நான் ரசித்த சிரிப்புக்கள்! 6
நான் ரசித்த சிரிப்புக்கள்! 6
1.மாப்பிள்ளை தீபாவளிக்கு வரலியாமே ரயில் கிடைக்கலியா?
பெயில் கிடைக்கலை!
சற்குணம்
2 தலைவர் நில மோசடி பண்ணியிருக்காரா?
அப்படி குறிப்பிட்டுச் சொல்லமுடியாது பல மோசடி பண்ணியிருக்காரு!
தஞ்சை தாமு
3. டாக்டர் நான் என் பொண்ணுக்கு கல்யாணம் வைச்சிருக்கேன்,அதனால ஆபரேசனை அப்புறம் வைச்சிக்கலாம்!
அதெல்லாம் முடியாது நானும் என் பொண்ணுக்கு கல்யாணம் வைச்சிருக்கேன்!
வி.சாரதி டேச்சு
4 நான் இன்னிக்கு சந்தோஷமா இருக்கேன்னா அதுக்கு என் மனைவிதான் சார் காரணம்!
அந்த மகாலட்சுமியை பார்க்கணுமே!
நேத்து சாயந்திரம்தான் அவங்களோட அம்மா வீட்டுக்குப் போனாங்க!
சீத்தாதம்பி
5. தலைவர் சிறை அதிகாரிகிட்டே ஏதோ அனுமதி கேட்கிறாரே.. எதுக்காம்?
கட்சி பொதுக்குழுக் கூட்டத்தை உள்ளேயே வெச்சிக்கலாமானு கேட்கிறாரு!
தீ.அசோகன்
6.திடீர்னு சிரிக்கிறீங்களே ஏன் டாக்டர்?
இனிமே நீங்க பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குகெல்லாம் கவலைப்படவேண்டி இருக்காதேன்னு நினைச்சுப் பார்த்தேன்!
பிஜிபி இசக்கி
7. நம்ம தலைவருக்கு ஸ்டோன் ப்ராப்ளமாமே! எந்த ஆஸ்பத்திரியிலே சேர்த்திருக்கு?
அட நீ வேற அவரு போற இடமெல்லாம் கல்வீச்சாம்பா!
பிஜிபி.இசக்கி
8 மன்னா எதிரி நாட்டு மன்னர் நமது மகாராணியை கவர்ந்து சென்று விட்டார்!
பயபுள்ள தன் தலையில தானே மண் அள்ளிப் போட்டுக்கும் போது நாம என்ன பண்ணமுடியும்?
க.சரவணகுமார்
9 தலைவர் தான் பிறந்த ஊர் எதுங்கிறதை சொல்லவே மாட்டேங்கிறாரே!ஏன்?
பிறந்த ஊருக்கு கெட்ட பேர் வாங்கித் தர மாட்டாராம்!
வீ.விஷ்ணுகுமார்
10 ரெய்டு சமயத்தில நம்ம தலைவர இவ்வளவு கேவலப்படுத்தி இருக்க கூடாது!
என்ன நடந்துச்சு!
அவர் தோள்ல கிடந்த துண்டைக்கூட உதறி காட்ட சொல்லியிருக்காங்க!
அம்பை தேவா
11நம்ம தலைவர் பஸ்சில ஏறினதும் உடனே இறங்கிட்டாரே ஏன்?
பஸ் படியிலே கால் வச்சதும் சீக்கிரம் உள்ளே போங்கன்னு கண்டக்டர் அபசகுணமா சொல்லிட்டாராம்!
ஆர் லதா
12 தலைவரோட மூத்த சம்சாரம் ரொம்ப குண்டாமே!
அதுக்காக ரெய்ட் வந்தப்ப அசையா சொத்து லிஸ்ட்ல அவரை சிபிஐ சேர்க்கறதெல்லாம் ரொம்ப ஓவர்!
பிஜிபி இசக்கி
13 ஜெயிலுக்கு போயிட்டு வந்த தலைவர் வீட்டுல யார்யா காலிங்க் பெல் அடிச்சது?
ஏன் என்ன ஆச்சு!
பாரு சாப்பாட்டு நேரமுன்னு நெனச்சி தலைவர் தட்டை தூக்கிட்டு ஓடறார்!
பர்வீன் யூனூஸ்
14 இந்த சிபிஐ ரொம்ப மோசம்!
என்ன விஷயம்?
தலைவரோட மனைவி மளிகைக் கடையில வச்சிருந்த கணக்கைக் கூட முடக்கி வச்சிருக்காங்களே!
வைகை ஆறுமுகம்
15 பிளவுஸ் தைக்கிற டெய்லர்கிட்ட எதுக்கு இஞ்சி கொண்டு போறே?
ரெண்டு இஞ்சி பத்தலைன்னு சொன்னாரே!
தமிழ் நாயகி
நன்றி ஆனந்த விகடன், வாரமலர்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment