நான் ரசித்த சிரிப்புகள் 3


நான் ரசித்த சிரிப்புகள் 3

1.ரீ சார்ஜ் பண்ணினதுலேர்ந்து எப்போ பேசினாலும் போன்ல நாய் குரைக்கிற சவுண்ட் கேட்டுகிட்டே இருக்கு!
ஃபுல்Dog டைம் சொல்லு!
     
2.யோவ் என்ன தைரியம் இருந்தா என் வீட்டுமேலயே ஏறிநின்னு என்னைப் பார்த்து ஓடுகாலின்னு சொல்வே?
ஐயோ அம்மா கூரை மாத்த நீங்க வாங்கி தந்த ஓடு எல்லாம் தீர்ந்துடுச்சுன்றதைதான் அப்படிச் சொன்னேன்.

3.என்னதான் கதைக்கு அவசியம்னாலும் அவ்வளவு கேவலமா நடிக்க முடியாதுன்னு டைரக்டர்கிட்டே சண்டை போட்டீங்களே ஏன்..ஆடையில்லாம நடிக்கசொல்றாரா?
 ஊஹூம் மேக்கப் இல்லாம நடிக்கணுமாம்.
                    -ஜெயாபிரியன்.

4.இந்த படத்துல செகண்ட் ஹீரோன்னு சொன்னீங்களே படத்துல பார்க்கவே முடியலையே?
ஒரே செகண்ட்தானே வரேன்.
       கு வின்செண்ட்
5.இவர் ரொம்ப வெகுளின்னு எப்படிச் சொல்றே?
மெடிக்கல் ஷாப்பில போயி ஆரண்யகாண்டம் ஒருபாக்கெட் கொடுங்கன்னு கேட்டாரே!
            குட்டி மு.வெங்கடேசன்.
நன்றி  குமுதம்.

6.நம் மன்னரை சுத்த அல்பங்கறியே ஏன்?
சுயம்வரத்துக்கு நேரில் வந்த இளவரசர்களிடமெல்லாம் பார்க்கிங்க் கட்டணம் வசூலிச்சிட்டாரே!
       பி.ஜி.பி இசக்கி
7.தலைவர் சிறை போறது உறுதி ஆயிடுச்சுன்னு எப்படி சொல்றே?
நியுமராலஜிப்படி ராசியான கைதி எண் வாங்கற முயற்சியில இருக்கார்!
              கே சஞ்சீவபாரதி
8.தலைவரோட நடைபயணம் தோல்வியாமே..ஏன்?
ஆமா கொஞ்சம் கூட கொலஸ்ட்ரால் குறையலைன்னு டாக்டரேசொல்லிட்டாரு!
                  அம்பை தேவா
9.தலைவர் எதுக்காக அந்த தொண்டனை அடிக்கிறார்?
முதன் முதலா ஜெயிலுக்கு போறீங்களே ஸ்வீட் கிடையாதான்னு கேட்டானாம்!
                 பெ.பாண்டியன்.
10.அவங்களோடது பணக்கார குடும்பம்!
எப்படி?
வேலைக்கு போகாத தன் பையனை தண்டச்சோறுன்னு திட்டாம தண்ட பீட்ஸான்னு திட்டறாங்க பாருங்க!
                 பா.ஜெயக்குமார்.
11.தலைவர் வீட்டுல ரெய்டு நடந்ததுக்கு அவர் மனைவியுடன் ஏன் சண்டை போட்டார்?
அவருக்குத் தெரியாமல் அவங்க வேற இரண்டு கோடி ரூபாயை வீட்டுல பதுக்கி வைச்சிருந்தாங்களாம்!
                 என்.சி தர்மலிங்கம்.
12என்ன டாக்டர் அந்த நோயாளி பணம் கட்டலையா? ஆபரேசனை நிறுத்திட்டீங்க?
   அதெல்லாம் ஒண்ணுமில்லை பாவி ஒரேயொரு கிட்னியோடத்தான் வந்து படுத்திருக்கான்.
                 ப.ராமகிருஷ்ணன்.
13.மனைவியோடு சேர்ந்து வாழனும்னு நினைக்கிரேன் முடியலை!
     ஏன்?
   யாரோட மனைவியும் சம்மதிக்க மாட்டேங்கறாங்களே!
             வைகை ஆறுமுகம்
நன்றி தினமலர்-வாரமலர்.
14. காலேஜ் டாய்லெட்ல பிர்ன்சிபாலை பத்தி தப்பு தப்பா நீதான் எழுதனியா?
   சாரிசார் எனக்கு தமிழ் சரியா வராது! இனி கரெக்டா எழுதிடறேன்.
                   ஜெயாபிரியன்.
15.பப்ளிக் டாய்லெட் பக்கம் போகவே பயமா இருக்கு!
    ஏன்?
முக்கிய இடங்கள்ல குண்டு வைக்கிறாங்களாமே!
                      -ஜெயாபிரியன்
நன்றி குமுதம்.

டிஸ்கி!  சொந்தமா எழுத நேரமும் இல்லை மூடும் இல்லை! அதான் கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைச்ச கதையாய் இந்த பகிர்வு. படைப்பாளிகளுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்!
 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்துபிரபலபடுத்தலாமே!

Comments

  1. ரசிக்கும் படியாக நகைச்சுவை துணுக்குகள்..

    நல்லா தேர்ந்தெடுத்து போட்டிருக்கீங்க...

    ReplyDelete
  2. நல்ல சிரிப்புகளைத் தேர்ந்தெடுத்து ஒரே இடத்தில அவற்றை இடம் பெறச்செய்துகள்ள உங்கள் மயற்சிக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2