தளிர் ஹைக்கூ கவிதைகள்! 1
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
மழையில் நனைந்தன
காதுகள்!
இசை!
நீண்டு வளர்ந்தும்
நிற்க நிழலில்லை!
நெடுஞ்சாலைக் கம்பங்கள்!
காதை திருகியதும்
கதறி அழுதது
தண்ணீர் குழாய்!
விழுந்தும்
அடிபடவில்லை!
அருவி!
பச்சை சேலையில்
வெள்ளை ரோஜாக்கள்!
வயலில் கொக்குகள்!
பூமிக்கு புதுச்சட்டை
அணிவித்தன
புற்கள்!
இசை பாடும் முன்
குளவி
தலையை சீவியதும்
தண்ணீர் தந்தது
இளநீர்!
அழகான வீடு!
அடித்து நொறுக்கப்பட்டது
சிலந்திவலை!
முத்துக்கள் பூத்தன!
முகத்தில்
உழைப்பு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
அனைத்தும் அழகு
ReplyDeleteNice Lines...
ReplyDeleteகாதை திருகியதும்
ReplyDeleteகதறி அழுதது
தண்ணீர் குழாய்!
அழகான வீடு!
அடித்து நொறுக்கப்பட்டது
சிலந்திவலை
எல்லாம் அழகு இவை மிக அழகு!