அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!

அம்மனின் கருணை பெருகும் ஆடி மாதம்!


ஆடிமாதப் பிறப்பு தட்சிணாயின புண்ணிய காலம் என்று போற்றப்படுகின்றது. சூரியன் தென் திசை நோக்கி பயணிக்கும் இந்தக் காலம் தேவர்களின் இரவுப் பொழுது என்று சொல்லப்படுகின்றது. ஆடி மாதம் துவங்கினாலே அம்மன் கோயில்கள் களைகட்டும். அம்மன்களுக்கு விஷேச பூஜைகள், திருவிழாக்கள் எல்லாம் அமர்க்களப்படும்.

   விவசாயத்திற்கும் ஆடி மாதம் உகந்த மாதமாகும். ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் உண்டு. ஆடிமாதத்தில் வாழை வைத்தால் நன்றாக விளையும் என்ற நம்பிக்கையும் உண்டு. இந்த மாதத்தில் சூரியனும் தன்னுடைய கடும் வெப்பம் தணிந்து அவ்வப்போது தூறல் மழை பொழிய ஆரம்பிப்பார்.

    கடும் வெப்பம், அதற்கு பின் மழை என்பதால் உடல் சீதோஷ்ணம் பாதிக்கும். அதனால் நோய்களும் தாக்கும். இதனாலேயே ஆடிமாதங்களில் வீடுகளில் வேப்பிலைத் தோரணங்கள் அம்மன் வழிபாடு,கூழ்வார்த்தல் போன்றவை நம் மக்கள் அக்காலத்திலேயே தோற்றுவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். தெய்வ வழிபாடும் ஆயிற்று. உடல்நலமும் சீராகிறது என்ற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் பறித்து இருக்கிறார்கள்.

  ஆடிமாதப்பிறப்பன்று தட்சிணாயின புண்ணிய காலம் என்பதால் நதிக்கரைகளில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பாகும். இம்மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினம் முன்னோர்களுக்கு மிகவும் உகந்த தினமாகும். பொதுவாக அமாவாசை தினம் நிறைந்த அமாவாசை என்று சுபகாரியங்கள் செய்கின்றார்கள். அமாவாசை தினம் முன்னோர்கள் வழிபாட்டுக்கு என்று ஒதுக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதற்கு மட்டுமே உகந்தது. அமாவாசை தினம் அம்மன் கோயில்களில் வழிபாடு நடக்கும்.அமாவாசை தவிர்த்து பிரதமை தினம் அம்பாளுக்கு உகந்த திதியாகும்.

 ஆடி வெள்ளியில் அம்மனை தரிசிப்பது சிறப்புக்குரியதுசகல பாக்யங்களையும்அள்ளித்தர வல்லதுவிரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனைவழிபட்டால்பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்கன்னிப்பெண்களுக்கு சிறந்தவரன் அமையும்.

• ஆடி மாத சுக்ல தசமியில் திக்வேதா விரதம் கடைப்பிடித்து, திக்தேவதை களை அந்தத் திசைகளில் வழிபட்டால் நினைத்தது தடையின்றி நடைபெறும். 

• ஆடி மாத வளர்பிறை துவாதசி நாளில் விரதத்தை தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசி பூஜை செய்து வந்தால் சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடுவதுடன் வளமான வாழ்வு கிட்டும். 


• ஆடி மாத சுக்ல துவாதசியில் மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வ வளம் பெருகும். 


• ஆடி மாதம் வெள்ளிக்கிழமை விரமிருந்து அம்பிகையை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். 


• ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் விரமிருந்து மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். 


• ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். 
பொதுவாகவே ஆடிமாதம் அம்மனை வழிபட சிறந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் ஆடி வெள்ளி,ஆடி செவ்வாய், ஆடிப்பதினெட்டாம் பெருக்கு, ஆடித் தபசு, ஆடிப்பூரம், ஆடிமுளைக்கொட்டுவிழா. ஆடி அமாவாசை, ஆடி ஞாயிறு ஆகியவை அம்மனுக்கு உகந்த நாளாக உகந்த பண்டிகை தினங்களாக கொண்டாடப்படுகின்றன. இது தவிர முருகருக்கு உகந்த கிருத்திகை நாளும் ஆடி மாதத்தில் விஷேசமாகும்
.

ஆடிமாத செவ்வாய்க்கிழமைகளில் ஔவையார் நோன்பு கடைபிடிக்க படுகின்றது. இந்த நோன்பில் ஆண்கள் கலந்து கொள்ள முடியாது. அரிசிமாவு வெல்லம் கலந்த கொழுக்கட்டை செய்து கன்னிப்பெண்கள் வழிபடுவர். இந்த நோன்பு கடைபிடிப்பதால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமணம் ஆகும் என்ற நம்பிக்கை உண்டு.
அம்மனுக்கு உகந்த இந்த ஆடிமாதத்தில் காலையில் நீராடி அருகில் உள்ள அம்மன் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவோம்! அம்மன் அருளினை பெற்றிடுவோம்!

(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை  பின்னூட்டம் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. ஆடி மாத சிறப்பினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 2. ஆடியின் பெருமையை அறிந்தோம். நன்றி.

  ReplyDelete
 3. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்...
  அது குறித்து மிக அருமையானதொரு பகிர்வு சகோதரரே...

  ReplyDelete
 4. நேற்றைய வெள்ளிக்கிழமை புட்லூர் அம்மன் கோவில் சென்றிருந்தேன். அப்போதே என்ன கூட்டம்!

  ReplyDelete
 5. ஆடி மாதத்தின் சிறப்பு சொன்ன பகிர்வு. நன்றி சுரேஷ்.

  ReplyDelete
 6. ஆடிச் சிறப்பு அளவிட முடியாதது!

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2