மாமியார் என்ன சொல்வாளோ!

மாமியார் என்ன சொல்வாளோ!


நான் என்னுடைய மாமியார் வீட்டுக்குப் புறப்பட்டேன். அங்கிருந்து தாய் வீட்டிற்கு வந்து ஆறு மாதத்திற்கு மேல்  ஆகிவிட்டது. அண்ணன் தம்பி அக்காதங்கச்சிகளை பார்த்து பேசி மகிழ்ந்து குலாவி இன்று தான் மாமியார் வீட்டிற்கு கிளம்பினேன்.


     என் மாமியார் சரியான ராட்சஸி என்வீட்டாரை உள்ளே சேர்க்கவே மாட்டாள். நானும் போய் பார்க்கக்கூடாது என்று உத்தரவு. இதைச்செய் அதைச்செய் என்று ஒரே ரோதனை. அவள் வீட்டுப் பணியாள் கூட இவ்வளவு வேலைகளை இழுத்துப்போட்டு செய்யமாட்டான்.அந்த அளவுக்கு ஒரு பொதிமாடாய் அந்த குடும்பத்திற்கு உழைத்துவிட்டேன்.
        அன்று அப்படித்தான் கரண்ட் பில் கட்ட மறந்து விட்டேன். அதற்கு என்னமாய் பேசி விட்டாள் அந்த ராட்சஸி. தண்டச் சோறு, கதியில்லாமல் இங்க வாழ்க்கபட்டு இந்த பேச்சை எல்லாம் வாங்க வேண்டியதாய் போய் விட்டது. அன்று கோபித்துக்கொண்டு வந்துவிட்டேன். இதோ ஆறுமாதமாகி விட்டது. ஒருவரும் அழைப்பாரில்லை.
        சரி நாமே போய் பார்ப்போம் என்று கிளம்பிவிட்டேன்.பஸ்ஸில் ஏறி சீட் தேடிபிடித்து அமர்ந்த எனக்கு மாமியார் என்ன சொல்வாளோ என்று லேசாக உதறல் எடுத்தது. தீடிரென வியர்க்க கர்சீப் எடுத்து துடைத்துக்கொண்டேன்.மாமியாரை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று சிந்தித்தபடி வர ஊர் வந்து விட்டது.
    பஸ்ஸை விட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். வீடு நெருங்க நெருங்க வியர்த்துக் கொட்டியது. பசங்கள் என்ன சொல்வார்களோ? அவர்களைக் கூட சமாளித்து விடலாம் ஆனால் மாமியார்? அவள் பெரிய அடங்காப் பிடாரி ஆயிற்றே கத்தி ஊரைக் கூட்டுவாளே என்று நினைத்தபடியே  தனது மாமியார் வீட்டினுள் நுழைந்தான் அவ்வீட்டில் வீட்டு மாப்பிள்ளையாக தங்கி இருக்கும் சுந்தர்.




தங்கள் வருகைக்கு நன்றி! உங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே? கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!