சாதுர்யமான பதில்! குட்டிக்கதை!
சாதுர்யமான பதில்!
அக்பரும் பீர்பாலும் ஒன்றாக உணவருந்துவது வழக்கம்.ஒரு நாள் சாப்பாட்டில் கத்தரிக்காய் பொறியல் பறிமாறப்பட்டது. கத்தரிக்காய் சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா என்று அக்பர் கேட்டார். ஆம் அரசே கத்தரிக்காய் சாப்பிடுவது நல்லதுதான் என்றார் பீர்பால்.
சிலநாள் கழித்து மீண்டும் கத்தரிக்காய் பொறியல் பறிமாறப்பட்டது. “கத்தரிக்காய் உடம்புக்கு கெடுதலாமே!” என்று அக்பர் கேட்டார். ஆம் அரசேஎன்று பீர்பால் தலையாட்டினார்.
அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சா? அக்பர் முறைத்தார்.
“எனக்கு ராஜா நீங்கள் தான் கத்தரிக்காய் அல்லவே?” என்று பவ்யமாய் பதிலளித்தார் பீர்பால்
சட்டைத் திருடியவன்!
துணிக்கடைக்குள் நுழைந்து சட்டை திருடியதாக ஒருவன் நீதி மன்றத்திற்கு அழைத்துவரப்பட்டான் நீதிபதி அவனிடம் கேட்டார் இதுபோல சட்டை திருடியதற்காக மூன்றாண்டுகளுக்கு முன் உன்னை தண்டிச்சேன். மீண்டும் அதே திருட்டா?
நான் என்ன செய்வேன் நீதிபதி அவர்களே முன்பு திருடிய சட்டை கிழிந்துவிட்டது என்றான் அவன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
பதிவு அசத்தல்
ReplyDeleteகூடன்குளம் அணு உலைக்கு எதிரான இந்த பதிவையும் படிங்க
4-வதுநாள் உண்ணாவிரதம்.127 உயிர்களை காப்பாற்றுங்கள்!!!
காமெடி
ReplyDelete