அடைக்கப் போறாராம்!
19. மன்னா! எதிரி நம் மீது ஒரு கண் வைத்திருக்கிறான்!
யாரங்கே! உடனே மூதாட்டிகளை கூப்பிட்டு கண்ணேறு
20. தலைவருக்கு எப்பவும்
கமிஷன் ஞாபகம்தான்!
எப்படிச் சொல்றே?
தேர்தல் கமிஷன் தேர்தல்
கமிஷன்னு சொல்றாங்களே எவ்வளவு கிடைக்கும்னு கேக்கறார்!
அனைத்தும் சொந்த
சரக்குங்க!
மேலும் தொடர்புடைய இடுகைகள்:
1. மொக்க ஜோக்ஸ் 3
2. மொக்க ஜோக்ஸ் 4
3. கூட்டணி சரியில்லைன்னு தலைவர் புலம்புவது எதற்கு? ஜோக்ஸ்
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
சில ஜோக்ஸ் மொக்கை.. சிலது சிரிப்பை வரவழைத்தது..
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேஷ் ஜி உங்கள் ஜோக் மழையில்நனைந்து மகிழ்ந்தேன் .கணக்கில் வராத அந்த ரெண்டு ஜோக்குகள் பாக்யாவில் தானா ?
ReplyDeleteசிலது ஹா... ஹா.... சிலது ஹிஹி....
ReplyDeleteகாலத்துக்கேத்த பதிவு... அரசியல் வாசனை அதிகம்
ReplyDeleteGood efforts.....
DeleteHi....I admire ur efforts..keep it up....good jokes.....always confidence and efforts pays....
ReplyDeleteGood efforts....
ReplyDelete