மீன் ஏன் குட்டி போடுவதில்லை? பாப்பா மலர்!


மீன் ஏன் குட்டி போடுவதில்லை?

                 அறிவியல் கதை

ஜகன் வீட்டு மேஜை மீதிருந்த கண்ணாடி தொட்டிக்குள் மீன்கள் உலாவுவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். வண்ண வண்ண மீன்கள் நீரினுள் நீந்திக் கொண்டு இருந்தது. நேற்றுதான் அந்த மீன் தொட்டியை அவனது தந்தை வாங்கி வந்திருந்தார். அழகான மீன்களை வேடிக்கை பார்ப்பதில் அவனது பொழுது கொஞ்சம் கழிந்தது.
   என்ன ஜகன் மீன் தொட்டியை அப்படியே வச்ச கண்வைக்காமே அப்படியே முறைச்சி பார்த்துகிட்டிருக்கே? மீன்கள் என்ன சொல்லுது? என்றவாறு அவனருகே வந்தார் அவனது தந்தை
   அப்பா மீன் குஞ்சுகளை நல்லா உன்னிச்சு பாருங்கப்பா! என்றான். அவனது தந்தை சற்று கவனித்துவிட்டு என்னப்பா எதைச் சொல்றே? ஒன்னும் தெரியலையே? என்று கூறினார்.
    நல்லா பாருங்கப்பா எல்லா மீன் குஞ்சுகளும் அடிக்கடி வாயை திறந்திகிட்டும் மூடிகிட்டும் இருக்குது! ஏன் அப்படி செய்யுதுங்க? அதைத் தான் ரொம்ப நேரமா பார்த்துகிட்டு இருக்கேன் என்றான்.
   அதுவா அதுக்கான காரணத்தை நான் சொல்றேன். மீனோட தலையில இரண்டு பக்கமும் பிளவு பட்ட ஒரு பகுதி இருக்குதுபார்! அதுக்கு பேருதான் செவுள்! என்றான் ஜகன். ஆமா நீ சொன்னது கரெக்ட்! அந்த செவுள கொஞ்சம் நீக்கினா இரத்த சிவப்பான ஒரு பகுதி தெரியும். அப்பகுதியில் ஏராளமான இரத்த நாளங்கள் உள்ளது. வாயை திறக்கும் மீன் தண்ணீரை வாய் நிறைய எடுத்துக் கொள்கிறது. இந்த தண்ணீர் இரத்த நாளங்கள் உள்ள பகுதியில் பாயும். அங்க இரத்த நாளங்கள் தண்ணீரில் உள்ள ஆக்சிஜனை எடுத்துகிட்டு கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகின்றன. பிறகு அசுத்த நீர் செவுள் வழியா வெளியேறிடும். அதனாலதான் மீன் எந்நேரமும் வாயைத் திறந்து திறந்து மூடிக்கிட்டு இருக்கு! அதாவது செவுள் மூலம் சுவாசிக்கிறது என்றார் அவனது தந்தை.
   அப்பாடா! இதுக்கே இவ்வளவு அறிவியலா என வியந்தான் ஜகன். அப்பா அந்த மீன் எல்லா மீன் போல நீந்தாம மல்லாக்க நீந்துதே என்றான் ஜகன்.
     ஜகன் மீன்கள் செத்துப்போனாதான் அப்படி நீந்தும். தண்ணி கெட்டுப் போனாத் தான் இப்படி நடக்கும் தண்ணி கெட்டுப் போயிருக்கும்னு நினைக்கிறேன் சீக்கிரம் தண்ணியை மாத்தணும் வா உதவி செய் என்று இருவரும் இணைந்து நீரை மாற்றினர்.
   அவர் சொன்னபடி அந்த மீன் இறந்து விட்டிருந்தது. அப்பா எல்லா மீனுமே செத்துப் போனாத் தான் மல்லாக்க மிதக்குமா என்றான். இல்ல ஜகன் ‘கேட் பிஷ்’னு ஒருவகை மீன் மட்டும் உயிருடன் இருக்கும் போதே மல்லாக்க நீந்தும் என புதிய செய்தியை கூறினார் அவனது தந்தை.
   அப்பா அந்த குட்டி மீன் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தீங்களா? என்றான் ஜகன். ஆமா ஜகன் ரொம்ப அழகா இருக்கு! ஆனா இதை விட சிறிய மீனெல்லாம் இருக்கு! உலகத்திலேயே மிகச்சிறிய மீன் ‘கோபிஷ்’ இதன் நீளம் 1செண்டிமீட்டர்தான்!
   ஆச்சர்யமாயிருக்கே! என்ற ஜகன், அப்பா எனக்கொரு சந்தேகம் மீன் மட்டும் ஏன் குட்டி போடலை? ஆனா திமிங்கலம் குட்டி போடுகிறதே? என்றான்.
    இதைக்கேட்டு ஹாஹாவென சிரித்த அவனது தந்தையை அப்பா நான் ஏதாவது தப்பா கேட்டுட்டேனா என்றான் ஜகன். இல்லை ஜகன் நீ கேட்ட கேள்வி சிரிப்பை வரவழைச்சிடுச்சு! ஆனா நல்ல கேள்விதான் கேட்டுருக்கே!
  திமிங்கலம் மீன் மாதிரி இருந்தாலும் அது மீன் இனம் இல்லை!திமிங்கலம் மீன் மாத்ரி செவுள் மூலம் சுவாசிப்பதில்லை!அதுக்கு நுரையீரல் உள்ளது. மீன் தட்ப இரத்த பிராணி,எனவே முட்டை போட்டு குஞ்சு பொறிக்குது. ஆனா திமிங்கலம் வெப்ப இரத்த பிராணி அதனால குட்டிப்போட்டு பாலூட்டுது.
   திமிங்கலம் ஒரு பாலூட்டி! அவை ஒருகாலத்தில் நிலத்தில் வாழ்ந்த பாலூட்டிகளே! காலப்போக்கில் கடலை இருப்பிடமாக கொண்டு விட்டன என்றும் ஆராய்சியாளருங்க கருதறாங்க! திமிங்கலத்தோட துடுப்புகள் ஒருகாலத்தில் கால்களா இருந்ததுன்னு ஆராய்ச்சியாளருங்க கருதறாங்க அதனால திமிங்கலமும் மீனும் ஒண்ணுன்னு குழம்பிக்காதே என்றார் அவனது தந்தை.
 மீன்கள் பத்தி எவ்வளவோ சொல்லலாம்! ஆனா இப்ப படிக்கிற நேரம் போய் படி என்று அவனை அனுப்பினார்.
  மீன்களை பற்றிய விசித்திர நினைவுகளுடன் அவ்விடத்தை விட்டு அகன்றான் ஜகன்.
தகவல் உதவி} பொது அறிவுக் களஞ்சியம்
அறவுரை!

முதுமொழிக்காஞ்சி!

இயல்வது கரத்தலின் கொடுமை இல்லை
உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை
நசையின் பெரியதோர் நல்குரவு இல்லை
இசையின் பெரியதோர் எச்சம் இல்லை

விளக்கம்} கொடுக்க முடிவதை கொடுக்க வேண்டும் புகழ் அற்றவனாய் இருப்பதைவிட சாவதே மேல். ஆசையை விட பெரிய வறுமை இல்லை.புகழைத் தவிர எஞ்சி நிற்கும் பொருளில் பெரிது எதுவும் இல்லை!

உங்களுக்குத் தெரியுமா?
பிரிட்டனின் பழைய பெயர் ஆலிபியோன்

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2