மும்பை டெஸ்ட் "திரில் டிரா * கோப்பை வென்றது இந்தியா

மும்பை: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மும்பை டெஸ்ட், "டிரா ஆனது. இருப்பினும், 2-0 என தொடரை வென்ற இந்திய அணி, கோப்பை கைப்பற்றியது.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளில் வென்ற இந்திய அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. முக்கியத்துவமில்லாத மூன்றாவது டெஸ்ட் மும்பையில் நடந்தது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 590, இந்தியா 482 ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில்  2 விக்கெட்டுக்கு 81 ரன்கள் எடுத்து, 189 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பிராத்வைட் (34), டேரன் பிராவோ (27) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஓஜா கலக்கல்:
இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. பிராத்வைட் (35) ஓஜாவின் சுழலில் சிக்கினார். டேரன் பிராவோ (48), சாமுவேல்ஸ் "டக் அவுட்டாகினர். கார்ல்டன் (1), பாவெல் (11), கேப்டன் சமி (10) விரைவில் நடையை கட்டினர். வெஸ்ட் இண்டீஸ் அணி, இரண்டாவது இன்னிங்சில் 134 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் அசத்திய பிரக்யான் ஓஜா 6, அஷ்வின் 4 விக்கெட் வீழத்தினர்.
சேவக் அரைசதம்:
இரண்டாவது இன்னிங்சில் 64 ஓவரில் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் காம்பிர் (12) ஏமாற்றினார். சேவக் 60 ரன்கள் எடுத்தார். சச்சின் (3), டிராவிட் (33), லட்சுமண் (31), தோனி (13) அடுத்தடுத்து அவுட்டாகினர். விராத் கோஹ்லி 63 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஓவரில் 3 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அஷ்வின் (14) ரன் அவுட்டாக, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 242 ரன்கள் மட்டும் எடுக்க, போட்டி "டிரா ஆனது.


நன்றி  தினமலர்

Comments

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?