ஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கிடைத்த அதிசயம்

டோக்கியோ: ஜப்பானின் தெற்கு கடற்கரையில் ஒரு சிறுமியால் தூக்கி வீசப்பட்ட ஒரு பாட்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்காவின் ஹவாய் தீவு கடற்கரையில் கிடைத்துள்ள அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜப்பானின் தென்கோடியில் உள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா என்ற நகரின் கடற்கரையில், சாகி அரிகவா என்ற சிறுமி, ஐந்தாண்டுகளுக்கு முன் ஒரு பாட்டிலை கடலில் வீசி எறிந்துள்ளார். கடந்த வாரம், ஹவாய் தீவில் உள்ள குவாய் பகுதியில், கடற்கரையை பணியாளர்கள் சுத்தப்படுத்திய போது, ஒரு பாட்டில் கிடைத்தது. அந்த பாட்டிலுக்குள் சில பொருட்கள் இருந்ததை அடுத்து, அதை அதிகாரிகளிடம் ஊழியர்கள் ஒப்படைத்தனர். அந்த பாட்டிலை அதிகாரிகள் திறந்து பார்த்த போது, அதில் காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு கொக்கு, அரிகவா சிறுமி படித்த துவக்கப் பள்ளியின் புகைப்படமும், அதன் பின்புறம், அரிகவாவின் கையெழுத்தும் இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகவல், அரிகவாவுக்கு அனுப்பப்பட்டது. தற்போது 17 வயதாகும் அவர், இதுகுறித்து அளித்த பேட்டியில்,"இதை என்னால் நம்பவே முடியவில்லை. அந்த பாட்டில் திரும்பக் கிடைத்ததன் மூலம், என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகின்றன' என்று, விலகாத ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.


நன்றி தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2