கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 55

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 55


1.   இப்ப எந்த குடி முழுகி போவுதுன்னு இவ்ளோ கூட்டம் வாசல்ல வந்து நிற்குது…!
பெய்ஞ்ச மழையிலே குடிசை முழுகிப்போனவங்க கூட்டம் தலைவரே…!

2.   தலைவர் வெள்ளப்பாதிப்புல இருந்தாராமே…!
”நிவாரண நிதி’ வந்ததும் பாதிப்பெல்லாம் பாதியா குறைஞ்சிருச்சாம்!

3.    “வடிகாலா” இருப்பேன்னு சொன்ன தலைவரை உடனே திருப்பி அனுப்பிச்சிட்டாங்களாமே மக்கள்..?
  அப்ப இடத்தை அடைச்சிக்கிட்டு நிக்காதீங்கன்னு சிம்பாலிக்கா சொல்லிட்டாங்களாம்!

4.   எவ்வளவோ முயற்சி பண்ணியும் பஸ்ஸை பிடிக்க முடியலை..!
   ஏன் லேட்டாயிருச்சா…?
வெள்ளத்திலே அடிச்சிக்கிட்டு போயிருச்சு!


5.   தலைவர் வெள்ளத்திலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாயும் போர்வையும் தர்றாராமே…!
  ஆமாம்! எல்லா வாக்குகளையும் வாரிச்சுருட்டிடலாங்கிர நினைப்புல இருக்காரு!

6.    என் வொய்ஃபோட பலவருஷ ஆசை இன்னிக்கு பத்து பைசா செலவில்லாம் நடந்துருச்சு…!
   எப்படி…! எந்த ஆசை..?
போட்டுல போகணுங்கிற ஆசைதான்!

7.   பொண்ணு வீட்டுக்காரங்க வேளச்சேரிதான்…! அதுக்காக வரதட்சணையா ஒரு போட் கேக்கறது எல்லாம் ரொம்ப
ஓவரா இல்லையா?

8.   வெளிநாட்டில் எல்லாம் நதிகளில்தான் நகரம் அமைக்கின்றனர்…! நமது தலைவர் வித்தியாசமாய் சிந்தித்தார் அதற்காகத்தான் இப்படி நதியை நகருக்குள் கொண்டுவந்திருக்கிறார்.. இத்தகு புரட்சியை செய்த தலைவரை பாராட்டாமல்…. இகழ்கிறீர்களே…!

9.   ஏரிக்கும் ஏரியாவுக்கும் என்ன வித்தியாசம்?
தண்ணியே நிறையாம இருக்கறது ஏரி! முழுக்க தண்ணி நிறைஞ்சி இருக்கறது ஏரியா!


10. நம்ம தலைவர் எதையும் வித்தியாசமாத்தான் செய்வாரு…!
  என்ன செஞ்சாரு…?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீன்பிடிக்க தூண்டில் இலவசமா கொடுத்திருக்காரு…!

11. இந்த தடவை ரமணன் மேல மக்கள் ரொம்ப கோபமா இருக்காங்களா ஏன்?
அவர் சொல்படி மழை பேய்ஞ்சிருச்சே!

12.  வானிலை அறிக்கை சொல்லியும் ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலை..?
ரமணன் சொல்லி என்னிக்கு மழைபேஞ்சிருக்குன்னு நினைச்சிட்டோம் சார்!

13.  மழையிலே பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க பள்ளிக்கூடத்துக்கு போன தலைவர் ஏன் கண் கலங்கிறார்…?
  வாழ்க்கையிலே முத முறையா இப்பத்தான் பள்ளிக்கூடத்துக்குள்ளே நுழையறாராம்!

14.  நம்ம தலைவர்  ‘பச்சை மண்ணு’ன்னு சொன்னா ஒத்துக்கலையே இப்ப பார்..!
   என்ன செஞ்சார்?
மக்கள் நல கூட்டணின்னு சொல்றாங்களே அவங்களுக்கு எத்தனை மக்கள்னு கேக்கிறாரு!

15.  எண்ணெய் கம்பெனியிலே ரெய்டுக்கு போனாங்களே என்ன ஆச்சாம்?
  கசக்கி பிழிஞ்சிட்டாங்களாம்!

16. தலைவரே ஊரே வெள்ளக் காடா இருக்குது…!
   எங்க இருக்குது? அழிச்சி ப்ளாட் போட்டுடலாம்!


17.  பேட்டாவுக்கும் டேட்டாவுக்கும் என்ன வித்தியாசம்?
  கல்யாண ,மண்டபத்துல பேட்டாவை திருடுவாங்க! நெட்வொர்க் கம்பெனிக்காரங்க டேட்டாவை திருடுவாங்க!

18. கோட்டைக் காவலில் காவலர்கள் தூங்கிவிட்டார்களாம்!
  அப்புறம் என்ன?
எதிரி அடித்த அடியில் மன்னரிம் முகம் வீங்கிவிட்டது!

19.  அந்த தலைவர் இந்தியக் குடிமகன் இல்லைன்னு எப்படி சொல்றீங்க?
  அவரு எப்பவு ஃபாரின் சரக்குத்தான் அடிப்பாராம்!

20.   உங்க தலைவர் எப்பவும் அடிச்சிகிட்டே இருப்பாரா?
   ஆமாம் சரக்கும் அடிப்பார் அப்பப்ப மாட்டிறவங்களையும் அடிப்பார்!



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. தலைப்பை போல இல்லை
    நிறையச் சிரித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அதெப்படி நண்பரே காலத்துக்கு தகுந்தாற்ப்போல் உடனடி நகைச்சுவை கொடுக்கின்றீர்கள்...

    ReplyDelete
  3. தளிர்,

    அருமை.

    அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தவை:11,12&13.

    கோ

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா

    நகைச்சுவை அற்புதமாக உள்ளது சிரித்துமகிழ்ந்தேன்.... வாழ்த்துக்கள்.ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. அனைத்ஹ்டையும் ரசித்தோம் என்றாலும் 11,12,13 செம ...

    ReplyDelete
  6. ரசித்தேன்
    சிரித்தேன்நண்பரே
    நன்றி

    ReplyDelete
  7. வழக்கம் போல் அனைத்தும் அருமை. நன்றி.

    ReplyDelete
  8. வெள்ளமாய் ஜோக்ஸ் மழை!

    ReplyDelete
  9. சிரிப்பு வெடிக்கு உங்களிடம் வரணும் ஐயா மழை பற்றி தூக்கல் கடிகள்)))

    ReplyDelete
  10. அனைத்தும் அருமை. ரசித்தேன் சுரேஷ்.

    ReplyDelete
  11. இந்த வெள்ளகாலத்துக்கு ஏற்ற நகைச்சுவைப் பதிவு. அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2