தளிர் சென்ரியுக்கள்! 1


தளிர் சென்ரியுக்கள்!

சென்ரியு என்பது ஹைக்கூ வகையிலான ஒரு குறும்பா! ஹைக்கூவில் இயற்கை பேசும்! சென்ரியுவில் நகைச்சுவை, அரசியல் நிகழ்காலம் புகுந்து விளையாடும்! இன்றைய ஹைக்கூக்கள் பெரும்பாலும் சென்ரியு வகையிலேயே உள்ளது என்பது வேதனையான விஷயம்.
   இங்கே நான் எழுதிய சில சென்ரியு கவிதைகள்!

களித்தது மனசு
இளைத்தது பர்சு
உறவினர் வருகை!
 
பிடித்தவனை
பிடித்துக் கொண்டார்கள்!
சிகரெட்

நல்லது சொன்னதற்கா
நடுக்கடலில் தள்ளினார்கள்!
வள்ளுவர் சிலை!

உய்விக்கும் உயிர்கள்
வெட்டிசாய்க்கப்பட்டன
சாலை விரிவாக்கம்!

உயிர்களைக் கொன்று
ஜடங்களை நட்டார்கள்!
பாலங்கள்!

ஒரு மிருகத்தை
பலமிருகங்கள் கொன்றன
கடாபி!

நாடோடிகளின்
படுக்கை விரிப்பானது
நடைபாதை!

கையில் தடியுடன்
அஹிம்சாவாதி
காந்தி!

ஊற்றிக்
கெடுக்கிறது அரசு
டாஸ்மாக்!

கான்கிரிட் வயல்களில்
காணாமல் போனது
பசுமை!

 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. அட புதிதாக ஒரு தகவலை அறிந்து கொண்டேன் நன்றி பாஸ்

    ReplyDelete
  2. எல்லாமே அசத்தல்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2