வாய்தா ராணியின் தடாலடி முடிவும்! பரிதாப வாசகர் வட்டமும்!
வாய்தா ராணியின்
தடாலடி முடிவும்! பரிதாப வாசகர் வட்டமும்!
எதையும் ஆராயாது தடாலடியாக எடுத்தேன்
கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பதை வழக்கமாக கொண்டவர் வாய்தா புகழ் நம்ம அம்மா
புரட்சித் தலைவி (அப்படி என்ன புரட்சி பண்னினாங்களொ?) மாண்புமிகு முதல்வர்
ஜெயலலிதா அவர்கள். அம்மாவால ரொம்ப நாள் சும்மா இருக்க முடியுமா? என்ன பண்ணலாம்னு
கை நமநமத்துக் கிடக்கவே தடாலடியா ஒரு ஐடியா உதிச்சிருக்கு!
என்ன வழக்கமா கலைஞர் கொண்டு வந்த திட்டத்தை
இல்ல கட்டிடத்தை மாத்த போறாங்க அப்படின்னு பொது ஜனங்க நீங்க சொல்றது கேக்குது! அதே
அதே தான்! அண்ணா நூற்றாண்டு நூலகம் இருக்கற கோட்டுர் புரம் கட்டிடத்தை குழந்தைகள்
நல மருத்துவமனையா சகல வசதிகளோடு மாத்தப் போறாங்களாம்!
இந்த நூலகத்த டி.பி.ஐ வளாகத்துக்கு
மாத்தறாங்களாம்! ஏம்மா இந்த வேண்டாத வேளை! ஏதோ கலைஞர் செஞ்ச உருப்படியான
திட்டங்கள்ல ஒண்ணி இந்த நூலகம் இங்கு கிடைக்காத நூல்களே இல்லை எனும் அளவுக்கு
எல்லா வகையான நூல்களும் இருக்கு விஸ்தாரமாக அனைவருக்கும் தனித்தனியாக நூலகம் என
எட்டரை ஏக்கர் அளவு விஸ்தீரணம் கொண்ட இதை டி.பி.ஐ வளாகத்துல இதை விட வசதியாக
அமைத்து விட முடியுமா?
ஏற்கனவே பல கோடி செலவில் கட்டப்பட்ட சட்டமன்றத்தை
மருத்துவமணையாக மாற்றுகிறேன் என்று பழைய கொட்டிலுக்கே ஆட்சிக் கட்டிலை
மாற்றிவிரயம் செய்துள்ளீர்கள்! நீங்கள் விளையாடுவது மக்களின் வரிப் பணத்தில் உங்க
வீட்டுப் பணத்தில் அல்ல! நீங்கள் எங்களுக்காக உழைப்பதற்கு கூட எங்களிடம் சம்பளம்
பெற்றுக் கொண்டுதான் வேலை செய்கிறீர்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!
உங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை காட்ட
எங்களை பகடை காயாக மாற்றாதீர்கள்! பல்வேறு தரப்பினரும் பயன் படுத்தும் நூலகம்
உங்கள் அரசியல் எதிரி திறந்து வைத்தார் என்பதற்காக மாற்றப்படுவது என்பது
துரதிருஷ்ட வசமானது. பல்லாயிரக் கணக்கான மாணவர்களும் வாசகர்களும் வந்து கூடும்
சரணாலயம் அது!
அதை ஓரிடத்திலிருந்து வேறொர் இடம் மாற்றுவது
என்பதுவேண்டாத வேலை! நீங்கள் தாராளமாய் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுங்கள்
வேண்டாம் என சொல்ல வில்லை! ஆனால் அதை நூலகத்தை மூடி கட்டுவேன் என்று
அடம்பிடிக்காமல் வேறு இடத்தில் கட்டுங்கள்!
அடிப் பொடிகளின் கருத்துக்களை கேட்டு
ஆயிரக்கணக்கான வாசகர்களின் வயிற்றெரிச்சலில் விழாதீர்கள்!அப்படி செய்யும்
பட்சத்தில் சமச்சீர் கல்வி விஷயத்தில் பட்ட மூக்குடைப்பு மீண்டும் ஏற்படும்.
பொதுவாகவே ஒரு பணிக்கென கட்டப்பட்ட கட்டிடத்தை
வேறோர் பணிக்காக மாற்றுகையில் கூடுதல் செலவினங்கள் ஏற்பட செய்யும். ஏன் இந்த
வேண்டாத செலவினங்கள்! டிபிஐ வளாகத்தில் அறிவுப் பூங்கா அமைப்பதால் பக்கத்தில்
கன்னிமாரா நூலகம் இருப்பதால் இங்கு அண்ணா நூலகம் அமைவது சிறப்பாகும் என்று ஆயிரம்
சப்பை கட்டு கட்டினாலும் அவையெல்லாம் ஏற்புடைய கருத்துக்களாய் இல்லை!
உங்கள் அமைச்சரவையில் வேண்டுமானால் தடாலடி
மாற்றங்கள் செய்து நீங்கள் விளையாடலாம்! மக்களோடு அப்படி முரண்பட்டால் விளைவுகள்
உங்களுக்குத் தெரியாதது அல்ல. எனவே உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்!நூலகம்
மேலும் விரிவாகட்டும்
தமிழக இளைஞர்களின் அறிவு விசாலாமாகட்டும்!
அண்ணா நூற்றாண்டு நூலகம் | |
நாடு | இந்தியா |
---|---|
வகை | பொது நூலகம் |
நிறுவப்பட்டது | செப்டம்பர் 15, 2010 |
அமைவிடம் | கோட்டூர்புரம், சென்னை, தமிழ் நாடு |
ஆள்கூறுகள் | |
சேகரிப்பு | |
சேகரிக்கப்பட்ட உருப்படிகள் | நூல்கள், ஆய்விதழ்கள், இதழ்கள், பிரெயில் படைப்புகள், கையெழுத்துப் படிகள் |
அளவு | 12 லட்சம் |
சேகரிப்புக்கான கட்டளைவிதி | உலகெங்கிலும் உள்ள முன்னணிப் பதிப்பங்களின் நூல்கள் |
வேறு தகவல்கள் | |
நெறியாளர் | ஜி. அறிவொளி, இயக்குனர் - பொது நூலகங்கள், தமிழ்நாடு |
அலுவலர் | 150 |
இணையதளம் | http://www.annacentenarylibrary.blogspot.com/ |
தொலைபேசி எண் | 04465515031 |
நன்றி விக்கிபீடியா!
People, students who are in tamilnadu should start doing something against this act...
ReplyDeletepolitical parties should not just stop their act just by giving statements against government, rather they should organize meeting, protest against government with the help of people.
MEDIA: Every media should start against the givernment act on this...
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .அனைவரின் எண்ணமும்
ReplyDeleteநிறைவேற வாழ்த்துக்கள் .