யார் கடவுள்?
யார் கடவுள்?
உலகம் உதித்ததிலிருந்தே
உயிர்பெற்றிருக்கும் ஓர்
கேள்வி
யார் கடவுள்?
கடவுள் உண்டென்றால்
சொல்லுங்கள் யார் கடவுள்?
பகுத்தறிவாளர்கள்
தர்க்கவியலாளர்கள்
கடவுள் மறுப்பாளர்கள்
இன்னும் பலரும் கேட்கிறார்கள்
யார் கடவுள்?
விடைதான் கிடைத்த பாடில்லை!
ஆன்மீக வாதிகள்!
ஆண்டவனைத் தொழுபவர்கள்!
இறை நம்பிக்கை மிகுந்தோர்!
சமய குருமார்கள்!
சாத்திரம் படைப்பவர்கள்!
வேதாந்திகள்! ஞானிகள் என்று
எல்லோரும் ஏதோ ஒன்றை “கடவுள்”
என்று அறுதியிட்டு
சொன்னாலும்,
அது எது? எப்படி? ஏன்? என்று
விவரம் கேட்கிறது
பகுத்தறிவாளர்கள் குழு!
கடவுள்தான் மனிதனைப்
படைத்தானா?
அவன் தான் எல்லோரையும்
காத்தானா?
அப்படியெனில் ஏன் ஏற்ற
தாழ்வு?
எதற்கு அடித்துக் கொள்ள
வேண்டும்!
பஞ்சமும் பசியும்,
பட்டினியும்! வெள்ளமும் புயலும்!
விபத்தும் கொலையும்
கொடுமையும்
ஏன் தொடர வேண்டும்!
நல்லவர்கள் கெட கெட்டவர்கள்
வாழ்வது ஏன்?
இப்படியொரு கேள்வி எழுகிறது!
கடவுள் உண்டெண்றால் நீ
பார்த்திருக்கிறாயா?
பார்க்க முடியாது! உணரத்தான்
முடியுமென்றால்
உணர்ந்திருக்கிறாயா? இப்படி
நீள்கிறது விவாதங்கள்!
கடவுளுக்கு ஏது மதம்? ஏது
பேதம்? ஏது விலை?
கடவுள் பெயரால் நடக்கிறது
கொள்ளை!
நாத்திகம் பேசுபவர்களும்
நடத்துகிறார்கள் கொள்ளை!
ஆத்திகம் வளர்க்கிறேன் என்று
அடிக்கிறார்கள் லாபம்!
இத்தனைக்கும் காரணம் கடவுள்!
கடவுளை மறுத்து ஒரு கூட்டம்!
கடவுளை நம்பும் ஒரு கூட்டம்!
இடையில் சிக்குது ஒரு
கூட்டம்!
உன்னுள்ளே இருக்கிறான்
கடவுள்!
அதுதான் அந்த சொல்லின்
திறவுகோல்!
ஒவ்வொரு உயிரினுள்ளும் ஒரு
கடவுள் இருக்கிறான்!
பிற உயிரை மதிக்கையில்
பிறப்பெடுக்கிறான்!
கருணை, இரக்கம்,
சுரக்கும்போது அவன்
கடவுள் ஆகிறான்!
இவை வற்றிப் போகையில் வெறும்
கட்டை ஆகிறான்!
நம்மை மீறிய சக்தி ஒன்று
நம்மை ஆள்கிறது!
இம்மையில் இதை கடவுள் என்று
சொல்லி
கண்ணில் வைத்து
போற்றுகின்றோம்!
உன்னில் என்ன தோன்றுதோ அதை
படைத்து
மண்ணில் விதைக்கிறோம்!
பூசையென்பதும் படையல்
என்பதும்
நேர்த்திஎன்பதும்
கோவிலெடுப்பதும் கொடை கொடுப்பதும் மனிதன் படைத்தது!
இதை கொடுத்தால் இதை தருவேன்
என்ற புத்தி
மனிதனுடையது! படைத்தவனுக்கு படையல் வைப்பதெல்லாம்
மனிதன் படைப்பு!
எல்லாம் அவனே யாகில் நீயும்
அவனே!
அதை உணர்ந்தால் நீயும்
கடவுள்!
கடவுள் யாரென்று கேட்பவனும்
கடவுள்!
கடவுள் இருக்கிறார் என்பவனும்
கடவுள்!
போற்றுபவனும் கடவுள்!
தூற்றுபவனும் கடவுள்!
எழுதுபவனும் கடவுள்!
வாசிப்பவனும் கடவுள்!
ஆம்! நீயும் கடவுள்! நானும்
கடவுள்!
டிஸ்கி} ஜோதிஜி அவர்கள்
ஆன்மீகத்தை குறித்து எழுத மீண்டும் கடவுள் குறித்த விவாதங்கள் களை கட்டத் துவங்கி
விட்டது! ஏதோ என் சிற்றறிவை தட்டியதில் விழுந்தது இந்த கவிதை! ஏதோ நம்மாலே
முடிஞ்சது!
தங்கள் வருகைக்கு நன்றி!
பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
நல்லது...(!)
ReplyDeleteஉங்க கடவுளை எனக்கும் பிடிக்கிறது !
ReplyDeleteயார் கடவுள்....
ReplyDeleteஉங்க கேள்வியும் தேடலும். நல்லா இருக்கு
அன்பே தெய்வம்
ReplyDeleteஎல்லாம் அவனே யாகில் நீயும் அவனே!//
ReplyDeleteஅருமை.
அன்பே தெய்வம் ! மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பார்கள்.