தளிர் ஹைக்கூ கவிதைகள்! 3

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

காலிப்பாத்திரத்தில்
சமைத்து பசி ஆற்றுகிறது!
குழந்தை!

நீந்த தெரியாது
நின்றது குதிரை!
குளத்தில் நிழல்!

துடைத்தெடுத்தது
இருட்டை!
ஒளி!

உள்ளம் குமுறுகையில்
வார்த்தைகளில்
வெடிக்கிறது கோபம்!

பறவைகளின் இசையில்
பயிர்களின் நாட்டியம்!
மழை வருகை!

ஒடுங்கும் முதுமையில்
ஓடும் குழந்தையாகிறது
மனசு!

குளத்தில்
கோலம் போட்டது
மழைத்துளி!

மஞ்சள் வெயில்!
மலர் சொறிந்தன
வண்ணத்துப்பூச்சிகள்!

முகத்தை திருப்பிக்கொண்டது
முழுநிலவு
அமாவாசை!

வேண்டுதல் இன்றி
மொட்டை போட்ட மரங்கள்!
இலையுதிர் காலம்!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2