என் இனிய பொன்நிலாவே! பகுதி 12

என் இனிய பொன்நிலாவே!
                          ‘ப்ரியம்வதா’

பகுதி 12


முன்கதை சுருக்கம்} மதுமிதாவை விரும்புகிறான் அபிஷேக். அதே சமயம் அவனது உறவுப்பெண் ஸ்வேதா அபிஷேக்கை விரும்புகிறாள் அவள் மதுமிதாவை வம்புக்கு இழுக்கிறாள். அலுவலக முக்கிய மீட்டீங்கிற்கு வராமல் ஸ்வேதாவுடன் இருப்பதால் அபிஷேக் மீது கோபப்படுகிறாள் மதுமிதா.

   ஏன் அப்படி மறந்து போகும் அளவுக்கு எனக்கு என்ன நேர்ந்து விட்டது?
  அதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமோ? அதான் அந்த ஸ்வேதா...
நிறுத்து மது வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுவதால் எல்லாம் உண்மையாகி விடாது!
 அப்படி எந்த பொய்யை நான் உண்மையாக்கி விட்டேனாம்?அதுதான் உங்களுக்கு போன் செய்தால் அவள் எடுத்து பேசுகிறாளே அப்புறமென்ன பொய் பேசி விட்டதாக கூறுகிறிர்கள்?
 அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்! என்பார்கள் கண்ணை மூடிக்கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்லிவிடலாம் ஆனால் அதெல்லாம் உண்மையாகிவிடாது! நான் சொல்லும் எதையும் நீ நம்பப் போவதில்லை! அந்த விசயத்தை விடு கம்பெனி விசயத்திற்கு வருவோம்!
   ஆக நீங்களாகவே என்னை பற்றி ஒரு முடிவெடுத்துவிட்டீர்கள்?
மது ப்ளீஸ் அந்த விசயத்தை விடு என்கிறேன்!
ஏன் ஏன் விடவேண்டும்? கம்பெனியின் ஞாபகமே இப்போது அல்லவா உங்களுக்கு வந்துள்ளது?
  அதான் சொல்கிறேனே! நான் அப்போது வேறு முக்கியமான?

அந்த ஸ்வேதாவுடன் கொஞ்சி குலாவிக் கொண்டிருப்பதுதான் உங்களுக்கு முக்கியமான வேலையா?
 யார் சொன்னது நான் அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்ததாக?
சொல்ல வேறு வேண்டுமா? அதுதான் அவளே போன் எடுத்து என்னை வறுத்து எடுத்து விட்டாளே?
அவள் என் போனை எடுத்து பதில் பேசினால் அவளோடு கொஞ்சியதாக அர்த்தம் செய்து கொள்வதா?உனக்கு வரவர என் மேல் நம்பிக்கை குறைந்து போகிறது என் று நினைக்கிறேன்!
 நான் யார் உங்கள் மீது நம்பிக்கை வைக்க?
பார்த்தாயா மீண்டும் கோபித்துக் கொள்கிறாய்?சரி விசயத்திற்கு வருவோம் அந்த டீலை வெற்றிகரமாக முடித்தாய் தானே?
 அதில் என்ன சந்தேகம்? உங்கள் வேலையாக இருந்தாலும் வாங்கும் சம்பளத்திற்கு குறை வைக்காமல் இழுத்துப் போட்டு செய்து விட்டேன்! அந்த கம்பெனியின் டீல் இனி நம்மோடுதான்!
 நீ இருக்கும் தைரியத்தில் தான் நான் நேற்று கம்பெனியை விட்டு வெளியே சென்றேன்! ஓகே நல்ல முறையில் டீலை முடித்ததற்கு எனது நன்றிகள்! நாளை சந்திப்போமா?
 அதெல்லாம் சரி அப்படி என்ன முக்கிய பணியாக வெளியே சென்றீர்கள்?
 அதுதான் நீயே சொல்லிவிட்டாயே? அந்த ஸ்வேதாவுடன் கொஞ்சி விளையாடியதாக?
மறுமுனையில் மதுவிற்கு கோபமாக வந்தது! அப்படியானால் நான் சொன்னதில் தவறில்லை என்று ஒப்புக் கொள்கிறீர்களா? என்று பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டாள்.
  இல்லை தாயே! இல்லை! உன்னிடம் மறைக்கும் அளவுக்கு ஒன்றுமில்லை! அம்மாவிற்கு திடீரென உடல் நிலை மோசமாகிவிட்டது அதனால் ஆஸ்பிடல் சென்று இருந்ததால்தான் வரமுடியவில்லை! தீர்ந்ததா உன் சந்தேகம் என்றான் அபிஷேக்!
   அம்மாவுக்கு முடியவில்லை என்று முன்பே சொல்லி இருக்கலாம் இல்லையா?நான் எதோ அவசரப்பட்டு!

இதைத்தான் பெண் புத்தி பின் புத்தி என்பார்கள்! என் அம்மாவிற்கு அடிக்கடி இது மாதிர் நிகழ்வது உண்டு! எனக்கு அது பழகிப் போன ஒன்றுதான்! அதனால் உடனே வந்துவிடலாம் என்று தான் போனேன்! ஆனால்  இந்த முறை ரொம்பவும் அதிகமாகிவிட்டது.
  அம்மாவிற்கு என்ன உடம்பு நான் பார்த்தபோது ஆரோக்கியமாகத் தானே இருந்தார்கள்!
  பார்த்தாயா! நான் சொல்வதில் உனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை! பார்ப்பதற்கு ஆரோக்கியமாகத் தோன்றும் என் அன்னை ஓர் நீரிழிவு நோயாளி! மேலும் இந்த முறை அவர்களுக்கு இருதயமும் சிறிது பாதித்து விட்டது!.
   என்ன? பயப்படும்படி ஏதும் இல்லையே! இப்போது வீட்டிற்கு அழைத்து வந்து விட்டீர்களா?
   எப்படி முடியும் இங்கே கவனிப்பதற்கு யார் இருக்கிறார்கள்?
ஏன் அந்த ஸ்வேதா!
உஸ் பார்த்தாயா? கொக்கிற்கு மீன் ஒன்றே மதி என்பது போல அவளையே சுற்றி வருகிறாயே!
 இல்லை! அவள் பார்த்துக் கொள்ள மாட்டாளா? என்று கேட்டேன்!
அதைத்தான் நானும் கேட்கிறேன் அவள் ஏன் என் தாயைப் பார்த்துக் கொள்ள வேண்டும்?
  அவள் உங்களை மணந்துகொள்ள போவதாக அல்லவா கேள்விப் பட்டேன்! அதனால் வருங்கால மருமகள் மாமியாருக்கு பணிவிடை செய்யமாட்டாளா என்று கேட்டேன்!
  இது அவளாக பரப்பி வரும் கட்டுக்கதை என்று பலமுறை சொல்லியாகிவிட்டது ஆனாலும் நீ நம்பவில்லை!
  எப்படி நம்ப முடியும்? எனக்குத் தெரியாத விசயம் அவளுக்குத் தெரிந்து மருத்துவமனைக்கு வந்து அதிகாரமாய் போன் எடுத்து பேசுகிறாளே!
  அது.. அவள் என்னையே சுற்றி வருகிறாள்! நான் மருத்துவமணையில் இருப்பதை தெரிந்து கொண்டு வந்துவிட்டாள் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் அதை சொல்லவும்தான் கூப்பிட்டேன்.
 என்ன முடிவு கட்டப் போகிறீர்கள்!
உன்னை பெண் கேட்டு உன் வீட்டிற்கு வரப் போகிறேன்!

மறுமுனையில் மகிழ்வதா அழுவதா எனத் தெரியாமல் அதிர்ந்தாள் மதுமிதா!
                        நிலவு வளரும்(12)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்துபிரபல படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2