தளிர் ஹைக்கூ கவிதைகள்! 2
தளிர் ஹைக்கூ கவிதைகள்!
துள்ளி துள்ளி வந்து
தள்ளி தள்ளி போகின்றன
அலைகள்!
குழந்தையோடு விளையாடுகையில்
குழந்தையாகிப் போகிறது
மனசு
உருகுது மனம்
மழலை மொழி!
அழகான வீடு
அடித்து நொறுக்கப்பட்டது
சிலந்திவலை!
இரு இதயங்கள்
இடம் மாறின
காதல்!
பேசும் மொழி மறந்து
காதல்!
கண்ணாமூச்சி
ஆடியது கதிரவன்
மேகம்!
பிறந்தவுடன்
விழுந்து இறந்தது
நீர்க்குமிழி!
தலையில் கொள்ளி
வைத்துக் கொண்டன
தெருவிளக்குகள்!
கழுவி விட்டது
பூமியை வானம்!
மழை!
சுகமான தடவலில்
சொக்கிவந்தது தூக்கம்!
காற்று!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
இன்று என் வலையில்
ReplyDeleteஅஜித் : THE REAL HERO