நிறைய மறுக்கும் தீபாவளி!

   

பெட்டிக்கடை தாத்தாவிடம் பத்து ரூபாய்க்கு
பை நிறைய வாங்கிய பட்டாசுகளை
மனம் நிறைய வெடித்தபடி அம்மா சுட்ட அதிரசம் முறுக்குகளை அசைப்போட்டு அடுத்தவருக்கும் கொடுத்த மழலைத் தீபாவளி
நினைவுகளை அசைபோட
வருடாவருடம் வந்துபோகிறது தீபாவளி!

ஒவ்வோர்வருடமும் ஊரே விழா எடுக்க
பத்துவயது பால்ய தீபாவளி மீண்டும் வராதோ
என்று ஏக்கம் துரத்துகிறது!
அடுத்தநாள் பரிட்சைக்கு தயாராகணுமே என்று
அவதி அவதியாய் பட்டாசு கொளுத்த ஆரம்பித்த
விடலைப்பருவ தீபாவளியில் துவங்கிய
துன்ப தீபாவளி விடாமல் துரத்துகிறது!

விலைவாசி ஏற்றமும் விளைபொருள் பற்றாக்குறையும்
அட்வான்ஸ் கிடைக்கா அலுப்பும்
பட்டாடை எடுக்கவில்லை என்ற மனைவியின் சலிப்பும்
பட்டாசு பத்தவில்லை என்ற பிள்ளைகள் வருத்தமும்
சொந்த ஊருக்கு வரவில்லை என்ற பெற்றோர்கள் பேச்சும்
முற்றே அடையாமல் தொடர
முழுமனதோடு ஒன்றாமல் சானல்கள் தாவி
முழுப்படமும் பார்க்காமல் முன்போல் நிறையாமல்
நிறைவு பெறுகிறது நீண்டுவரும் தீபாவளிகள்!


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Comments

 1. மனிதர்களை விட்டு என்று பொருட்களோடு உறவு கொள்ளத் தொடங்கினோமோ அன்றே நமது சந்தோஷங்களும் தொலைந்து போனது.
  அருமையான நினைவுகள்!

  ReplyDelete
 2. தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 3. அருமையான பகிர்வு நண்பரே.. ரசித்தேன்
  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. மிகச் சரியான அதுவும் அந்தக் கடைசி பாரா வரிகள்.....உண்மைதானே...தமிழ்நாடே நாளை டிவி சேனல்கள் முன்புதான்...ம்ம்ம் நடிகர் நடிகைகளின் வாழ்த்துகளைப் பெற வேண்டாமா?!!!!!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  குழந்தைகளுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். வலையுலகம் முழுவதும் அவர்களை வாழ்த்துகின்றது என்று..

  ReplyDelete
 5. அருமை...

  இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. மனதை தொட்ட, சுட்ட கவிதை !!!

  மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
 8. உண்மைதான்.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!

  ReplyDelete
 9. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் சகோ

  ReplyDelete
 11. எங்கள் மன நிலையை அப்படியே
  பதிவு செய்ததைப் போலிருந்தது

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்
  அனைவருக்கும் இனிய தீபவளித் திரு நாள்
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. இனி வரும் தலைமுறை தீபாவளியன்று
  எண்ணெய் தேய்த்து குளிப்பதையே
  எதற்கென்று கேள்வி கேட்டு
  அந்த வழக்கத்திற்க்கும்
  எண்ணெய் தேய்த்து குளித்து விடுவார்கள் போல...
  என்ன செய்ய!?.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வெற்றி உன் பக்கம்! கவிதை!

உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!