எந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்தநோய் தாக்கும்?

பிறப்பும், இறப்பும் மனிதர்களின் கையில் இல்லை. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட மாதத்தில் பிறக்க வேண்டும் என்பது எவ்வாறு இறைவனால் நிச்சயிக்கப்பட்டதோ அதேபோல ஒருவரின் இறப்பும் முதலிலேயே நிர்ணயம் செய்யப்பட்டதுதான். ஒருவரின் பிறந்த மாதத்திற்கும் அவர்களுக்கு தோன்றும் நோய்கள், வகிக்கும் பதவிகளுக்கும் தொடர்பிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஒருவர் பிறந்த மாதத்திற்கும் அவரை தாக்கும் நோய்க்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தென்மேற்கு முசௌரி மாநில பல்கலைக்கழகமும், ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து ஆய்வு மேற்கொண்டு அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடு

ஜனவரியில் பிறந்தவர்களுக்கு அல்சீமர் நோய் தாக்குதல் அதிகம் இருந்தது தெரியவந்தது. பிப்ரவரியில் பிறந்தவர்களுக்கு பிபோலர் டிசாடர் நோயும், மார்ச் மாதத்தில் பிறந்தவர்களுக்கு நரம்பு தொடர்பான நோய்களும், ஆட்டிசம் தாக்குதலும் இருந்தது கண்டறியப்பட்டது. ஏப்ரல், மே மாதங்களில் பிறந்தவர்களுக்கு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு நோய் தாக்குதல் அதிகம் காணப்பட்டது.

நுரையீரல் நோய்கள்

ஜூன், ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் பிறந்தவர்களுக்கு நீரிழிவு, பர்க்கின்சன் எனப்படும் நோய்கள் தாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிறந்தவர்கள் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர். டிசம்பர் மாதத்தில் பிறந்தவர் தோல் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்

இந்த ஆய்வு முடிவினை மருத்துவ உலகத்தினரும் உண்மை என்று ஒத்துக்கொண்டிருக்கின்றனர். சீசனைப் பொருத்தே நோய்கள் தோன்றுவதால் ஒருவர் பிறக்கும் மாதத்திற்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொழிலுக்கும் பிறப்புக்கும் தொடர்பு

அதேபோல குழந்தைகள் பிறக்கும் மாதத்திற்கும், எதிர்காலத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் வேலைக்கும் தொடர்பு இருப்பதாக லண்டன் நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த முறை நடத்தப்பட்ட தேசிய கணக்கெடுப்பு அறிக்கையினை பயன்படுத்தி அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் ஜனவரியில் பிறந்தவர்கள் ஆட்சியராகவும், பிப்ரவரியில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நடிகர்களாகவும் உள்ளதாக தெரியவந்தது.

மார்ச் மாதத்தில் பிறந்தவர்கள் விமானி ஆகவும், ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பிறந்தவர்கள் பெயர் சொல்லக்கூடிய வேலையிலும் இருக்கின்றனர். இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் பிறந்த மாதங்களின் அடிப்படையில் அவர்கள் 19 விதமான பணிகளில் இருப்பர் என கண்டறியப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் பிறந்த குழந்தைகள் எதிர்காலத்தில் பல் டாக்டர்களாக பணி புரிவதாக கண்டறிந்துள்ளனர்.

அமாவாசையில் பிறப்பது யோகம்

அமாவாசை திதியில் பிறப்பவர்கள் யோகம் நிறைந்தவர்கள் என்று சோதிடவியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையைப் பொருத்து அவர்களின் குணநலன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை மாத அமாவாசையில் பிறந்தவர்கள் நல்ல குணமுடையவர்களாகவும், வைகாசியில் பிறந்தவர்கள் பொய்கூறுபவர்களாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனி மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் குணமும், ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் அப்பாவியாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பர்.

நாடாளும் ராஜதந்திரிகள்

ஆவணி மாத அமாவாசையில் பிறந்தவர்கள் ராஜ தந்திரிகளாகவும், உள்ளூணர்வு மிக்கவர்களாகவும், புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் ஆராய்ச்சியில் ஆர்வம் மிக்கவர்களாகவும், ஐப்பசியில் பிறந்திருந்தால் ஓயாத மனப் போராட்டம் கொண்டவர்களாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வழி காட்டுபவர்களாக இருப்பார்கள்.

கார்த்திகையில் பிறந்திருந்தால் நாடாளுபவர்களாகவும், நாடாளுபவர்களின் நட்பு பெற்றவர்களாகவும், ஆவணங்களை உருவாக்குவதில் கை தேர்ந்தவர்களாகவும், மார்கழியில் பிறந்தவர்கள் துறவிகள் போன்று நாற்பது வயதிலேயே முதிர்ச்சி அடைந்துவிடுவர்.

தை மாதத்தில் பிறந்தால் சுற்றத்தாரை விரும்புவராகவும், பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாசி மாதத்தில் பிறந்தவர்கள் சோபிக்க மாட்டார்கள் என்றும் அவர்களது வாழ்க்கைத் துணையைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை சோதிட ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்ப பிறந்தீங்க,எப்படி இருக்கீங்க..?

நன்றி தட்ஸ் தமிழ்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலப்படுத்தலாமே!

Comments

  1. மிக்க நன்றி சகோ அருமையான தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு ...........

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2