மருமகளுங்க மாமியாரை தெய்வமா நினைச்சா என்ன அர்த்தம்? ஜோக்ஸ்!

 ஜோக்ஸ்!


 1. தலைவருக்கு குழந்தை மனசு!
அதுக்காக “உம்மா” கொடுத்தாத்தான் கூட்டத்துல பேசுவேன்னு அடம்பிடிக்கிறது நல்லாவா இருக்கு!

2.அவர் அடிக்கடி கட்சி தாவுறார்னு எப்படி சொல்றே?
அவர் வீட்டுல மாசத்துக்கு ஒரு புது கார் நிக்குதே! அதை வைச்சு சொல்றேன்!

 3.அந்த டாக்டர் எந்த ஆபரேஷன் பண்ணாலும் பூஜை பண்ணிட்டுதான் பண்ணுவார்!
அதுக்காக பேஷண்டோட வயித்துல பொட்டுவைச்சு பூ வைச்சு பூஜை பண்றது கொஞ்சம் கூட நல்லால்ல!

 4.தலைவர் ஏன் ரொம்ப அப்செட்டா இருக்கார்!
 கூட்டத்துல யாரோ முத்தமிட்டது அவரோட சம்சாரத்துக்கு தெரிஞ்சிடுச்சாம்!

5. தலைவர் ஏன் ஹெல்மட் போட்டுக்கிட்டு கூட்டத்துக்கு வந்திருக்காரு?
யாராவது கூட்டத்துல எசகு தப்பா முத்தம் கொடுத்திடுவாங்களோன்னு ஒரு பயத்துலதான்!

6.மன்னா! நேற்று நடந்த மல்யுத்த போட்டியில் இளவரசர் எதிரிக்கு பிடி கொடுக்கவில்லை  ?
சபாஷ்! அவன் என் மகன் அல்லவா?
 பிடிகொடுக்காமல் ஓடி ஒளிந்துவிட்டார் என்று சொல்ல வந்தேன் மன்னா!

6.லட்சக்கணக்குல செலவு பண்ணி உங்கப்பா ஒரு உயிருள்ள பொம்மை வாங்கிக் கொடுத்தாரா? அது என்ன பொம்மை?

       அதான்டி! என் புருஷன்!

 7.  நம் மன்னர் எதிரியை கிழிகிழி என்று கிழித்துவிட்டார்!
பலே அப்புறம்?
அப்புறமென்ன எதிரியின் போஸ்டர்கள் ஒன்று கூட மிஞ்சவில்லை!

8. திருடிய குற்றத்திற்காக உன்னை பதினைந்து நாள் காவலில் வைக்க உத்தரவிடுகிறேன்!
நாராயணசாமி மாதிரி பதினைஞ்சி நாள்னு எத்தனை தடவை சொல்லுவீங்க எசமான்? கொஞ்சம் மாத்திச்சொல்லுங்க!

9. அந்தப் புரத்தில் ராணிகளுக்கிடையே என்ன கலாட்டா?
 வெறொன்றுமில்லை இட ஒதுக்கீடு கேட்டுத்தான் போராடுகிறார்கள்!

10.தலைவர் பண்றது கொஞ்சம் கூட சரியா இல்லை!
   ஏன் என்ன ஆச்சு?
  மதுவை ஒழிக்க போராடறேன்னு மதுரைங்கிற பேர்ல இருக்க  ‘மது’வை நீக்கும் வரை போராடப் போறதா அறிவிச்சிருக்காரு!


11.          அவரு போலி ஜோசியர்னு எப்படி சொல்றே?
ஜாதகத்துல 15ல குருவும் 20ல சனியும் இருக்கறதா சொல்றாரே!

12.          தலைவர் உண்ணாவிரதம் அறிவிச்சதும் பக்கத்துல இருந்த எல்லா ஓட்டல்காரங்களுக்கும் மகிழ்ச்சியாயிருச்சா ஏன்?
பார்சல் சாப்பாடு ஆர்டர் கிடைக்குமே அதுக்குதான்!

13.உன் மருமக உன்னை தெய்வமா நினைக்கறாளா? நீ கொடுத்துவச்சவ!
ஊகும் நீ வேற! சாப்பாட்ட தெய்வத்துக்கு காமிக்கறாபோல காமிச்சி அவளே சாப்பிடறான்னு சொல்ல வந்தேன்!

14.          எதிரி மன்னனின் தலையை சீவிவிடுவேன் என்று சூளுரைத்தாரே மன்னர்? செய்தாரா?
  கையில் சீப்புடன் இப்போதுதான் புறப்பட்டுக்கொண்டிருக்கிறார்!

15.          எந்த தைரியத்தில் நீ இந்த குற்றத்தில் ஈடுபட்டாய்?
   ஒரு ஆறுமாசமாவது உள்ளார போட்டு நல்ல சாப்பாடு போடுவீங்க என்ற தைரியத்தில்தான் எஜமான்!

16.          ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுத்துட்டு இருந்தாரே ஒரு தயாரிப்பாளர் இப்ப எப்படி இருக்கார்?
   கோலிவுட் வாசல்லஒரு ரூபா சேஞ்சுக்கு பிச்சை எடுத்துகிட்டு இருக்கார்!


17.          போராளியை அரசியல்கட்சியிலே சேர்த்துக்கிட்டது தப்பா போச்சு!
      ஏன்?
  சீட் இல்லேன்னு சொன்னதும் முற்றுகை போராட்டம் அறிவிக்க ஆரம்பிச்சிட்டார்!

18.          தலைவர்கிட்ட யாரொ நம்ம கட்சி பலவீனமா இருக்குன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கார்!
அப்புறம்?
ஹார்லிக்ஸும் பூஸ்டும் தொண்டர்களுக்கு வாங்கிக் கொடுங்கன்னு சொல்லிட்டார்.

19.நீயெல்லாம் படிச்சு என்னத்தை கிழிக்கப்போறே?ன்னு அடிக்கடி டீச்சர் கேப்பாங்களே இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கே
    போஸ்டரத்தான் கிழிச்சுக்கிட்டு இருக்கேன்! மாநகராட்சியிலே!

20.          சயின்ஸ் டீச்சருக்கும் மேத்ஸ் மாஸ்டருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிருச்சு?
அப்புறம்?
ஒரு வரலாறே படைச்சிட்டாங்க!

21.எதிரி மன்னன் துரத்தி துரத்தி அடித்தும் நமது மன்னருக்கு பெருமை பிடிபடவில்லை!
  எப்படி?
ரன்னிங்கில் நான் தான் பர்ஸ்ட் என்று பெருமை பட்டுக்கொள்கிறாரே!

22.          கொடுத்ததை திருப்பிக்கேட்டா தலைவருக்கு கெட்ட கோவம் வரும்!
அவ்வளவு நல்லவரா?
ஆமாம்! அவர்கிட்ட கடன் கொடுத்து திருப்பி யாரும் வாங்க முடியாது.


(நான் நானேத்தானுங்க சொந்தமா யோசிச்சு எழுதினேனுங்க!)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அத்தனை துணுக்குகளையுமா யோசிச்சு எழுதியிருக்கீங்க? பேஷ்!!பேஷ்!!!
  வாழ்த்துக்கள்.

  ஆமா, இதுக்கெல்லாம் ரூம் போட்டா யோசிப்பீங்க????

  ReplyDelete
 2. அனைத்தும் கலக்கல்.

  சுரேஷ் என்னுடைய வலைப்பூ பற்றி(வலைச்சரத்தில்) குறிப்பிட்டதற்கும், என்னை சந்திக்க விழைவதற்கும் நன்றி.
  விரைவில் சிந்திப்போம்.

  ReplyDelete
 3. #(நான் நானேத்தானுங்க சொந்தமா யோசிச்சு எழுதினேனுங்க!)#
  இருப்பதில் சூப்பர் ஜோக் இதுதான் !
  உங்கள் சிந்தனை எங்களுக்கு சந்தோசத்தை தந்தது !வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 4. கலக்கல் நண்பா.. கடைசி வரி (நானே யோசிச்சது) செம்ம காமெடி.. ! ;-)

  ReplyDelete
 5. அரசியல் கிச்சுகிச்சு அசத்தல் பாராட்டுகள் சுரேஷ்.

  ReplyDelete
 6. மிக மிக அருமை
  படித்துச் சிரித்து மகிழ்ந்தோம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அருமையான நகைச்சுவைத் துணுக்குகள் .வாழ்த்துக்கள் சகோதரா
  மென் மேலும் தங்கள் முயற்சி வெற்றி பெறட்டும் .

  ReplyDelete
 8. நான்.. நானே.. தானுங்க!..
  சொந்தமா யோசிச்சு எழுதினேனுங்க!..

  - இது தாங்க சிகரம்!..

  ReplyDelete
 9. சிரிச்சுட்டேன்

  ReplyDelete
 10. அட... எல்லாமே நீங்க யோசிச்சது தானா ??? நல்லாயிருக்குங்க !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

என்னைக் கவர்ந்த நேரு! குழந்தைகள் தின ஸ்பெஷல்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா?