ஒரே இன்னிங்க்சில் 5 விக்கெட்கள், அதிரடி சதம் - அஸ்வின் அசத்தல் சாதனை

மும்பை: அறிமுகமாகிய முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்களை வாரிய அஸ்வின், தனது 3வது போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தி, ஒரு சதமும் அடித்து அசத்தி விட்டார்.

சென்னையை சேர்ந்த அஸ்வின் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக ஆடினார். 9 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

அதன்பிறகு 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, ரன் வேகத்தை குறைத்தார். இந்த நிலையில் தற்போது மும்பையி்ல் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்க்சில், அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன்பின் களமிறங்கிய இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களின் சதம், அரைசதம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முக்கியமாக சச்சின் 100வது சதம் குறித்து ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. சச்சின் 100வது சதம் அடிக்க வேண்டும் என்று யாகங்கள், பூஜைகள் செய்த ரசிகர்களும் உண்டு. இந்த நிலையில் முதல் இன்னிங்க்சில் இந்தியா 7 விக்கெட்களை இழந்து நம்பிக்கையற்ற நிலையில் இருந்த போது களமிறங்கினார் அஸ்வின்.

தனது 3வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்ய வந்த அஸ்வின் என்ன ரன் அடிக்க போகிறார் என்று ரசிகர்கள் சாதாரணமாக பார்ததனர். ஆனால் அதிரடியில் இறங்கிய அஸ்வினின் ஆட்டத்தை பார்த்த போது, நடப்பது ஒருநாளா, டெஸ்ட் போட்டியா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

விக்கெட்கள் ஒருபுறம் விழுந்து கொண்டிருக்க, அஸ்வின் அதிரடியை மட்டும் கடைசி வரை நிறுத்தவே இல்லை. 2 சிக்ஸ், 15 பவுண்டரிகள் விளாசிய அஸ்வின் 117 பந்துகளில் 103 ரன்களை எடுத்தார். ஆனால் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். அவரை ரசிகர்கள் மற்றும் சகவீரர்கள் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர்.

3வது இந்தியர்

ஒரே இன்னிங்க்சில் 5 விக்கெட் விக்கெட் எடுத்த 3வது இந்தியர் அஸ்வின் ஆவார். இதற்கு முன்பு வினூ மங்கட், பாலி உம்ரிகர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். 1952ல் மங்கட்டும், 1962ம் ஆண்டு உம்ரிகரும் இந்த சாதனையைச் செய்தனர். அதன் பின்னர் ஒரு இந்திய வீரர் இந்த சாதனையைச்செய்வது இதுவே முதல் முறையாகும்.

சாதனைத் தமிழருக்கு வாழ்த்துக்கள்!

நன்றி தட்ஸ் தமிழ்

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2