கணவரை காக்கும் காரடையான் நோன்பு
கணவரை காக்கும் காரடையான் நோன்பு
ஒவ்வொரு வருடமும் மாசி மாதமும் பங்குனி மாதமும் சங்கமிக்கும்
வேளையில் சுமங்கலிப்பெண்கள் தாங்கள் சுமங்கலியாக இருக்கவும் கணவரின் நலம்
காக்கவும் சாவித்திரி தேவியை வழிபட்டு நோன்பு இருப்பது காரடையான் நோன்பு
எனப்படுகிறது. சாவித்திரி நோன்பு என்றும் இது வழங்கப்படுகிறது.
சாவித்திரி நோன்பு மற்ற
நோன்புகளை போல் அல்லாது ஒவ்வொரு வருடமும் ஒரு நேரத்தில் நூற்க வேண்டி வரும். மற்ற
நோன்புகள் காலை அல்லது மாலையில் நூற்பர். சாவித்திரி நோன்பானது மாசியும்
பங்குனியும் சங்கமிக்கும் சங்க்ரமண காலத்தில் அனுஷ்டிக்க படுவதால் இது வருடம்
தோறும் காலம் மாறி வரும். அதிகாலை, இரவு, மதியம் காலை என மாறி மாறி வரும். தமிழ்
பஞ்சாங்கப்படி சூரியன் ஒவ்வொரு ராசியில் சங்கமிக்கும் காலம் மாதப்பிறப்பு
எனப்படுகிறது. மேஷமாசம் என்பது சித்திரை மேஷ ராசியில் சூரியன் சேரும் காலம்
சித்திரைமாதப்பிறப்பு ஆகும் அதே போல மீனமாசம் பங்குனி. இந்த மீனத்தில் சூரியன்
சேரும் காலம் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று இரவு 10-30 மணிக்கு
இந்த நோன்பு அனுஷ்டிக்க உகந்த நேரமாகும்.
இந்த விரதம் அனுஷ்டிக்கும் பெண்கள் தலைக்
குளித்து தூய ஆடை அணிந்து முழு விரதமாய் இருந்து (இயலாதவர்கள் பால் பழம் மட்டும்
அருந்தி) விரத நேரத்தில் பூஜை அறையில் சாவித்திரி தேவியை நினைத்து அந்த படம்
அல்லது கலசத்தில் சாவித்திரி தேவியை ஆவாஹனம் செய்து பூஜைகள் செய்து காரடையும்
வெண்ணையும் படைத்து வழிபட வேண்டும். மஞ்சள் கயிறால் ஆன நோன்பு கயிறை கலசத்தில்
சார்த்தி பூஜைகள் முடிந்த வுடன் கணவனிடம் கொடுத்து கையில் கட்டிக்கொள்ளவேண்டும்.
வீட்டுப் பெரியவர்கள் இருந்தால் அவர்களிடம் கொடுத்து கட்டிக்கொள்ளலாம். பின்னர்
பெரியவர்களையும் கணவர்களையும் நமஸ்காரம் செய்து விரதம் முடிக்க வேண்டும். அன்று
இரவு காரடைகளை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
இந்த நோன்பை சாவித்திரி
அனுஷ்டித்து கணவனின் உயிர், இழந்த ராஜ்யம் உட்பட பல்வேறு பாக்கியங்களை பெற்றாள்.
இந்த கதை அனைவரும் அறிந்திருப்பீர்! அறியாதவர்கள் இங்கு சென்று பார்க்க: சாவித்திரி விரதம்
காரடை செய்யும் முறை:
தேவையான பொருட்கள்: வறுத்த பச்சரிசி மாவு 2 கப்
காராமணி 1\2 கப், முழு துவரை, 1\4 கப் வெல்லம் பொடித்தது 2கப் ஏலக்காய்ப் பொடி
தேவையான அளவு, தேவைப்படின் முந்திரி, தேங்காய் துண்டுகள் கீறியது 1\2 கப்.
செய்முறை: காராமணி துவரை அரை மணி ஊற வைத்து வடிகட்டி வேக வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் இரண்டுகப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை போட்டு
கொதிக்கவிடவும். வெல்லம் நீரில் நன்கு கரைந்ததும் பச்சரிசிமாவை வெல்லத்தில்
சேர்த்து கிளறவும் சிறிது சிறிதாக மாவை ஊற்றி கிளறிக்கொண்டே வரவும். அப்படி
கிளறும் சமயம் காராமணி, தேங்காய்கீறல், துவரை, ஏலப்பொடியும் சேர்த்து கிளறவும்.
வெந்தவுடன் இறக்கி வைத்து ஒரு வாழை இலையில் அடை மாதிரி தட்டவும். பின்னர் இட்லி பாத்திரத்தில்
இந்த அடைகளை வைத்து பத்து நிமிடம் வேக
வைக்கவும். பின்னர் இறக்கவும். இந்த
முறையில் வெல்லம் சேர்க்காது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து அடை செய்வதும் உண்டு.
கொழுக்கட்டை மாதிரிதான்.
இந்த அடைகளுக்கு சைட் டிஷ்
வெண்ணெய் . வெண்ணெயுடன் இந்த அடை சாப்பிட சூப்பராக இருக்கும்.
காரடையான் நோன்பு அன்று சாவித்திரி தேவிக்கு இந்த அடை படைத்து உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்!
ஒருக்காலும் என் கணவர் என்னை பிரியாதிருக்க வேண்டும் என்று சொல்லி நோன்பு கயிறு
அணிவர்.
மாசிக்கயிறு பாசி படியும் என்று சொலவடை உண்டு. இந்த நோன்பு தினத்தில்
நல்ல நேரம் பார்த்து சுமங்கலிப் பெண்கள் தங்களுடைய மாங்கல்ய கயிறையும் மாற்றிக்
கொள்வார்கள்.
சாவித்திரி காட்டில் இந்த விரதம் அனுஷ்டித்தமையால் அங்கு கிடைத்த
கார் அரிசி, காராமணி போன்றவைகளை கொண்டு இந்த அடை தயாரித்து வழிபட்டாள். அதுவே
இப்போதும் படைக்கப்படுகிறது.
இந்த நல்ல விரதத்தை எல்லோரும் அனுஷ்டித்து எல்லா நலமும் பெறுவோமாக!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
அருமையான படைப்பு இன்று வெள்ளிக் கிழமை ஆதலால் தான் இன்று என்
ReplyDeleteவலையில் பிரிவின் துயரை உணர்த்திக் கவிதை வடித்தேன் இது அரங்கில் ஏறிய அடுத்த கணமே இன்றைய விரதம் சார்ந்த தகவலைக் கவிதையாக வடிக்க நினைத்திருந்தேன் அதையே தங்களின் தளத்தில் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியும் அடைந்தேன் .வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே என்றென்றும் இது போன்ற சிறந்த நல் ஆக்கங்கள் தொடரட்டும் .
http://geetha-sambasivam.blogspot.in/2014/03/blog-post_12.html - அம்மாவின் முறைப்படி செய்து பார்த்தோம்... ருசித்தோம்... உங்களும் செய்முறையும் நன்று...
ReplyDeleteநல்ல பகிர்வு......
ReplyDeleteகாரடையான் நோன்பு அடை - அதிலும் வெல்ல அடை எனக்கும் பிடிக்கும்....
அண்ணாவின் பகிர்வு அருமை!
ReplyDeleteகாரடையான் நோன்பு
ReplyDeleteஅறிந்தேன்
நன்றி நண்பரே
காரடையான் நோன்பு கதையும், நோன்பு அடை செய்முறையும் அருமை.
ReplyDeleteகாரடையான் நோன்பு பற்றி தெரிந்துக்கொள்ள முடிந்தது. நன்றி.
ReplyDelete