வாயில்லாப்பூச்சி!


வாயில்லாப்பூச்சி!

பேருந்தின் ஓட்டம் சீராக இருந்தது. நடத்துனர் அந்த ஜன நெரிசலிலும் தன் பணியை செவ்வனே செய்துகொண்டிருந்தார்.நான் யார் என்று கூறவில்லையே நான் ஒரு பட்டதாரி இளைஞன் படித்துவிட்டு வேலை தேடி அலைந்து அலுத்துப்போய் இப்பொழுது சுயமாய் ஒரு பெட்டிக்கடை நடத்திக்கொண்டு என் காலத்தை ஓட்டி வருகிறேன்.
    அந்த சிறிய கடைகுரிய பொருட்களை பக்கத்து டவுனில் சென்று வாங்கிகொண்டு இந்த பேருந்தில் திரும்பிக் கொண்டிருக்கிறேன். கூட்டம் பேருந்தில் அலை மோதியது எப்படியோ அடித்து பிடித்து ஏறி இடம் பிடித்து அமர்ந்துகொண்டேன்.
    நடத்துனருக்கு டிக்கெட் கொடுக்கவே நேரம் சரியாக இருந்தது. வழியெங்கும் கூட்ட நெரிசல். எப்படியோ திறமையாய் சமாளித்து டிக்கெட் கொடுத்து முடித்து தன் இருக்கைக்கு வந்தார். அது இருவர் அமரும் இருக்கை ஜன்னலோரம் நடத்துனருடையது. அதில் முதியவர் ஒருவரும் இளைஞன் ஒருவனும் அமர்ந்து கொண்டிருந்தனர்.
  யாராவது எழுந்து எனக்கு இடம் கொடுங்க என்று நடத்துனர் சொல்ல பெரியவர் மவுனமாக இருக்க இளைஞனோ யோவ் பெருசு அதான் கண்டக்டர் சொல்றாரில்ல எழுந்திருக்கிறது என்றான். ஏம்ப்பா நீதானே கண்டக்டர் சீட்ல உக்காந்திருக்கே யோவ் நான் முதல்ல எங்க உக்காந்திருந்தேன் நீ உக்காந்திருக்கற இடத்துல தானே நீ வந்து தள்ளி உக்கார சொன்ன ஏதோ போனா போவுது பெரிசுன்னு மாறி உக்காந்தேன் இப்ப நீ எனக்கே வக்கிறியா ஆப்பு என்று
அந்த இளைஞன் பேசிக்கொண்டெ போக நடத்துனரோ உங்க சண்டய அப்புறம் வச்சிக்குங்க முதல்ல எனக்கு இடம் விடுங்க என்று சொல்ல அந்த பெரியவர் பரிதாபமாக எழுந்து நின்றார்.
      அடுத்த ஸ்டாப்பில் இறங்கிய நான் சே இந்த காலத்தில் வயசானவங்கள மதிக்க மாட்டேன்றாங்களே பஸ்ஸில எல்லோரும் வாயில்லா பூச்சியாட்டம் எல்லோரும் சும்மாதானே இருந்தார்கள் என்று தனக்குத்தானே பேசிக்கொண்டெ நடந்தபோது தான் எனக்கு உறைத்தது.
ச்சே நாமும் நடந்ததைப் பார்த்துக்கொண்டு சும்மாத் தானே இருந்தோம் எழுந்து இடம் கூடத் தரலீயே நம்மகிட்டயே குறைவச்சிகிட்டு மத்தவங்களை குறை சொல்லிக்கிறமே என்று தலையில் அடித்துக் கொண்டேன்.


தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் பொன்னான கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் பதிவு பிடித்திருந்தால் வாக்கிட்டு செல்லலாமே! நன்றி !

Comments

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!