மறந்து விடு!
மறந்து விடு!
மறந்துவிடு
என்றாள் அவள்!
எதை?
எலியட்ஸ் பீச்சில்
எட்டுமணிவரை
பேசிய நாட்களையா?
மகாபலிபுரத்தில்
மறக்காமலிருக்க
புகைப்படம்
எடுத்துக் கொண்டதையா?
நெஞ்சிலே
நீங்காதிருக்க
அவள் பெயரை
நெஞ்சிலே பச்சை
குத்திக் கொண்டதையா?
காலேஜ் கட்டடித்து
காதல் படங்களாய்
பார்த்து மகிழ்ந்ததையா?
அடுத்தமாதம் கல்யாணம்
அவசியம் வரவும்
என்று அழைத்ததையா?
தோற்றுப்பார்!
தோற்றுப் பார் நண்பா!
துணிவு தானே வரும்!
வெற்றிகள் மட்டும்
வாழ்க்கையல்ல!
தோல்விகள் நமக்கு
கிடைத்த படிப்பினைகள்!
தோற்றுப் பார் நண்பா!
துடிப்பு தானே எழும்பும்!
வெல்ல வேண்டும் என்ற
வேட்கை வேகப் படும்!
வெற்றிகளின் தொடக்கம்
தோல்விகளில் தான்
ஆரம்பமாகிறது!
தோற்றுப் பார் நண்பா!
ஆற்றல் தானாய் அதிகரிக்கும்!
தோற்றவனுக்குத் தானே
வெற்றியின் அருமை புரியும்!
வெற்றியின் வாசலை
மிதிக்க தோல்வி படிக்கட்டுக்களை
ஏறித்தான் ஆகவேண்டும்!
தோற்றுப் பார் நண்பா!
தன்னம்பிக்கை தானாய் உயரும்!
நேற்று தோற்றதற்கு
வருந்தாதே! இன்று ஜெயிப்பதற்கு
வழிதேடு! வாழ்க்கை உனக்கு வசந்தமாகும்!
தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
!
ReplyDeleteதோற்றுப் பார் நண்பா!
தன்னம்பிக்கை தானாய் உயரும்!
நேற்று தோற்றதற்கு
வருந்தாதே! இன்று ஜெயிப்பதற்கு
வழிதேடு! வாழ்க்கை உனக்கு வசந்தமாகும்
அருமையனவரிகள் வாழ்த்துக்கள் சகோ..........