நான் ரசித்த சிரிப்புகள்! 2
“அவர் ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டு போலிஸ்ல மாட்டிகிட்டார்”
எப்படி?
தற்கொலை பண்ணிக்கலாமுன்னு கிணத்துல குதிச்சார்.. அதுல ஒரு அடி ஆழம் கூட தண்ணி இல்லை!
எம் ஆர் மூர்த்தி
தலைவரே உங்க சட்டைப் பையில இருந்த ஒரு ரூபாய் நாணயத்தை உங்க பையன் முழுங்கிட்டான்.
பரவாயில்லை அவன் கட்சி பணத்தைதான் சாப்பிட்டு இருக்கான்!
-வி சாரதி டேச்சு
ஓட்டு கேக்க வந்த தலைவரு பூட்டியிருக்கற வீட்டு பக்கம் போறாரே ஏன்?
ஐயையோ அவரை தடுத்து நிறுத்துங்க! பழக்க தோஷத்தில பூட்டை உடைச்சிடப் போறாரு!
- தஞ்சை தாமு
நம்ம கட்சிக்கு யார் வந்தாலும் தலைவர் கைநீட்டி வறவேற்க தயாரா இருக்காராம்!
நான் தான் சொன்னேனே கை நீட்டாம அவர் எதையும் செய்யமாட்டாருன்னு!
- தஞ்சை தாமு
அந்த ஆளு கஞ்சனா... எப்படி?
டிப்ஸ் கொடுக்க சொன்னா தோசையின் ஓரத்த பிச்சுக் கொடுத்திட்டான்!
- சாயம் வெ. ராஜாராமன்
எங்க தலைவர் எதற்காகவும் யாரையும் எதிர் பார்க்க மாட்டார்!
அதுக்காக கூட்டத்தில அவர் பேசுன பேச்சுக்கு அவரே கை தட்டிகிறது கொஞ்சம் கூட நல்லா இல்லை!
-கே .வெங்கட்
நானும் ஒரு பத்திரிக்கையாளன் தான் என்று தலைவர் திடீர்னு ஒரு குண்டை தூக்கிப் போடுறாரே ஏன்?
அதை ஏன் கேட்கிற..?பழைய பத்திரிக்கையை வாங்கி விற்கிறாருல்ல அதைத் தான் அப்படி சொல்லிக்கிறாரு
-மலர் சூர்யா
போலிஸ்காரரை கல்யாணம் பண்ணிகிட்டது நல்லதா போச்சு!
எப்படி சொல்றே?
கோபத்தில அடிக்க கை நீட்டும் போதெல்லாம் பணம் கொடுத்திடுவேன் உடனே கூல் ஆயிடுவாரு!
மன்னன், ஈரோடு
அங்கிள் எங்க டிவி ரிப்பேர் அதனால அப்பா உங்களைப் பார்த்துகிட்டே பொழுது போக்கச் சொன்னார்!
அப்படியா குழந்தைகளே! எந்த சேனல் பார்ப்பீங்க?
“அனிமல் பிளானட்”
ந. மோகன்
அவரு ஒரே நேரத்தில பத்து பேர தூக்கிகிட்டு மாடி மேல போவாரு!”
அவ்ளோ பலசாலியா?
இல்லீங்க லிப்ட் ஆபரேட்டர்!
ராஜேந்திரன்
அரசர் கோபமா இருக்கிறாராமே ஏன்?
அரசியார் அவருடைய வாளையும் கேடயத்தையும் பழைய இரும்புக்காரனிடம் போட்டுவிட்டாராம்!
புதுப்பட்டி ஜி.ஆர் விஜய்
ஆபிசை வீடு மாதிரி நினைச்சுக்கச் சொன்னேன் அதுக்காக இப்படி அடுத்தவங்களுக்கெல்லாம் வாடகைக்கு விடச் சொன்னேனா?
ஜே மாணிக்க வாசகம்
நன்றி குமுதம்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
:))
ReplyDelete