என் இனிய பொன்நிலாவே! பகுதி 11

என் இனிய பொன்நிலாவே!
                   பகுதி 11
                              ‘ப்ரியம்வதா’

முன்கதை சுருக்கம்} மதுமிதாவை வேலைக்கு அமர்த்தும் அபிஷேக் அவளை விரும்பவும் செய்கிறான். அதே சமயம் அவனது முறைப்பெண் ஸ்வேதா அபிஷேக்கை விரும்புகிறாள். ஒருநாள் அபிஷேக்கிற்கு போன் செய்த மதுமிதா ஸ்வேதா எடுத்து பேசியதும் அதிர்ந்தாள்.

ஒருநிமிடம் என்ன பதில் சொல்வது என்றே தெரிய வில்லை மதுவிற்கு! தேளாக கொட்டிய ஸ்வேதாவின் வார்த்தைகள்! ஏன் தான் அபிஷேக்கிற்கு போன் பண்ணினோமோ என்று எண்ணத் தோன்றிவிட்டது. அதே சமயம் இவளுக்கு நாம் பயந்து விடுவதா? என்று அவளது தன்மானம் தட்டி எழுப்பியது.
   மிஸ் ஸ்வேதா! கொஞ்சம் நாகரீகமாக பேசுகீறீர்களா? நான் அபிஷேக்கின் பி.ஏ. என்றாள் மது.
   இருக்கட்டுமே அதற்காக அவரை உன் மடியிலேயே முடிந்து கொண்டு விடுவாயோ? நான் அவரை மணக்கப் போகிறவள் ஞாபகமிருக்கட்டும் உனக்கு எதற்கு நான் மரியாதை தர வேண்டும்? போகட்டும் இப்போது எதற்கு போன் செய்தாய் அதை முதலில் சொல் என்றாள் தெனாவட்டாக ஸ்வேதா.
    அதை உங்களிடம் சொல்ல முடியாது! போனை எம் டியிடம் தருகிறீர்களா? அவசியமாக அவரிடம் பேச வேண்டும்.என்றாள் மது.
    ஏன் என்னிடம் சொன்னால் என்ன? அப்படி என்ன ரகசியம்?
ரகசியமோ இல்லையோ? நான் பேசவேண்டியது அலுவலக விசயம் அதை உன்.. உங்களிடம் சொல்ல முடியாது தயவு செய்து அபியை.. ஐ மீன் எங்கள் எம்.டியிடம் போனைத் தருகிறீர்களா? என்றாள் மது.

என்னடி ரொம்பவே பிகு பண்ணிக் கொள்கிறாய்? நாளைக்கு நான் தான் உன் எம் டியாக போகிறவள் என்னிடம் நீ வேலை செய்ய வேண்டும் அதை நினைவில் வைத்துக் கொள்!
  இருக்கட்டும் மேடம் அதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்! இப்போது எம் டியிடம்...
   கொடுத்து விடுகிறேன் தாயே! என்று பல்லைக் கடித்தபடி அபி அபி உங்களுக்கு போன் என்று குரல் கொடுத்தாள் ஸ்வேதா.
  மறுமுனையில் மதுவிற்கு கோபமாக வந்தது. முக்கியமான வேலைகளை விட்டு விட்டு போனைக் கூட கையில் வைத்திராமல் அந்த ஸ்வேதாவிடம் கொடுத்துவிட்டு அங்கு என்ன கூத்தடித்து கொண்டு இருக்கிறானோ இவனை போய் ஆகா ஒகோ என்று எல்லோரும் புகழ்கின்றனரே? ச்சே  என்று நொந்து கொண்டாள் மது.
   ஒரு நிமிடம் இடைவேலைக்குப் பின் அபியின் குரல் அழைத்தது. என்ன மது? எதற்கு இப்போது கூப்பிடுகிறாய்? நான் தான் எல்லா வேலைகளையும் கேன்சல் செய்ய சொன்னேனே?
    ஆனால்?
 என்ன ஆனால் நான் மிக முக்கியமான வேலையில் இருக்கிறேன்! என்று சொல்லச் சொன்னேன் அல்லவா?
  ஆம் சொன்னீர்கள் ஆனால்?
  என்ன மீண்டும் ஆனால்  சொன்னால் புரிந்து கொள்ள மாட்டாயா? இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது.
  சார் இப்பொழுது மணி மூன்று!
 அதற்கென்ன?
நமது நிறுவனத்தின் மிக முக்கியமான வாடிக்கையாளர் சந்திப்பு இன்று மூன்று மணிக்கு அவர்களின் வாடிக்கை கிடைத்தால் கூடுதல் லாபம் கிடைக்குமென்று நீங்கள் தானே சொல்லிக் கொண்டிருந்தீர்கள்! அவர்கள் கிளம்பி வந்து விட்டார்கள் அதை ஞாபகப் படுத்ததான் கூப்பிட்டேன் ஆனால் நீங்கள் அதை விட முக்கியமான பணியில் இருப்பீர்கள் என்று தெரியாது. இப்போது தெரிந்து கொண்டேன் சாரி சார் நான் வைத்து விடுகிறேன் என்று போனை துண்டிக்குமுன் அவனது குரல் கேட்டது.
   அப்படி என்ன தெரிந்து கொண்டாய்? எதையுமே ஆராயமல் பேசக்கூடாது மது?
 எனக்கு எதற்கு தேவையில்லாத ஆராய்ச்சியெல்லாம்? நீங்கள் வரமுடியுமா இல்லை அவர்களை திருப்பி அனுப்பி விடவா?
 அப்படி திருப்பி அனுப்பினால் நம் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும் என்று நீ சொன்னதாக நினைவு!
 மது ஏதும் பதில் சொல்லாமல் போகவே ஓக்கே மது நீ  மிகவும் கோபமாக இருக்கிறாய் போலுள்ளது எனிவே அந்த வாடிக்கையாளர் சந்திப்பை என் சார்பாக நீயே முடித்துவிடு இப்போதுள்ள நிலை
யில்நான் அங்கு வர இயலாது என்றான் அபிஷேக்..
 நானா? நான் எப்படி?
எல்லாம் உன்னால் முடியும் மது! கண்டிப்பாக எனக்காக இதை நீ செய்து ஆக வேண்டும் என்றவன் போனை வைத்துவிட்டான்.
 என்ன இது? இவன் அங்கே ஸ்வேதாவோடு கூத்தடிக்க பேச்சு வார்த்தையில் நான் கலந்து கொள்ள வேண்டுமாமே அதுவும் கட்டளை இடுகிறானே என்று கொந்தளித்தாள் மதுமிதா.
அதற்குள் அந்த பெரிய வாடிக்கையாளர்கள் வந்து விடவே அவர்களை சந்திக்க விரைந்தாள். முதலாளி வராமல் இளம் பெண்ணான மதுவை பி.ஏவை அனுப்பி உள்ளானே என்று அவர்கள் முகம் போன போக்கில் இருந்து அறிந்து கொண்ட மது தொண்டையை செறுமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
   மன்னிக்க வேண்டும் சார் இந்த முக்கியமான ஒப்பந்த பேச்சில் தவிர்க்க முடியாத காரணத்தால் எங்கள் எம் டி கலந்து கொள்ள முடியவில்லை அவருக்கு பதிலாக என்னை தங்களுடன் பேச அனுப்பி உள்ளார் என்று அவள் சொல்லும் போதே சின்ன பெண்ணான உனக்கு இந்த தொழில் ஒப்பந்தம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டார் வந்திருந்தவர்களில் மூத்தவரான ஒருவர்.
 அப்படி நினைக்காதீர்கள்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் யானையைக் கூட சித்தெரும்பு சாய்த்து விடும்! நான் இந்த கம்பெனியின் எம் டி யினுடைய பர்செனல் அஸிஸ்டெண்ட்  என்பதாலும் எனக்கு இந்த தொழில் பற்றி ஓரளவு தெரியும். அதுவில்லாமல் என் மீது நம்பிக்கை வைக்காமலா என்னை உங்களுடன் பேச எங்கள் எம்டி அனுப்பி இருப்பார்? என்று திருப்பியும் கேட்க
  நீ உண்மையிலேயே கெட்டிக் கார பெண்தான்! சரி தொழில் பற்றி உண்னுடன் பேசுவதில் தவறேதும் இல்லைதான்! ஆனால் நீ எடுக்கும் முடிவு உன் தொழிலை பாதிப்பதாக அமைந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டி வருமே! உனக்கு பரவாயில்லையா? என்றார் ஒருவர்.
 அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் சார் என் முடிவு தொழிலை பாதிக்காவண்ணம் நான் பார்த்துக் கொள்வேன் என்றூ சொன்ன மதுமிதா. அவளுடைய திறமையான பேச்சால் அந்த வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொண்டாள்.
   அவர்களும் மிகவும் திருப்தியோடு கிளம்பி செல்லவும் தன் வீட்டிற்கு சென்றாள் மதுமிதா.
  அன்று இரவு அபிஷேக்கிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. போனை எடுத்ததுமே பொரிந்தான் அபிஷேக். மீட்டிங்க் விவரம் என்னாயிற்று ஏன் எனக்கு போன் பண்ணி சொல்ல வில்லை என்று அவன் ஆத்திரமாய் கேட்க
   ஓஒ! அதெல்லாம் கூட உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று ஏளனமாக கேட்டாள் மதுமிதா!
                        நிலவு வளரும்(11)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2