கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 54
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி
54
1.
தலைவர்
சந்தா கட்டாமலே மாசா மாசம் பத்திரிக்கை ரெகுலரா வந்திடுதா? என்ன பத்திரிக்கை?
வேற எது? குற்றப்பத்திரிக்கைத்தான்!
2.
தலைவர்
பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்திட்டாராமே!
பின்னே பொதுக்குழுவை கூட்டி
ஒருமணி நேரம் ஆகியும் ஒருத்தரும் வராம அவர்மட்டும் காத்திருந்தது போதும்னு எழுந்து
போயிட்டாரு!
3.
நம்ம
கட்சி கொள்கைகளை அடமானம் வைச்சாவது கட்சியை நான் காப்பாத்துவேன்…!
யாரும் அடமானம் வைச்சுக்க மாட்டாங்களே
தலைவரே!
4.
மாப்பிள்ளை
ஒரு ரவுடின்னு முதலிலேயே ஏன் சொல்லலை?
நிறைய அடிபட்டு முன்னேறி வந்திருக்காருன்னு
சொன்னேனே…!
5.
ஆனாலும்
தலைவருக்கு நக்கல் அதிகம்தான்…!
எப்படி சொல்றே?
தொடர் மழையிலே வீடெல்லாம் தண்ணியிலே
மிதக்குது தலைவரேன்னு சொன்னா நாடே தண்ணியிலே மிதக்கறப்ப இதென்ன அதிசயம்?ம்னு கேக்கறாரு!
6.
அரண்மனை
நர்த்தகியை மணந்தபின்னர் மன்னர் எப்படி இருக்கிறார்?
ஆட்டுவித்தபடி எல்லாம் ஆடிக்கொண்டு இருக்கிறார்!
7.
தலைவர்
எப்பவுமே ஏடாகூடமா அறிக்கை விட்டு மாட்டிகிறார்!
என்ன பண்ணார்?
விலைவாசி உயர்வை எட்டிப்பிடிக்க
வீட்டுக்கொரு ஏணி இலவசமாக வழங்கப்படும்னு சொல்லி அறிக்கை விட்டிருக்கார்!
8.
அரசவையில்
என்னை புகழச்சொன்னால் ஏன் இப்படி தடுமாறுகிறிர்கள் புலவரே!
சான்றோர் நிறைந்த சபையில் பொய்பேச
கூச்சமாக இருக்கிறது மன்னா!
9.
எப்பவும்
‘லொடலொட’ன்னு பேசிட்டு இருப்பானே உங்க பையன் இப்ப எப்படி இருக்கான்?
கல்யாணம் பண்ணி வைச்சதும் வாயைத்
திறக்கவே மாட்டேங்கிறான்!
10. படத்துல நாலு பாட்டுல கிளாமரா ஆடிட்டு ஹீரோவை
நாலு சீன்ல ரொமான்ஸா லுக் விடறாங்களே அது யாரு?
அவங்கதான் அந்த படத்தோட ஹீரோயின்!
11. பழைய தமிழ் படத்தையே காப்பி அடிச்சு இந்த படத்தை
எடுத்திருக்கிறதா எல்லோரும் சொல்றாங்களே நீங்க அதப்பத்தி ஏதாவது சொல்லவிரும்பறீங்களா
டைரக்டர் சார்?
ஹாலிவுட் படத்தை காப்பி அடிச்சு எடுத்ததா யாரும்
சொல்லக்கூடாதுங்கிறதுக்காக எடுக்கப்பட்ட ஒரு சிறு முயற்சிதாங்க இது!
12. அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றீங்க?
பி.எம் ரிப்போர்ட் கேட்டப்போ அதை ஏ.எம் மில தர முடியாது போய் பி.எம்ல வாங்கன்னு
சொல்றாரே!
13. தலைவர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்ததுமே காலியாயிருச்சு!
என்னது..?
பிரியாணிதான்!
14. அமைச்சரே தளபதியார் அப்படி என்ன குடி முழுகிப்போய்விடுகிற
காரியமாக வெளியே சென்றுள்ளார்?
டாஸ்மாக்கிற்குதான் சென்றுள்ளார் மன்னா!
15. தீபாவளியும் அதுவுமா கைவலியா போயிருச்சா
ஏன்?
கரண்ட் போனதாலே மாவு எல்லாம்
உரல்ல ருப்ப வேண்டியதா போச்சே…!
16. மன்னர் ஏன் வைத்தியர் மேல் கோபமாக இருக்கிறார்?
‘கட்டிப்புடி” வைத்தியம் பார்க்கிறேன் என்று அந்தப்புர
பெண்களிடம் சொல்லி இருக்கிறாராம்!
17. கமலா கோடியில ஒருத்தின்னு பெருமையா சொல்லிக்கிறாளே
என்ன விஷயம்?
தீபாவளிக்கு நகை வாங்கினதைத்தான்
இப்படி பீத்திக்கிறா!
18. தலைவர் இப்ப எதுக்கு சபையில இருந்து வெளிநடப்பு
செய்யணும்னு சொல்றாரு…?
அப்பத்தானே டிவியிலே அவரோட முகத்தை காட்டுவாங்க!
19. புலவரின் பாட்டில் மன்னர் அப்படியே மயங்கிவிட்டாராமே…!
அப்புறம்!
அரண்மணை வைத்தியர் வந்ததும்
குணப்படுத்தவேண்டியதா போச்சு!
20. மன்னர் எதிரிக்கு எப்பவும் “மிஸ்டு கால்’ தான் கொடுப்பாராமே!
எதிரியை ஏமாற்றிவிட்டு மிஸ்ஸாகி போவதைத்தான் குறிப்பால்
உணர்த்துகிறாராம்!
21. நான் வீட்டு வேலைங்களை ‘இழுத்துப் போட்டு’ செஞ்சால்
என் மனைவிக்கு பிடிக்கவே பிடிக்காது..!
பலே… அப்புறம்…!
உடனடியா செஞ்சு முடிக்கணும்னு கண்டிப்பா சொல்லிருவா!
22. முதல்நாள்.... முதல் கையெழுத்து...!
தலைவரே முதியோர் கல்வியிலே கையெழுத்துப்போட கத்துக்கிட்டதுக்கா இத்தனை பில்டப்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!
22வது ஜோக் சூப்பர் சகோ
ReplyDeleteஎல்லாம் அருமை அதிலும் நான்கும் எட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி !
ReplyDeleteகொஞ்சம் சிரிங்க என்று சொல்லிவிட்டு நிறையவே சிரிக்க வைக்கிறீங்க அது நியாமா?
ReplyDeleteஹாஹா சிரிப்பு மழை சகோ
ReplyDelete1,3,20, 22 மிக ரசித்தேன் :-)))))
சிரிப்போ சிரிப்பு
ReplyDeleteஹா....ஹா....ஹா.... ரசித்தேன்.
ReplyDeleteசென்னையில் மழை...
ReplyDeleteஇங்கு உங்களின் சிரிப்பு மழை...
ரசித்தேன்...
ஹாஸ்யம்! ஹா- ஹா!
ReplyDeleteஅருமை நண்பரே அனைத்தும் ரசித்தேன்.
நட்புடன்,
புதுவை வேலு
சிரித்தேன் ரசித்தேன் நண்பரே
ReplyDeleteநன்றி
வணக்கம்
ReplyDeleteஐயா
அனைத்தும் அருமையாக உள்ளது சிரித்து மகிழ்ந்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஹஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் சுரேஷ்...
ReplyDeleteவழக்கம்போல அனைத்தும் அருமை. நன்றி.
ReplyDeleteசரவெடிதான் நண்பரே வாழ்த்துகள்
ReplyDeletesuper!
ReplyDeleteகொஞ்சம் சிந்தியுங்க
ReplyDeleteபின்
கொஞ்சம் சிரியுங்க
சிறந்த பகிர்வு
““““““தலைவர் உண்ணாவிரத பந்தலுக்கு வந்ததுமே காலியாயிருச்சு!
ReplyDeleteஎன்னது..?
பிரியாணிதான்!““““““
ஒருவேளை உண்ணாவிரதத்தை முடித்துவைக்க வந்தாரோ:)
அனைத்தும் ரசனை.
ஹ ஹ ஹா
அனைத்தும் ரசித்தேன் நண்பரே. நன்றி.
ReplyDelete