உங்கள் கேஸ் ஸ்டவ் சரியாக எரிய வில்லையா?


உங்கள் கேஸ் ஸ்டவ் சரியாக எரிய வில்லையா?

மிகவும் கவனமாக விஷயம் தெரிந்தவர்கள் மட்டும் கையாள வேண்டிய ரிப்பேர் வேலை கேஸ் ஸ்டவ் சம்பந்தமானவை.
 சிலகேஸ் ஸ்டவ்களில் ‘சிம்’மில் வைத்தால் ஜ்வாலை அணைந்துவிடும். பர்னர் மிக்சிங் டியுபுடன் இணையும் இடத்தில் உள்ள சிறு துவாரங்கள் தடைப்பட்டால் இப்படி நடக்கலாம்.
  அதேபோல பர்னரில் உள்ளதுவாரங்கள் சுத்தமாக இல்லாவிட்டாலும் சிம்மில் வைத்தால் அணைந்துவிடும்.சரியானபடி சுத்தம்செய்தால் இந்த குறை நீங்கி விடும்.
நீலமான ஜ்வாலைக்குப் பதிலாக மஞ்சளாக சிலசமயம் எரியும்.கேஸ் காக்  சரியான கோணத்தில் அமையாமல் இருந்தால் இந்த குறை நேரும்.எனவே சரியான கோணத்தில் அமைக்க வேண்டும். ஜெட் பகுதியில் உள்ள துவாரத்தின் அளவு பெரியதாக இருந்தாலும் மஞ்சள் நிறமாக இருக்கும். ஜெட் பகுதியை மாற்றுவது அப்போது அவசியமாகி விடும். பர்னர் அல்லது மிக்ஸிங் டியுபில் தூசி அடைத்துக்கொண்டிருந்தாலும் இந்த குறை நேரலாம் அழுக்குகளை நீக்க வேண்டிய தேவை எற்படுகிறது.
        சில சமயம் விபரீதமாக பர்னரில் மட்டுமில்லாமல் ‘ ஆன்’ செய்ய பயன்  படும் ஸ்விட்சின் அருகே கூட ஜ்வாலை எரியும் இதை பேக் ஃபயர் என்பார்கள்.ஸ்விட்சிலிருந்து பர்னருக்கு செல்லும் ஸ்பிர்ங் தவறான திசைக்கு திரும்பி இருந்தாலோ அந்த பகுதியில் உள்ள நிட்டிங் பின் அதிக்மாக இறுக்கப்பட்டிருந்தாலோ இந்த நிலை நேரலாம். குறிப்பிட்ட பகுதியை மாற்றுவது மற்றும் கிரிஸ் ஆகியவற்றின் மூலம் இதை தடுக்கலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியவை:
# பர்னரில் உள்ள அழுக்குகளை நீக்க குண்டுசிகளால் குத்த வேண்டாம் இதனால் துளை பெரிதாகி ஜ்வாலை அதிகமாகும். சிறிது நேரம் பர்னரை மண்ணெண்ணையில் ஊறவைத்து நைலான் பிரஸ் கொண்டு சுத்தம் செய்யவும்.

# கேஸ் காக் பகுதியையும் குத்தி பெரிதாக்கி விடாதீர்கள் இதனால் ஜ்வாலை சிம்மில் வைத்தாலும் பெரிதாக எரியும்.

#கேஸ் லீக் ஆகிறது என்றால் அது ரெகுலேட்டரில் ஏற்பட்டுள்ள் பழுதின் காரணமாக இருக்கலாம் அல்லது தேய்ந்து போன கேஸ் காக் பகுதியாலும் இருக்கலாம். அப்போது அந்த பகுதியை மாற்ற வேண்டும்.

# சிலிண்டரில் இருந்து டியுபுக்கு கேஸை அனுப்ப நாம் திருகும் பகுதியின் அருகே உள்ள பகுதியில் க்ரீஸ் குறைந்து போய் அதனாளும் கேஸ் லீக்காகலாம். அப்போது இன்னொறு கோட்டிங் க்ரீஸ் கொடுக்க வேண்டியது தான். 


அன்பு வாசகர்களே உங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தினை பதிந்து விட்டு செல்லலாமே! அல்லது கீழ்காணும் நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!