ராஜிவ் கொலையாளிகளும்?!மரணதண்டணையும்!
ராஜிவ் கொலையாளிகளும்?!மரணதண்டணையும்!
பேரறிவாளன், சாந்தன், முருகன், இந்த மூவர் மீதுதான் ஒரு பதினைந்து தினங்களாய் தமிழகத்தின் கண்கள் பதிந்து இருக்கிறது. மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று ஒரு தரப்பும் வேண்டாம் என்று ஒரு தரப்பும் முட்டி மோதி டிவிட்டரில் விவாதம் நடத்தும் அளவிற்கு சென்று இருக்கிறது.
குற்றம் செய்தவர்கள் தண்டணை அனுபவிக்க வேண்டும் என்பதில் மறு கருத்து கிடையாது! ஆனால் இவர்கள் செய்த குற்றம் என்ன? குற்றவாளிகளா? இல்லையா? இவர்கள் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கப்ட்டது என்று மீடியாக்கள் செய்தி வெளியிடுகிறது!
இவர்கள் உயிர்மட்டும் வெல்லமா? அன்று ராஜிவோடு அப்பாவிகள் பலர் இறந்தனரே! அவர்களது எல்லாம் உயிர் இல்லையா? ஆட்டோசங்கர் கூட தமிழன் தான். அதற்காக அவனை மன்னித்துவிட்டோமா? என்றெல்லாம் விவாதங்கள்.
துணிவான முடிவெடுக்கும் முதல்வர் கூட இவ்விஷயத்தில் தடுமாறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். விடுவிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை என்றவர் அடுத்த நாளே சட்டமண்றத்தில் தீர்மாணம் போட்டுவிட்டார்.
இதுவரை வாய் பொத்திக் கொண்டிருந்த தமிழினத் தலைவர்களும் ஆளாளுக்கு விஷயத்தை பெரிது படுத்தி தன் தமிழ் பற்றை நிரூபித்து வருகின்றனர்.பொதுவாக மரண தண்டனை கூடாது என்பது எல்லார் விருப்பம் என்றால் அது இம்மூவருக்கு மட்டும் தானா? கொடூர தாக்குதல் நடத்திய கசாப்பிற்கும் விதிவிலக்கு அளிக்கவேண்டுமே என்று சிலர் வாதிடுகின்றனர்.
ராஜிவ் கொலை திட்டமிடப்பட்ட ஒன்று ! இது அறியாமல் செய்த தவறு அல்ல! மன்னித்து விடுவதற்கு என்று பாதிக்கப் பட்டவர்கள் குரல் கொடுக்கிறார்கள்!.
எது எப்படி இருப்பினும் தாமதித்து வழங்கப்படும் நீதி! நீதி அல்ல இதை அனைவரும் உணரவேண்டும். இவர்கள் மூவரும் அந்த கொலையில் ஒரு கருவியாக பயன்படுத்தபட்டிருக்கலாம்.கொலையாளிகள் அல்ல. கொன்றது தனு எனும் தற்கொலைப் படையைச் சேர்ந்தவள். கொல்லத்தூண்டிய முதல் குற்றவாளி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இதை அவரே சன் டிவிக்கு அளித்த பேட்டியில் துன்பியல் சம்பவம் என்று அப்போது ஒப்புக் கொண்டார். அப்போதே அவரை பிடிக்க முடியவில்லை! அவரும் தற்போது இல்லை! எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்று ஒரு பழமொழி உண்டு இவர்கள் மூவரும் அம்புதான் என்பது எனது தனிப்பட்ட கருத்து.
எய்தவன் இறந்து விட்ட பிறகு அம்புகளுக்கு தண்டணை கொடுக்க வேண்டுமா? அதுவும் அவர்கள் ஏற்க்குறைய 20 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவித்து திருந்தியுள்ளார்களே!
கொஞ்சம் மனிதாபிமானம் வேண்டும்! மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை என்று தினமலர் கூறியுள்ளது. உயிர்களிடத்தில் அன்பு வேணும் என்றுதான் பாரதி குறியுள்ளார். ஒருவன் செய்த அதே தவறை நாம் மீண்டும் செய்ய வேண்டுமா? அதனால் இழந்ததை அடைந்துவிட முடியுமா? முடியுமெனில் கண்டிப்பாக மரணதண்டனை வழங்கலாம்.
அன்று பாதித்தவர்கள் தனது சொந்த பந்தங்களை அனாதையாக்கி சென்றது போல இவர்களும் போகவேண்டுமா?
குற்றவாளிகளுக்கு மன்னிப்பு என்பதுதான் மிகப் பெரிய தண்டணையாக இருக்கும் என்பது என் கருத்து.
இதனால் குற்றவாளிகளுக்கு பயம் போய் விடும் குற்றங்கள் அதிகமாகும் என்பதெல்லாம் வெறும் வரட்டுப் பிடிவாதங்களே! இப்போது மட்டும் குற்றங்கள் நடைபெறாமலா இருக்கின்றன?
பொறுத்திருந்து பார்ப்போம்!.என் கருத்தில் பிழையிருக்கலாம் மாறுபாடு கொண்டோர் இருக்கலாம். புலி ஆதரவாளரா நீங்கள் என்று சிலர் கேட்கலாம்! இதற்கெல்லாம் என் ஒரே பதில்! நான் யாருடைய ஆதரவாளனும் இல்லை! இதை என் பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும்! மனதில் பட்டதை எழுதினேன்! நீங்களும் உங்கள் விவாதங்களை முன் வைக்கலாம். இதில் எந்த ஆதாரங்களையும் நான் முன் வைக்க விரும்பவில்லை!. அவர்கள் குற்றவாளிகளா? இல்லையா? என்றும் ஆராயவில்லை! மரணதண்டணை இவ்வளவு காலம் கழித்துத் தேவையா என்று மட்டும் தான் கேட்கிறேன்.
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!
மிருகங்களுக்கு பொருந்தாது என கூறும் தினமல்ர் குஜராத்தில் கோத்ரா சம்பவத்துக்கு பழி வாங்க என திட்டம் போட்டு உயிரோடு (ஒரு எம்.பி உட்பட) பல நூறு பேரை கொல்ல காவல் துறையை ஒத்துழைக்க உத்தரவிட்ட ”மிருகத்திற்கும்” இந்த தண்டணையை கொடுக்க சொல்லுமா? தினமலர் ஒரு சாதி,மத வெறி பிடித்த நாளேடு,அது இப்படிதான் எழுதும். -ஹரிஹரன்.
ReplyDeleteபுலிகள் அழிவுக்கு காரணம் புலிகள்தான் தம்மை யாரும் வெல்ல முடியாது என்ற ஆணவத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமா?, 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணதில் தான் உண்டு தன் வியாபாரம் உண்டு என்று இருந்த அப்பாவி முஸ்லிம் தமிழர்களை துப்பாக்கி முனையில் அவர்கள் பல பல நுற்றாண்டு காலமாய் வாழ்ந்த வீடு, வாசல், சொத்து, சுகம் எல்லாவற்றயும் போட்டுவிட்டு உடுத்திய துணி 500 ருபாய் பணம் மட்டுமே அனுமதி என்று நான்கு மணி நேரத்தில் லாரிகளில் வைத்து விரட்டியது யார்? இரக்கமே இல்லாமல் குழ்ந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் நோயாளிகள் என்று பார்க்காமல் விரட்டியது யார்? குழ்ந்தைகள் கழுத்தில் கிடந்த சங்கிலி, வளையல் நகைகளை கொரடை கொண்டு வெட்டி எடுத்தவர்கள் யார்? கொள்ளை அடித்த பொருள்களை புத்த கோவிலில் வைத்து விற்றவர்கள் யார்? சிங்களவனா? இல்லையே புலிகளைதானே அது மட்டுமா கிழக்கு மாகாணத்தில் வாசித்த லட்சகணக்கான முஸ்லிம் தமிழர்களை விரட்டி அவர்களை அகதியாய் ஆக்கியது, காலையில் பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த அப்பாவி முஸ்லிம்களை குருவி சுடுவது போல் சுட்டு கொன்றது என்று சொல்லிக்கொண்டே போகலாம், நரேந்திர மோடியை விட ஒருபடி மேலே போய் முஸ்லிம்களுக்கு அநீதி இளைத்தது புலிகள்தானே இந்த விசயத்தில் பிரபாகரன் ஓர் இந்துமதவெறியர் போல் நடந்த இருக்கின்றார் ஆனால் அவரை ஆதரிப்பது எல்லோரும் இந்து மத எதிர்பாளர்கள் இதுதான் வேடிக்கை,
ReplyDeleteஅப்பாவிகளை கொலை செய்வதில் ராஜபக்சேவுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை பிரபாகரன், எத்தனை தமிழர்கள், மாற்று கருத்து உள்ள அரசியல் தலைவர்கள், சகோதர இயக்க தலைவர்கள், சொந்த இயக்கத்தை சேர்த்தவர்கள் முஸ்லிம்கள், அப்பாவி சிங்களவர்கள் சொல்லிக்கொண்டே போகலாம், 1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பொழுது 40 கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்களும் போலீஸ் இறந்தர்களே அவர்கள் தமிழர்கள் இல்லையா? இவர்கள் எல்லோரும் இந்திய அமைதி படையுடன் சேர்ந்து போய் தமிழ் பெண்களின் கற்பை சூறையாடி விட்டு வந்தவர்களா? புலிகளுக்கு உதவ போய் அவருக்கே தெரியாமல் மிகபெரிய சதியில் நளினி என்ற அப்பாவி 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுவதற்கு காரணம் புலிகள்தானே,
புலிகளுக்கு கலைஞர் துரோகம் செய்துவிட்டார் என்று சொல்லுகின்றர்களே புலிகள் மட்டும் கலைஞர்க்கு துரோகம் செய்யவில்லயா? 1989 இல் புலிகளுக்கு உதவ போய் ஆட்சியை இழந்தார், புலிகளை ஆதரித்த ஒரே காரணத்துக்காக ராஜிவ் கொலை பழியை சுமந்தார், அதனால் தானே 1991ஆம் ஆண்டு தி,மு, க படுதோல்வியை சந்தித்தது, ராஜுவை கொலை செய்தால் அந்த பழி நம்மை ஆதரிக்கும் தி மு கதிற்கு போய் விழும் என்று ஏன் பிரபாகரன் சிந்திக்கவில்லை?, எல்லோரும் தமிழர்கள் என்கின்றர்களே இலங்கைஇல் உள்ள தோட்ட தொழிலாளர்களுக்கு பிரச்சினை வந்த பொழுது புலிகள் என்ன உதவி செய்தார்கள்? தனக்கு ஒரு பிரச்சினை என்றால் அது எல்லோருக்கும் பொருந்தும் ஆனால் மற்றவர்களுடை பிரச்னை அவரவர்களுக்கு, 1985 களில் எல்லோரையும் போல் புலிகளை ஆதரித்தவன்தான் நான், இப்போது என்னை இப்படி எழுதுவதற்கும் காரணம்மும பிரபாகரன்தான், அப்பாவி இலங்கை தமிழர்கள்தான் பாவம் ஒருபக்கம் புலிகளும் மறுபக்கம் இலங்கை ராணுவத்தாலும் வாழ்விழந்து நிற்கின்ற்கள்,