பார்வை!

பார்வை!


அந்த கல்லூரி பேருந்து நிறுத்தம் முன் கல்லூரிப் பெண்களின் கூட்டம் குவிந்துகிடந்தது. தற்கால பேஷணுக்கு ஏற்ப விதவிதமான ஆடைகளில் விதவிதமான சிகை, முக அலங்காரத்துடன் ஏகப்பட்ட கனவுகளை சுமந்த அந்த இளம்பெண்கள்களின் கண்கள் எதையோ மேய்ந்து கொண்டிருந்தன.

   சற்றுத்தள்ளி எதிர் பேருந்து நிறுத்தத்தில் சில கல்லூரி மாணவர்கள் இந்த பெண்களை பார்ப்பதற்கென்றே காத்துநின்றார்கள். “ என் ஆளையே காணலையேடா!” ”பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கா பாரு எவ்வளோ திமிரு!” “ ஒரு தடவை கூட திரும்பி பார்க்க மாட்டேங்கிறாடா! என்று கலவைகளாய் அவர்கள் தங்கள் செல்போன்களை தடவியபடியே பேசிக்கொண்டு இருந்தனர்.

   “ விட்டா அப்படியே ஆளையே கடிச்சு சாப்பிட்டுருவானுங்க!” அவனுங்க பார்வையே சரியில்லை! நம்ம பஸ் ஏறற வரைக்கும் பார்வையிலேயே கற்பழிச்சிருவானுங்க! இதொ பாருடி இவனுக்கு பெரிய சிவகார்த்திகேயன்னு நினைப்பு!  ஒண்ணு பாரு எப்படி பேண்ட்டை கிழிச்சிக்கிட்டு நிக்குது! பெண்களும் அவர்களுக்கு சளைக்காமல் கமெண்ட்களை அள்ளி வீசிக்கொண்டு காதில் இயர்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

   “ ஏய் லீலா! அதோ பாருடி ஒரு பெருசு உன்னையே வைச்ச கண்ணு வைக்காம பார்க்குது!”

    “ உன் அழகு அந்த பெருசையும் சுண்டி இழுக்குது பார்த்தியா!”
    “ விட்டா அதுங்கூட டூயட் பாட சொல்லுவீங்க போல இருக்கே!”

   “இல்லைடி இத்தனை பேர் இருக்கோம்! அது உன்னையே முறைச்சு முறைச்சு பார்க்குது! அதும் பார்வையே சரியா இல்லையேடி!”

      ”இத்தனை பசங்க நிற்கறானுங்க! அவனுங்களுக்கு வராத தைரியம்! இந்த பெருசுக்கு எப்படி? எல்லாம் முன் அனுபவமா இருக்குமோ? “

  கூட இருந்த லீனாவின் தோழிகள் கிண்டல் செய்ய ,  “என்னடி! ரொம்பத்தான் ஓட்டறீங்க! இப்ப பாருங்க அந்த பெரிசை நான் என்ன செய்ய போறென்னு!”
   அதற்குள் அந்த பெரியவரே இவர்களை நோக்கி வந்தார்.

     “என்னடி தைரியமா நம்மளை நோக்கி வருது!”

    “முறைச்சு முறைச்சு பார்த்ததும் இல்லாம கிட்டவே வருதா இன்னிக்கு ஒரு கை பார்த்துடலாம்!”

      அந்த பெரியவர், இவர்களிடம் வந்தார், “அம்மா!” என்று லீனாவை கூப்பிட்டார்.

    “ யோவ்! உனக்கென்ன நான் அம்மாவா?”

    அவர் சற்று அதிர்ந்துதான் போனார். கொஞ்சம் தயங்கி நிற்க,

   “என்னய்யா? என்ன வேணும்! நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன்! அப்போதிலிருந்து!”

      “பார்த்தா மாதிரி தெரியலையே மா! “

  “ என்ன பெரிசு நக்கலா!”

   “ நான் ஏன் நக்கல் பண்ணப் போறேன்! நீங்க பாத்திருந்தா நான் ஏன் இங்க நிக்கப் போறேன்!”

      “யோவ்! வயசுல பெரியவனா இருக்கேயின்னு பார்க்கறேன்! அங்க இருந்து முறைச்சு முறைச்சு பார்த்துட்டு இப்ப கிட்டவே வந்து கிண்டல் பண்றியா?”

      “ ஆமாம்மா! நான் பார்த்தேன்! அதனாலதான் கிட்ட வந்தேன்!
  லீனா கோபத்தில் கையை ஓங்க….

    “ இதாம்மா… இப்ப ஓங்கினீங்க பாருங்க! அங்க சட்டை தையல் பிரிஞ்சிருக்கு! அதை கவனிக்காம நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கீங்க! எல்லோரும் ஒரு மாதிரி பேசிக்கறாங்களே தவிர உங்க கிட்ட வந்து சொல்ல மாட்டேங்கிறாங்க! எனக்கும் தயக்கம்தான்! நான் கிராமத்தான்! நம்ம ஊட்டு புள்ளை மாதிரி நினைச்சி உங்க கிட்ட சொல்ல வந்தா…!”

  அப்போதுதான் சட்டைத்தையல் அக்குளில் பிரிந்திருப்பதை லீனா பார்த்தாள். தலை கவிழ்ந்தாள்.

     “சாரி! சாரி !...”

 பராவாயில்லைமா! சீக்கிரமா போய் உடையை மாத்திக்க!  முதல்ல இதை போர்த்திக்க என்று தன் பையில் இருந்து ஒரு துண்டை எடுத்து நீட்ட

லீனாவின் கண்களில் நீர் துளிர்த்தது!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

      

Comments

 1. எதையும் அவசரப்பட்டு முடிவு செய்யக்கூடாது...

  ReplyDelete
 2. முடிவை யூகித்தேன்.

  இதழ்களுக்கு அனுப்பலாமே!!

  நன்றி

  ReplyDelete
 3. கிழிசல் கூடத் தெரியாமல் இன்றைய நவநாகரீக நங்கையர் இருக்கிறார்கள்...

  ReplyDelete
 4. நல்ல கதை! பார்வைகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பதைப் புரிந்து கொண்டால் நல்லபார்வையையும் புரிந்து கொண்டுவிட முடியும்தான்....

  ReplyDelete
 5. நல்ல கதை. முடிவை நான் வேறுவிதமாக கணித்திருந்தேன். இது பத்திரிகையில் வெளிவந்ததா..?

  ReplyDelete
 6. வணக்கம்
  ஐயா
  வித்தியாசமான சிந்தனை.. நன்றாக உள்ளது முடிவு ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. அதுவும் பேஷன் தான் என சொல்லவில்லையோ! சொல்ல வந்த கருத்து அருமை.

  ReplyDelete
 8. பார்வைகள் பல விதம்
  அருமையான கதை நண்பரே
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அவசரக்காரர்களுக்கு புத்தி மட்டு என்பது இதுதானோ? பெரியவர் மனதில் பதிந்துவிட்டார்.

  ReplyDelete
 10. ம்ம் நல்லா இருக்கு,

  ReplyDelete
 11. எல்லாப் பார்வையையும் ஒரே மாதிரி நினைக்கக் கூடாது!

  ReplyDelete
 12. கதை நகர்வு நன்று
  படிக்க தூண்டும் பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 13. சிந்திக்க வேண்டும் சில நங்கையர்கள் என்பதை சொல்லிய விதம் அழகு.

  ReplyDelete
 14. பார்வைகள் - அனைத்துமே தவறல்ல....

  நல்ல கதை. பாராட்டுகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

வெற்றி உன் பக்கம்! கவிதை!