பெண்கள் மீது ரொம்ப அக்கறை தமிழக அரசுக்கு ! - இலவச நாப்கின் வழங்கும் திட்டம் ஜெ., அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்துவதற்கு இலவச நாப்கின் வழங்கிட முதல்வர் ஜெ., உத்தரவிட்டுள்ளார். நாப்கின் வழங்குவதுடன் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அழிக்கும் முறையிலும் அரசு அதிக அக்கறை எடுத்துக்கொள்ளும் என்றும் சுகாதாரத்தை மேன்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் அறிவிக்கப்படுவதாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றால் பெண்களின் நலன் கருத்தில் கொள்ளப்படும் என்ற ஜெ., வின் கொள்கை அடிப்படையில் பெண்களுக்கு இலவச மிக்ஸி, கிரைண்டர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு விநியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதில் இன்று ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

முதல்வர் ஜெ., உத்தரவின்படி இன்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநிலம் முழுவதும் வயது பூர்த்தியான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் பெண்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், அவர்களுக்கு உதவும் வகையிலும் மாதவிடாய் இலவச பஞ்சு ( நாப்கின்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழக அரசு மூலம் பெண்கள், மாணவிகள் என அனைவருக்கும் மாதம்தோறும் வழங்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த பள்ளி நிர்வாகம் மூலமும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சுகாதார துறை அலுவலகர்கள் மற்றும் கிராமப்புற செவிலியர், அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வழங்கப்படும். 2 மாதத்திற்கொரு முறை 6 எண்ணம் கொண்ட 3 பைகள் வழங்கப்படும். ஆண்டுக்கு 18 பைகள் வழங்கப்படும். இந்த பேக்கேஜ் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கும் வழங்கப்படும். இரும்புச்சத்து மாத்திரை, குடல் புழு நீக்கல் மாத்திரை மற்றும் வளர் இளம்பெண் குறிப்பேடு ஆகியனவும் வழங்கப்படும்.

மேலும் இந்த கழிவு பொருட்கள் மூலம் உருவாகும் சுற்றுப்புற சூழல் தூய்மையை காக்கும் விழிப்புணர்வும், இதனை கருத்தில் கொண்டு குழி தோண்டி புதைக்கவும், எரிக்கவும் உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு மூலம் கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெறுவர். நாட்டிலேயே முதன்முதலாக கொண்டு வரப்படும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்குரூ. 44 கோடியே 21 லட்சம் செலவாகும். சுகாதாரம் மற்றும் தொற்று‌நோய் பரவும் விதம் குறைக்கப்படும். இவ்வாறு ‌தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்தில் நாப்கின் வழங்கும் மிஷின் இருக்கு: நாப்கின் வழங்கும் திட்டம் இந்தியாவில் நாகலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இங்குள்ள பள்ளிகளில் நாப்கின் வழங்கும் மிஷின்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இது இலவசம் கி‌டையாது. 3 ரூபாய் வசூலிக்கப்படும்.

நன்றி தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2