சீட் எனக்குத்தான்! -பாப்பாமலர்



சீட் எனக்குத்தான்!



சென்னை செல்லும் பேருந்தில் ஏறினர் மூர்த்தியும் ரமேஷும் அவர்களுடைய தந்தையும்.
பஸ்சில் ஏறியவுடனேயே அந்த இரு சிறுவர்களுக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது.

  ‘டேய் மூர்த்தி எனக்குத்தான் ஜன்னலோர சீட்’ என்று ரமேஷ் சொல்ல 
‘ஆசையை பாரு! நான் தான் ஜன்னலோரம் உட்காருவேன் என்று மூர்த்தி அடம்பிடித்தான்.அதற்குள் ரமேஷ் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தபடி
‘இப்ப என்னடா பண்ணுவே என்று கேட்டான். அவனை பிடித்து இழுத்தான் மூர்த்தி .
‘டேய் மரியாதையா எனக்கு இடத்தை விட்டு கொடுத்திடு இல்ல உதை படுவே என்று முறைக்கவும் செய்தான்.

     அப்பா இங்க பாருங்கப்பா! ரமேஷை! எனக்கு இடம் தர மாட்டேங்கிறான் என்று தந்தையை துணைக்கழைத்தான் மூர்த்தி.அவர்களின் தந்தையோ தலையில் அடித்தபடி
ஏண்டா உங்க வம்பு சண்டை பஸ்ல கூட விட்ட பாடில்லையா? இப்ப என்னடா பிரச்சணை என்றார்.
     அப்பா எனக்கு ஜன்னலோர சீட் வேணும்! என்றான் மூர்த்தி. ரமேஷ் சின்னவன்
,உன்னோட தம்பி நீதான் விட்டுக் கொடுத்தா என்ன? என்றார் தந்தை. ம்ம்! அதெப்படி எப்பவுமே அவனுக்குத்தான் சப்போர்ட் பண்றிங்க? எனக்கு ஜன்னலோர சீட் தான் வேணும்! 
பிடிவாதம் பிடித்தான் மூர்த்தி.
   டேய் ரமேஷ்! அண்ணன் பாவம் தானே! இன்னிக்கு அவனுக்கு விட்டுக் கொடேன். வரும்போது நீ ஜன்னலோரம் உக்காந்து வருவியாம் என்றார் தந்தை.
  ஊகும்! நான் மாட்டேன் வரும்போது அவன் உக்காந்து வரட்டும் இப்ப நான் 
உக்காந்து வரேன்! அடம் பிடித்தான் ரமேஷ்.
  ரமேஷ் மூர்த்தி நான் ஒரு ஐடியா சொல்றேன் இந்த பஸ் சென்னைக்கு போக
இரண்டு மணி நேரம் ஆகும் முதல் ஒருமணி நேரம் தம்பியும் அடுத்த ஒரு மணி நேரம் அண்ணனுமா மாத்தி உட்காந்துக்குங்க! என்ன? சண்டை போட்டு அமளி பண்ணாம ஒத்துக்கிறீங்களா? அப்பா கேட்க இருவரும் தலையசைத்தனர்.
 முதலில் ரமேஷ் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டான். பேருந்து கிளம்பியது. அவர்கள் சீட்டுக்கு முன் சீட்டில் அவர்களின் வயதையொத்த ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். பஸ் கிளம்பி சிறிது நேரத்தில் நிரம்பி வழிய ஒரு முதியவர் உட்கார இடமில்லாமல் நிற்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.அதை கண்ட அந்த சிறுவன் பெரியவரே நீங்க உக்காருங்க! என்று எழுந்துகொண்டான். அவன் எழும் போது தடுமாறிய போது தான் தெரிந்தது அவன் கால்கள் போலியோவால் பாதிக்கப்பட்டு ஊனமுற்று இருந்தது.
ஊன்று கோலால் ஊணியபடி அவன் எழுந்து நிற்க முதியவர் அமர்ந்தார்.
    உடனே மூர்த்தியின் தந்தை, ‘பார்த்தீங்களா! பசங்களா! நீங்களும் இருக்கீங்களே! 
அண்ணன் தம்பிகளா இருந்தும் ஜன்னலோர சீட்டுக்கு அடிச்சிகிட்டீங்க! அந்த பையன்
கால் ஊணமா இருந்தும் பிறருக்கு உதவனும்னு பெரியவருக்கு சீட் கொடுத்திருக்கான். 
அவனைப் பார்த்தாவது நீங்க திருந்துங்க! என்று சொல்லி முடித்தார். சிறுவர்கள் இருவரும் தலை குனிந்தனர்.
   ‘அப்பா நாங்க தவறை உணர்ந்திட்டோம். அதுக்கு பிராயசித்தமா அந்த அண்ணனை
நம்ம சீட்டுல உக்கார சொல்லப் போறோம் அண்ணா வாங்கண்ணா! என்று
அந்த சிறுவனை அழைத்து தம் சீட்டில் இடமளித்தனர் ரமேஷும் மூர்த்தியும்.
     நீங்க சண்டை போடறத பார்த்திட்டுதான் இருந்தேன்! எப்படியோ என் செயல்
உங்களை திருத்த உதவியது எனக்கு மகிழ்ச்சியே என்றான் அச்சிறுவன்.
  இப்போதெல்லாம் ரமேஷும் மூர்த்தியும் எதற்கும் சண்டை போடுவது இல்லை 
ஒற்றுமையாக வாழ்கின்றனர். அன்பு குழந்தைகளே நீங்க எப்படி?

அறவுரை

ஆசாரக் கோவை!

சூதர் கழகம் அரவம் அறாக்களம்
பேதைகள் அல்லார் புகாஅர் புகுபவேல்
ஏதம் பலவும் தரும்.
            - பெருவாயின் முள்ளியார்

விளக்கம்|   சூதாடும் இடத்திலும் பாம்பு வளையிடத்தும் மூடரைத் தவிர வேறு யாரும்
செல்லார். அப்படி செல்வாராயின் அவருக்கு பல துன்பங்கள் உண்டாகும்.

உங்களுக்குத் தெரியுமா?

தினமும் தன் நிறம் மாற்றும் மலை ஐரியஸ் மலை, ஆஸ்திரேலியா

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

     

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2