அறிந்துகொள்வோம்!


அறிந்துகொள்வோம்!

# கி.மு 558லிருந்து பாரசீகத்தை ஆண்ட சைரஸ் என்ற மன்னனே ஒரு டஜனுக்கு 12 என்ற கணக்கை வகுத்தான்.

#இந்தியாவைல் முதன்முதலாக விமானத்தில் பறந்தவர் ஒரு தமிழர். அவர் பெயர் சி.வி.கிருஷ்ணசாமி செட்டியார். 1910ஆம் ஆண்டில் கிரகாம்பெல் என்ற வெள்ளைக்காரருடன் சேர்ந்து விமானத்தில் பயணம் செய்தார்.

#பெண்களுக்கு கட்டாய ராணுவ பயிற்சி அளிக்கும் ஒரே நாடு இஸ்ரேல்.

#இன விருத்தியில் நத்தை சுறுசுறுப்பானது.ஒரே ஈற்றில் 150முதல் 300 முட்டைகள் இடும்.

# பிரதமரும் மந்திரிகளும் இல்லாத ஒரே நாடு ஸ்விட்சர்லாந்து.

#19ம் நூற்றாண்டில் சைபீரியாவில் தேயிலைப் பொட்டலங்கள்தான் நாணயங்களாக பயன்படுத்தப்பட்டன.
# கபடி விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாகும்.தமிழ்நாட்டில் ‘கபாடி’என்றும்,ஆந்திராவில் ‘பால்சிபாலம்’ என்றும் வங்காளத்தில் ‘உடு-டு-டு’ என்றும் மஹாராஷ்ட்ரம் மற்றும் குஜராத்தில் ‘ஹீடு-டு-டு’ என்றூம் அழைக்கின்றனர்.

#500 ஆண்டுகளுக்கு முன்னால் டச்சுக்காரர்களால் இருபது டாலர்கள் கொடுத்து வாங்கப்பட்ட பகுதியே நியுயார்க்

# கிறிஸ்து+மாஸ் என்றால் ஆலய பூஜை என்று பொருள் கி.பி1131ம் ஆண்டிலிருந்துதான் கிறிஸ்து பிறந்தநாளை குறிக்கும் சொல்லாக வழங்கி வருகிறது.

# ஐஸ்லாந்து நாட்டில் ரயில் போக்குவரத்து கிடையாது.

#மிக்கி-மௌஸ் கதாபாத்திரத்தின் வயது என்ன தெரியுமா? 1928ல் மிக்கிமௌஸ் அறிமுகமானது ஆக அதன் வயது 83.

# ஆதி காலத்தில் சீனாவில் தற்கொலை செய்து கொள்ள அரைக்கிலோ உப்பைத் தின்றனர்.
   

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!