தளிர் அண்ணா பொன் மொழிகள்!
தளிர் அண்ணா பொன் மொழிகள்!
- பற்றுக்கொம்பில்லாத கொடி படர்ந்து வளர்வது கடினம் அதுபோல பற்று இல்லா வாழ்க்கை வெற்றி பெறுவது கடினம்.
- நீரில்லாமல் பயிர்கள் பசுமை இழக்கும் உற்சாகமில்லா மனிதனின் முகமும் பொலிவை இழக்கும்.
- இழந்துவிட்ட ஒன்றைப் பற்றி பேசிப்பேசி இருக்கும் நேரத்தைவீணடிப்பதை விட்டு இனியும் இழக்காமலிருக்க இன்றெ செயல் படு.
- உதிர்ந்த ரோஜா இதழ்களை மீண்டும் ஒட்டவைக்கமுடியாது.அதுபோல உதிர்ந்துவிட்ட வார்த்தைகளை மீண்டும் திரும்பப் பெறமுடியாது.
- சிற்பியின் கலை நயத்தாலே பாறை சிற்பமாகிறது. ஆசிரியணின் சொல் நயத்தாலெ மாணவன் மிகச் சிறந்தவனாகிறான்.
- மண்ணிலே தோண்டுவது எளிது. பாறையிலே தோண்டுவது கடினம். மக்களில் சிலர் மண்ணாகவும் சிலர் பாறைகளாவும் உள்ளனர். எனவே தகுதியறிந்து உபதேசித்தல் வேண்டும்.
- தேனிக்கள் சிரமப்பட்டு சேர்க்கும் தேன் பெரும்பாலும் அதற்கு பயனளிப்பதில்லை.கருமிகளிடம் சேரும் செல்வமும் அவர்களுக்கு பயனளிக்காது வீணாகும்
- யாரும் புழங்காத வீட்டில் தூசு ஒட்டடை படிவதுபோல உலகத்தாரோடு பழகாதவன் மனதில் மாசு உண்டாகும்.
- உன் சொல் கேட்டு நடக்க இரண்டு கைகளும் இரண்டு கால்களும் இருக்க மற்றவனைஎதற்கெடுத்தாலும் நாடுவது ஏன்? உன்னை நம்பு உறுதியாக செயல்படு.
- உலர்ந்த பஞ்சிலே நெருப்பு எளிதாக பற்றும் ஈரமான பஞ்சிலே நெருப்பு பற்றாது. சோம்பலாகத் திரிபவன் உலர்ந்த பஞ்சைப் போன்றவன். அவனை தீயவை எளிதில் பற்றிக்கொள்ளும்.

நான் எனது டியுசன் மாணவர்களுக்கு உபதேசித்த அறி(ரி)வுரைகள் தான் மேலே நீங்கள் படித்தது. பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும் நிரலிகளில் வாக்கிடவும் உங்கள் வருகைக்கு நன்றி!
Comments
Post a Comment