மழை! ஹைக்கூக்கள்!

மழை ஹைக்கூக்கள்!



நள்ளிரவு
கதவைத் தட்டுகிறது!
மழைத்துளி!

பூத்ததும் கவர்ந்துகொண்டது
பூமி!
மரமல்லி!

ஈரம்பட்ட சுவர்கள்
இறுக்கமாய் பிடித்துக்கொண்டது
பாசி!

ஓயாமல் பாடிய தவளைகள்!
ஓய்ந்திருந்தது
ஐப்பசி மழை!

நோன்பு நூற்கையில்
தவறாமல் வந்துவிடுகின்றது
மழை!

மோதல் அதிகரிக்க
விலகிப்போனது மழை!
இடி!

இல்லாத பசியை
இருப்பு காட்டுகின்றது
ஐப்பசித் தூறல்!


மழை அணைத்தது
வெட்கத்தில் தலைகவிழ்ந்தன
மரங்கள்!

ஈரநிலம்
வாசனைபிடித்தன
கொசுக்கள்!

மழை இரவின் வெளிச்சத்தில்
வழி தவறின
வண்டுகள்!

ஓடி விழுகையில்
நாடி வந்தது மகிழ்ச்சி!
மழைநீர்!

 உதிரும் இலைகளை
 கடத்தியது காற்று!
சோகத்தில் மரம்!


மழை கழுவிய பூக்கள்!
மடி தவழ மறுத்தன
தேனிக்கள்!

மழையில்நனைந்த மரங்கள்!
வெப்பம் ஊட்டின
மின்மினிகள்!

மிதிபட்டதும் அழுதன
புற்கள்!
மழை ஈரம்!

மழை ஈரம்
காயப்போட்டது
தேனீர்கடை பஜ்ஜி!

   மழைத் துரத்துகையில்
   ஓடி ஒளிகிறது

   பகல் பொழுது!

   பேரிரைச்சலாய் மழை!
     பேச்சிழந்து வேடிக்கை பார்த்தது
      பூமி!

     உள்ளிருப்பு போராட்டம்!
        காயமறுத்த துணிகள்!
          அடைமழை!

          தூறல் விழுகையில்
               துள்ளி வருகிறது!
             குழந்தைத் தனம்!

          காகிதக் கப்பல்கள்
              கடத்திச் செல்கிறது!
             குழந்தைப்பருவ நினைவுகள்!
   
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமை
    படிக்கப் படிக்க
    சாரல் அடிக்கிறது

    ReplyDelete
  2. மிகவும் அருமை உங்களின் கவிதைகள் மற்றும் நகைச்சுவைகளுக்கு நான் அடிமை

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை...

    ரசித்தேன்...

    ReplyDelete
  4. ஹைக்கூக்கள் எல்லாமே அருமை சுரேஷ்

    ReplyDelete
  5. மழையில் நனைந்தேன்.... தேன்

    ReplyDelete
  6. நனைந்தேன்.

    நடுங்கினேன்.

    சிலிர்த்தேன்.

    நன்றி.

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா
    அனைத்தும் நன்று இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. கவிதைகள், நகைச்சுவைகள், குட்டிக்கதைகள் என அனைத்துத்துறையிலும் போட்டி போட்டுக் கொண்டு எழுதும் தங்களின் திறன் வியக்க வாக்கிறது. பாராட்டுகள்.

    ReplyDelete
  9. உள்ளிறுப்புப் போராட்டம்..காய மறுத்த துணிகள்...அருமை....மழையோடு விளையாடியதைப் போன்ற ஒரு உணர்வு

    ReplyDelete
  10. ஆஹா மழை சூப்பரா பெய்திருக்கு...

    தூறல் விழுகையில்
    துள்ளி வருகிறது!
    குழந்தைத் தனம்!

    காகிதக் கப்பல்கள்
    கடத்திச் செல்கிறது!
    குழந்தைப்பருவ நினைவுகள்! அருமை அருமை சுரேஷ்...ஹைக்கூ மழை!

    ReplyDelete
  11. அருமை. ஒவ்வொன்றும் சிறப்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  12. சிறப்பான ஹைக்கூ கவிதைகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2