சும்மா இருக்காதே தோழா!
சும்மா இருக்காதே தோழா!
சும்மா இருக்காதே தோழா!
உலகம் உன்னை புறக்கணிக்கும்!
இங்கு போட்டிகள் அதிகம்!
வாய்ப்புகள் குறைவு!
சோம்பலும் தூக்கமும்
உழைப்பும் உயர்வும்
மாறுபட்ட இரட்டைப் பிள்ளைகள்!
இதில் எது உனதென்று
உறுதி செய்!
இங்கு நாட்களும் நேரமும்
உன்னுடையதில்லை!
காத்துக் கிடப்பதற்கு!
நீ சோம்பிக் கிடந்தால்
அவை மற்றொருவனுக்கு சாதகமாகிப்போகும்!
நீ சிந்தும் ஒரு துளி வியர்வையும்
விரைவில் உன்னை உயரத்தில் ஏற்றும்
சும்மா கிடக்காதே தோழா!
உலகில் உன்னை நிலைநிறுத்து!
உலகின் பார்வையை உன் பக்கம் திருப்பு!
உலகம் உன்னை கவனிக்கும் வரை
உன் வாழ்வு கசக்கும்தான்
உலகம் உன்னை கவனித்தால் இனி
உன் வாழ்க்கை வசந்தம்தான்!
சும்மா இருக்காதே தோழா!
சோம்பலை துரத்து!
உழைப்பை முன்னிறுத்து!
நாளை நாளை என தள்ளினால்
நீயும் நாளை தள்ளிவைக்கப் படுவாய்!
நிழல்களையும் நிஜமாக்கு!
நிந்தனைகளைத் தவிர்த்து நீடு துயில்
எழு! உலகம் உன் வசமாகும் வரை
உழை! உயர்வு உன் வாசல் படி தட்டும்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
Comments
Post a Comment