ஷாக் அடிக்கும் மின்கட்டண உயர்வு? ரூ 10 வரை உயர்வு?
சென்னை: மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என தமிழக அரசு கடந்த சில
நாட்களுக்கு முன்னர் அறிவித்தது.இது தொடர்பாக மின்சார ஒழுங்கு முறை
ஆணையத்திடம் முறையீடு செய்யப்பட்டிருந்தது. தமிழக அரசு பரிந்துரைத்துள்ள
மின்சார கட்டணம் தற்போது வெளிவரத்துவங்கியுள்ளது. இதன் படி வீடுகளுக்கு
மின் சார கட்டணம் 100 யூனிட் வரை ஒரு யனிட்டிற்கு ரூ.1.50 எனவும், 101
முதல் 600 வரை ரூ.5.75 என உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும்
பள்ளிகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.5.50 எனவும், தொழிற்சாலைகளுக்கு யூனிட்
ஒன்றிற்கு ரூ. 5 எனவும், கடைகளுக்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.6.50 எனவும்
உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதனிடையே
மின்சார கட்டண உயர்வு குறித்து 4 வாரத்தில் மக்கள் கருத்துக்களை
தெரிவிக்கலாம் எனவும், சென்னை தவிர மற்ற நகரங்களில் மக்கள் கருத்து கேட்க
கூட்டம் நடத்தப்படும் எனவும் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணைய தலைவர்
கபிலன் கூறியுள்ளார். மேலும் அவர் மின் கட்டண உயர்வு குறித்து 90
நாட்களுக்குள் முடிவு செய்யப்படும் எனவும் கூறினார்.
நன்றி தினமலர்
நன்றி தினமலர்
Comments
Post a Comment