ஆவி அழைக்கிறது ! 2


ஆவி அழைக்கிறது !
                     எழுதுபவர்: “பிசாசு”

                பகுதி 2

மு.க.சு:  ஆழ்வார்குறிச்சியில் உள்ள தனது பரம்பரை பங்களாவை சீரமிக்க முயலுகிறார் தனவேல் முதலியார். இதில் அவரது பெண் நிதிலாவுக்கு துளியும் விருப்பமில்லை. வீட்டை சுற்றி படர்ந்து கிடந்த முட்புதர்களை வெட்ட வந்த முனியன் சுருண்டு விழுந்து இறக்கிறான்.இனி.
     
     மல்லாந்து வீழ்ந்து கிடந்த முனியனை கூட்டம் அகல கண்விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.இதற்குள் முனியனின் மனைவிக்கு விஷயம் தெரிந்து அலறிஅடித்துக்கொண்டுஓடி வந்தாள் அவளது அழுகுரல் முதலியாரை என்னவோ செய்தது.
      தனவேல் முதலியாருக்கு அதிர்ச்சியும் பயமும் ஒருங்கே இணைந்துகொண்டது அவர் முகத்தில் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணியில் முதல் நாளே ஒருவனை பலிக் கொடுத்துவிட்டோமே அவன் குடும்பத்தை அனாதையாக்கி விட்டோமே என்று சிந்தனையில் இருந்தார் அவர்.
   விஷயம் கேள்விப்பட்டு பதறியடித்துக்கொண்டு வந்தார் நல்ல முத்து. அவர் பின்னாலேயே நிதிலாவும் குப்புசாமியும் அனைவர் முகத்திலும் டண் கணக்காய் பீதி!.கும்பல் சேர ஆரம்பித்து தலைக்குத் தலை பேச ஆரம்பித்துவிட்டார்கள். பேய் அடிச்சுறுச்சாம்ல, பாவிப் பய இங்க வந்தா தன் உசுற விடனும்.இந்த கம்ப்யூட்டர் காலத்துல பேயாவது பிசாசாவது? ஹார்ட் அட்டாக்க இருக்கும்பா! போலிசுக்கு சொல்லியாச்சா என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள்.
           பேயறைந்தார் போல உட்கார்ந்திருந்த தனவேலிடம் நல்லமுத்து வந்தார். தனவேலு மனச தேத்திக்க ஏதோ நடந்தது நடந்துபோச்சு இனி ஆக வேண்டிய காரியங்களை பார்க்கணும்,இப்படியே சோர்ந்து போய் உக்காந்திருந்தா ஒண்ணும் நடக்காது முதல்ல போலிசுக்கு சொல்லணும் என்றதும் தனவேல் தலையசைத்தார். நல்ல முத்து நீ என்ன பண்ணணுமுன்னு நினைக்கிறயோ அதை பண்ணு எனக்கு மனசு சரியில்ல அதனால என் சார்பா நீ ஆகவேண்டியதப்பாரு என்றார்.
     ஒரு அரைமணி நேரத்தில் போலிஸ் வந்து விசாரித்து விட்டு முனியனின் சடலத்தை எடுத்துச் சென்றது.கூட்டமும் கலைந்தது. மறுநாள் போஸ்ட் மார்ட்டம் முடிந்து வந்த முனியணின் சடலம் தகனம் செய்யப்பட்டது. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இயற்கை மரணம் என்று சொன்னாலும் தனவேலுக்கு அதில் நம்பிக்கைஇல்லை. தகனத்திற்கு உண்டான செலவை ஏற்றுக்கொண்ட முதலியார் ஒரு தொகையையும் இழப்பீடாக முனியன் குடும்பத்திற்கு கொடுத்தார். இருந்தும் அவர் மனம் நிம்மதி அடைய வில்லை.
     இந்த பங்களாவை எவ்வளவு செலவு ஆனாலும் சரி புதுப்பித்தே தீருவது என்று வந்தவருக்குஇந்த துர் மரணம் கெட்டசகுனமாகப் பட்டது.இந்த பங்களா எக்கேடோ கெட்டுப் போகட்டும் மூதாதையர் சொத்து என்றாலும் எப்படியாவது போய் தொலையட்டும். முதல் நாளே கோணல் ஆகிவிட்ட பின் முனைவதில் அர்த்தமில்லை என்று பங்களா புதுப்பிக்கும் பணியை கைவிட்டு ஊருக்கு செல்ல முடிவு செய்தார் தனவேல்.

     மகளை அழைத்தார். நிதிலா நாம நாளைக்கே ஊருக்கு புறப்படறோம் அதுக்குண்டான ஏற்பாடெல்லாம் பண்ணீடு என்ற தந்தையை வியப்புடன் நோக்கினாள் நிதிலா. தந்தையின் கண்களில் ஒருபயம் தெரிவதை அவளால் உணர முடிந்தது.
     ஏம்பா நீங்கதானே இது பரம்பரை பங்களா புதுப்பிச்சே ஆகணும்னு பிடிவாதமாய் இருந்தீங்க இப்ப என்ன ஆச்சு திடீர்னு கிளம்ப சொல்றீங்க?
     இன்னும் என்னம்மா ஆகணும் இந்த பாழா போன பங்களா இப்படி ஒரு அப்பாவிய பலிவாங்குமுன்னு நான் கண்டேனா? இப்படி ஆகும்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த ஊர் பக்கமே தலை வெச்சு படுத்திருக்க மாட்டேன் கிளம்பிடலாம்மா!
     ஓ இதுக்குத்தான் பயப்படறீங்களா முனியன் செத்தது தற்செயல்ப்பா!
     பின்ன அவன் ஏன் நம்மபங்களாவுல வேலைக்கு வந்து சாவணும்? கண்டிப்பா ஏதோ ஒண்ணு இருக்கு!
     அது எதுன்னு தான் நாம பார்த்திடுவோம்பங்களா பலி வாங்கிடுச்சுன்னு நாம கிளம்பி போறதுசரியில்லப்பா நாம இங்கேயே தங்கறோம் இந்த பங்களாவை புதுப்பிக்க்தான் போறோம் சரின்னு சொல்லுங்கப்பா என்றாள் நிதிலா
சரி என்றார் தனவேல் அடுத்து வரும் விபரீதங்களை உணராமல்.
        அழைக்கும் (2)

தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!