ஆன்றோர் மொழிகள்
ஆன்றோர் மொழிகள்
கொடியவர்கள் பயத்தினால் பணிவார்கள் நல்ல மணிதர்களை கட்டுப்படுத்தும் சக்தி அன்புக்கே உண்டு.
-அரிஸ்டாட்டில்
நமது உள்ளம் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் போல அமைதியுடனிருக்க வேண்டும்
-புத்தர்.
உண்மையே கடவுள் எல்லா அறங்களும் உண்மையை பின் தொடருகின்றன. உண்மையவிட மேலானது ஒன்றுமில்லை.
-வால்மீகி
உதவியை மறப்பது என்றும் நல்லதன்று. தீமையை உடனே மறந்து விடுவது நன்றாகும்.
-திருவள்ளுவர்
எதிர் நோக்குவது குறைவாயிருப்பின் ஏமாற்றம் மிகுதியாய் ஏற்படாது.
பீச்சர்.
காலத்தின் நிலையை அறிந்துகொள் காலமே உன் உயிர், அதை வீணாக்குவது உன்னையே நீ கொலை செய்து கொள்வது போலாகும்.
ஜேம்ஸ் லேன்
விறகை இடுவதால் தீ அணையுமா? கோபம் தணிவதற்கு கோபமான் வார்த்தைகளை சொல்வதால் என்ன பயன்? இனிய வார்த்தைகளை வழங்க வேண்டும்.
-கவி விருந்தா
நிறைய எண்ணை இருப்பினும் காற்றடிக்கின் தீபம் அணையும் நல்ல செயல்கள் பல இருப்பினும் கெட்ட செயல் ஒன்றால் யாவும் அழியும்.
ஒரு வடமொழிக் கவிஞர்.
தன் துன்பத்தை வெளிக்கு காட்டாமல் இருப்பவனை விட தன் மகிழ்ச்சியை வெளிக்காட்டாதவன் பெரியவன் ஆவான்.
-விக்டர்.
இன்பம் எட்டத்தில் இருக்கிறதா என்று எண்ணி ஏங்குகிறான் முட்டாள்.அது தன் காலடியில் கொட்டிக்கிடப்பதை காண்கிறான் புத்திசாலி.
-ஜேதன் ஆபன்ஹிம்
என்னால் எதையும் செய்யமுடியும் என்று தன் மீது தீராத நம்பிக்கை கொண்டு எவன் கடுமையாக உழைக்கிறானோ அவனுக்கு எப்போதும்வெற்றி கிடைக்கும்.
-ப்ராக்போ
துன்மார்க்கத்திற்கு காரணம் சோம்பல் நன்மையை நாடுபவன் சோம்பலுக்கு இடம் கொடாமல் ஏதாவது ஒரு தொழிலில் முயற்சி செய்வதே நலம்.
அக்பர்.
Comments
Post a Comment