பாப்பா மலர்

ராமுவுக்கு என்ன ஆச்சு?


அன்று மாலை பள்ளியில் இருந்த்து வந்த ராமு சாப்பிட்டுவிட்டு படித்துக்கொண்டிருந்தான் அவன் தந்தை ராஜா அப்பொழுதுதான் ஆபீஸிலிருந்து வந்தார்.ராஜா சட்டையை கழற்றி ஸ்டாந்தில் மாட்டிவிட்டு முகம் கழுவச்சென்றார். ராமுவின் அம்மா கிருஷ்ண வேணி சமையல் கட்டில் இருந்தாள்.
      ராஜா பாத்ரூமுக்குள் நுழைந்ததும் ரமு சுற்றும் முற்றும் பார்த்தான். பின்னர் மெதுவாக சத்தம் போடாமல் எழுந்து சென்று ராஜாவின் சட்டைப்பையிலிருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து தன் சட்டைப் பையில் திணித்துக் கொண்டான்.
       பாத்ரூமில் இருந்து திரும்பிய ராஜா இக்காட்சியை கண்டு ஸ்தம்பித்துப்போய் விட்டார்.ராமுவுக்கு என்ன ஆச்சு? தெரியாமல் பணம் எடுக்கும் அளவுக்கு அவனுக்கு தைரியம் தந்தது யார்? அல்லது 100ரூபாய் எடுக்குமளவுக்கு அவனுக்கு அப்படி என்ன செலவு? கேள்வி மேல் கேள்விகள் அவரை வாட்டி எடுத்தன.அன்றிரவு அவர் சரியாக சாப்பிடவும் இல்லை.உறங்கவும் இல்லை. மறுநாள் முதல் ராமுவை கண்காணிக்க வேண்டுமென எண்ணிக்கொண்டார்.
    அடுத்த நாள் காலை ராமு பள்ளிக்கு புறப்பட்டதும் அவனுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தார் ராஜா. ஒரு திருப்பத்தில் ராமு எதிரே வந்த ஓர் சிறுவனிடம் ரூபாயைத் தர அவனோ வாங்க மறுத்து இவ்வளோ பணம் உனக்கு ஏது? என்று கேட்டான்.ராமு திருதிருவென முழித்து பின் அப்பாவுக்குத்தெரியாமல் எடுத்ததாக கூறினான்.
      அச்சிறுவன் ராமு நான் பீஸ் கட்ட எடுத்துவந்த பணம் தொலைஞ்சுபோனது அதனால எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா அடிப்பாருன்னு சொன்னேன்.அதுக்காக நீ உங்கப்பாவுக்குத் தெரியாம பணம் எடுத்து வந்து தர்ரது தப்பு, வா இப்பவே உங்க அப்பாகிட்ட போலாம். எனக்காக நீ திருட்டு பட்டம் வாங்க வேண்டாம் என்றான்.
     அதுக்கு அவசியமில்ல தம்பி என்று மறைவிலிருந்து வெளிப்பட்டார் ராஜா. அவரைக் கண்டு திடுக்கிட்டான் ராமு. பயப்படாதே ராமு, நீ உன் ப்ரெண்டுக்கு பணம் வேணுமுன்னு என்கிட்ட நேரடியாவே கேட்டிருக்கலாம். நீ எதுக்கு பணம் எடுத்தேன்னு நான் குழம்பி போயிட்டேன். உதவி செய்ய தான் எடுத்தேன்னு தெரிஞ்சிடுச்சு. இப்பத்தான் மனசு நிம்மதியாச்சு. ராமு திருடறது கெட்டப்பழக்கம். இப்ப திருட ஆரம்பிச்சா அதுவே பெரியவன் ஆன பிறகும் தொடரும். இது மாதிரி செய்யாதே! தம்பி அந்த பணத்தை நீயே வச்சுக்க என்றார் ராஜா.
   அப்பா இனிமே இந்த மாதிரி செய்ய மாட்டேன் என்றான் ராமு. மன நிறைவோடு ஆபிஸிற்கு கிளம்பினார் ராஜா.



எங்கே போறிங்க?
 
குட்டிப்பாப்பா குட்டிப்பாப்பா
எங்க போறிங்க?
கட்டி கட்டியாய் வெல்லம் வாங்க
கடைக்குப் போறேங்க!
கட்டி வெல்லம் வாங்கி நீங்க
என்ன செய்யப்போறீங்க?
குட்டி பிள்ளையாருக்கு நாங்க
படைக்கப்போறேங்க!
வெல்லம் படைச்சு என்ன வரம்
கேக்க போறீங்க?
நல்ல படிப்பினையே நான் வரமாய்
கேக்கப் போறிங்க!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2