என் இனிய பொன் நிலாவே! பகுதி 3
என் இனிய பொன் நிலாவே!
பகுதி 3
“ப்ரியம்வதா”
முன்கதை சுருக்கம்| மதுமிதா இக்கால நவநாகரீக இளைஞி. ஒரு இண்டர்வியு அட்டென் பண்ண செல்லும் போது மாடிப்படிகளில் ஒரு இளைஞனுடன் மோதி அவனுடன் வாய்ச் சண்டை வலுக்கிறது. அவன் அவளை தேவதை என்று வர்ணிக்கிறான்.
இண்டர்வியு ஹாலுக்குள் நுழைந்த மதுமிதாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே ஒருவரும் இல்லை. அங்கிருந்த பியூனிடம் சார் இங்கே இண்டர்வியு வேலை! என்று இழுக்க .. அவனோ ஓ நீ வேலை தேடி வர லட்சணமா இது? இண்டர்வியு கேன்சல் பண்ணிட்டாங்க! அது கூடத் தெரியாம இவ்வளவு நேரம் கழிச்சு வந்து நிற்கிறையே நல்ல பொண்ணும்மா நீ என்றான் அந்த வயதான பியூன்.
அவனிடம் தன் சொந்த சோக கதையையா சொல்ல முடியும் ஏமாற்றத்துடன் கிளம்ப எத்தனித்தாள். அப்போது எம். டி அறையின் கதவை திறந்தபடிவந்தாள் ஒரு பெண் இங்க மிஸ் மதுமிதா யாரு என்று என்னமோ நிறைய பெண்கள் அங்கே இருப்பது போல கேட்டு வந்தாள்
நான் தான் மதுமிதா என்று மது சொல்ல உங்களை எம்.டி கூப்பிடறார் என்று உள்ளே அழைத்தாள் அந்தப் பெண். உள்ளே நுழைந்த மதுமிதா ஏறக்குறைய அதிர்ச்சி அடைந்தாள்.
அங்கே அவளுடன் சண்டை போட்ட அந்த இளைஞன் எம்.டி சீட்டில் அமர்ந்திருந்தான். மதுமிதா உடனே வெளியே செல்ல எத்தனித்தாள். ஒரு நிமிஷம் மிஸ் மதுமிதா! மது நிற்கவும், ஏன் மது அவ்வளவு வேகமா வெளியே போகறீங்க? நான் என்ன அவ்வளவு அசிங்கமாகவா இருக்கேன்?
சார் நான் இங்க இண்டர்வியுவிற்கு வந்தேன். உங்க அழகை ஆராய்ச்சி பண்ண வரலை! ஓக்கே அப்ப இண்டர்வியு அட்டென் பண்ணுங்க!
ஆனா இண்டர்வியு கேன்சல் பண்ண்டிட்டதா சொன்னாங்களே?
ஆமா! வேலைக்கு தேவையான கேண்டிடேட்டை செலக்ட் பண்ணியாச்சு! அதனால இண்டர்வியு கேன்சல் பண்ணிட்டோம்.
ஓ! அப்ப நான் எதுக்கு?
விசயத்தை சொல்லவே விட மாட்டேங்கறீங்களே! நீங்க தான் அந்த கேண்டிடேட் உங்களை இந்த கம்பெனியின் கம்ப்யூட்டர் புரொகிராமரா செலக்ட் பண்ணிட்டேன் நாளைக்கே நீங்க வேளையில ஜாய்ன் பண்ணலாம். மாதம் 25ஆயிரம் சம்பளம் மத்தபடி கம்பெனி ரூல்ஸ் படி எல்லா சலுகைகளும் உண்டு. சந்தோஷமா இருக்கா? என்றான் அபிஷேக்.
இல்லை என்றாள் மது. ஏன்? புருவத்தை உயர்த்தி கேட்டான் அவன்.
இது நியாயமா முறைப்படி கிடைச்சிருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனா இது பின் வாசல் வழியா வர வேலை! இந்த வேலை எனக்கு வேண்டாம்.
மிஸ் மது இது எப்படி பின் வாசல் வழியா வந்த வேலை?
பல பேர் கலந்துகிட்ட இண்டர்வியுவ கேன்சல் பண்ணி எனக்கு வேலை தரது முறையா?
பல பேர் அப்படி எத்தனை பேர் கலந்துகிட்டாங்க உங்களுக்குத் தெரியுமா? நீ நீ ஒருத்தி தான் இந்த வேலைக்கு இண்டர்வியுவிற்கு வந்ததே! உன் ஒருத்திக்குத் தான் கால் லெட்டர் அனுப்பியதே!
மது ஆச்சர்யமாக நோக்க உன் அப்ளிகேசன் பார்த்தப்பவே என்னமோ தெரியலை உன்னை எனக்கு பிடித்து போயிடுச்சு அதனால அன்னிக்கே உன்னை அப்பாயிண்ட் மெண்ட் பண்ண முடிவெடுத்துட்டேன் என்றான் கண்களில் காதலுடன் அபிஷேக்.
நீங்க முடிவெடுத்திருக்கலாம் சார்! ஆனா எனக்கு விருப்பம் இல்லை!
அதுதான் ஏன் என்கிறேன்? என்னுடன் வேலை செய்வதற்கு தயக்கமா? நான் என்ன அவ்வளவு காட்டு மிராண்டியா? உன்னை கடித்து குதறிவிடுவேனோ என்ற பயமெல்லாம் தேவையற்றது.
நான் ஒன்றும் அப்படி சொல்ல வில்லையே?
அப்படியானால் வேலையை ஏற்றுக் கொள்! உன் குடும்ப சூழ்நிலைக்கு இந்த வருமானம் பெருமளவுக்கு உதவியாக இருக்கும். என்னை பற்றி நீ அச்சப் பட வேண்டாம். நான் விருப்பமில்லா பெண்களை வதைக்கும் அளவிற்கு கொடூரன் அல்ல என்றான் அபிஷேக்.
மதுமிதாவிற்கு அவன் சொல்வதும் சரியெனப்பட்டது. இன்று வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாகி வரும் வேலையில் சுளையாக 25ஆயிரம் சம்பளத்தில் வரும் வேலையை வேணாம் என உதறுவதா? நம் விருப்பம் இல்லாமல் இவன் நம்மிடம் வழிய முடியுமா? இதையெல்லாம் ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நல்ல வேலையை ஏன் கைவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கையில் அவன் குறுக்கிட்டான்.
யோசனை எல்லாம் பலமாக இருக்கிறதே! எப்படி வேலையை ஏற்றுக் கொள்வதாக உத்தேசமா அல்லது..
மது உடனே மறுதலிப்பாக தலையசைத்தாள் இல்லை நான் வேலையில ஜாய்ன் பண்றேன். என்றாள்.
ரொம்ப சந்தோஷம்! மது நீ நாளைக்கே வந்து ஜாய்ன் பண்ணிக்கலாம் என்றான்.
என்ன இது இவன் கீழ் வேலை செய்ய சம்மதித்து விட்டால் உடனே மரியாதை குறைகிறது மதுவாமே? மனதிற்குள் பொறுமினாள் மதுமிதா.
அவள் மனதை படித்தவன் போல நான் உன்னை சாரி உங்களை ஒருமையில் அழைப்பது உன.உங்களுக்கு பிடிக்கவில்லை போலுள்ளது ஆனாலும் நீ என்னை விட வயதில் சிறியவள் தானே! நீங்க வாங்க போங்க என்று அழைப்பது எனக்கு சற்று வித்தியாசமாக பட்டது.
உனக்கு பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்றான்.
சார் நீங்கள் காசு கொடுக்கும் முதலாளி நீங்கள் பெயர் சொல்லி அழைப்பதில் தவறொன்றுமில்லை! இப்போது நான் கிளம்பலாமா சார்!
என்றாள் மதுமிதா.
ஒக்கே மது நாளை சந்திப்போம்! என்று விடை கொடுத்தான் அபிஷேக்.
அன்று மாலை வேலையில் அந்த மியூசிக்கல் ஷாப்பில் நுழைந்த மது ஏ. ஆர் ரஹ்மானின் ஜெய்ஹோ இருக்கா? என்று கேட்டாள்.
இருக்கு மேடம்! என்று சிப்பந்தி அந்த சிடியை எடுக்க உள்ளே சென்ற போது வாட் எ சர்ப்ரைஸ் நீங்க மியூசிக் ஷாப்பிற்கெல்லாம் வருவீங்களா? என்று கேட்டபடி அவளை நோக்கி வந்தான் அபிஷேக்.
இதென்ன கேள்வி என்று அவனை விசித்திரமாக பார்த்தாள் மதுமிதா.
நிலவு வளரும்(3)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment