எது படைப்பு?

எது படைப்பு?


எது படைப்பு? என்று என்னுள்ளே
எழுந்தது ஓர் கேள்வி?
கேட்டால்தானே கிடைக்கும்!
கேட்டுப்பார்த்தேன்! எது படைப்பு?
காலத்தால் அழியாத காவியங்கள்தான்
படைப்பா?
அப்படியானால் எத்தனையோ இலக்கியங்கள்
மண்ணோடு மண்ணாகவோ
தீயுக்கு இரையாகியும் நீரில் மூழ்கியும்
மூச்சை விட்டிருக்குமே! அவை படைப்பு இல்லையா?
அடுத்த கேள்வி எழுந்தது!
பிறக்கும் எல்லாமே படைப்புதான்!
என்று சொல்லவும் முடியவில்லை!
ஆண்டவன் சிருஷ்டி அனைத்துமே படைப்புத்தானே!
நீரும் நிலமும் காற்றும் வானமும்
பறவைகளும் விலங்குகளும் மரங்களும்
செடிகளும் கொடிகளும்
பூச்சிகளும் புழுக்களும் ஏன் மனிதன் கூட
ஓர் மகத்தான படைப்புத்தானே!
ஐயங்கள் அதிகரித்தன!
அப்படியானால் எல்லாம் படைப்பென்றால்
எழுத்துக்களை ஏன் படைப்பு என்கிறோம்?
சிறந்தது என்கிறோம்! மோசம் என்கிறோம்!
நல்லது என்கிறோம்! தீயது என்கிறோம்!
எழுத்து படைப்பானது எப்படி?
ஆண்டவன் சிருஷ்டி இவ்வுலகம்!
சிருஷ்டிக்கப்பட்டவன் சிருஷ்டித்ததோ எழுத்துலகம்!
சிருஷ்டி அனைத்தும் படைப்புத்தானோ?
அடுத்த ஐயம் உதித்தது!
மரமானாலும் விலங்கானாலும் மனிதனாலும்
உயிர் ஒன்றுதான்!
எழுத்திலே நல்லதென்றாலும் தீமையென்றாலும்
 எழுத்து ஒன்றுதான்!
படைப்பிலே குறையிருப்பதில்லை
படர்வதில் பக்குவத்தில் பண்பில் குறையாகி வேறுபடுகிறது!
எழுத்திலே குறையிருப்பதில்லை!
எழுதும் போக்கிலே நோக்கிலே, எண்ணத்திலே
மாறுபட்டு குறையாகிறது!

படைப்புக்கள் ஒன்றுதான்! அதில் பாகுபாடு கிடையாது!
உயிர் ஒன்றுதான் அதில் வேறுபாடு கிடையாது!
உயிரைத் தாங்கும் உடல்தான் வேறுபடுகிறது!
உடலே எண்ணத்தை ஆள்கிறது!
எண்ணம்தான் எது நல்லது என்று தீர்மானிக்கிறது!
நல்லதை எண்ணினால் நன்மை விளைகிறது!
தீயதை எண்ணினால் தீமை விளைகிறது!
பிறப்பில் குற்றமில்லை! வளர்ப்பில்தான்
 வேறுபடுகிறதுபடைப்புக்கள்!
உடலுக்கு உயிர் கொடுப்பது படைப்பாகிறது!
   கல்லுக்கு உயிர் கொடுத்தால்  படைப்பாகிறது!
சொல்லுக்கு உயிர் கொடுக்கையில் படைப்பாகிறது!
இசைக்கு உயிர் கொடுக்கையில் படைப்பாகிறது!
மொத்தத்தில் உயிருள்ள எதுவும் படைப்பு!
எழுத்தில் உயிர் இருக்குமாயின் அது படைப்பு!
உயிரில்லா எழுத்துக்கள் வெறும்  அடைப்பு!
என்ற எண்ணம் என்னுள் உதித்தது!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!   


Comments

 1. வணக்கம் அண்ணா...

  நலம்தானே???

  படைப்பு பற்றிய அழகான தேடலும் விடையும். உண்மைதான், உயிருள்ள அனைத்துமே படைப்பு தான்...

  தொடருங்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு வெற்றிவேல்! நலம்தான்! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   Delete
 2. உயிரில்லா எழுத்துக்கள் வெறும் அடைப்பு!
  என்ற எண்ணம் என்னுள் உதித்தது!
  >>
  அதிர்ஷடசாலி சகோ நீங்க! உங்க தேடலுக்கு விடை கிடைத்து விட்டது!! எங்கள் தேடலுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! அந்த கடைசி வரி எழுதும் போது உயிரில்லா எழுத்துக்கள் வெறும்.. என்று யோசித்து ஒரு இரண்டு நொடியில் அடைப்பு என்று எழுதினேன். மாற்றலாமா என்றும் யோசித்தேன்! அதைவிட வேறு சிறந்த மாற்று கிடைக்கவில்லை! உங்கள் கருத்தோடு ஒத்துப்போனதில் மகிழ்ச்சிதான். என் தேடல் இத்துடன் முடியவில்லை சகோ! இன்னும் நிறைய இருக்கிறது! அவ்வப்போது பகிர்கிறேன்! நன்றி!

   Delete
 3. //எழுத்தில் உயிர் இருக்குமாயின் அது படைப்பு!// அருமை சகோ. படைப்பைப் பற்றி ஒரு அலசு அலசி விடையும் சொல்லிவிட்டீர்கள்! நன்றி

  ReplyDelete
 4. // பிறப்பில் குற்றமில்லை...!
  வளர்ப்பில் தான்
  வேறுபடுகிறது படைப்புக்கள்...! //

  100% உண்மை...

  ReplyDelete
 5. //எழுத்தில் உயிர் இருக்குமாயின் அது படைப்பு..
  உயிரில்லா எழுத்துக்கள் வெறும் அடைப்பு!..//

  நடை சிறந்த தமிழ்க் கவிதை
  தளிர்.. தந்தது..
  மடை திறந்த வெள்ளம் அதில்
  மனம் மகிழ்ந்தது!...

  ReplyDelete
 6. // எழுத்தில் உயிர் இருக்குமாயின் அது படைப்பு!
  உயிரில்லா எழுத்துக்கள் வெறும் அடைப்பு!//
  சோக்கா சொல்லிக்கினபா...!

  ReplyDelete
 7. நீண்டதொரு அருமையான கவிதை.
  "//பிறப்பில் குற்றமில்லை! வளர்ப்பில்தான்
  வேறுபடுகிறதுபடைப்புக்கள்!//"
  உண்மை தான். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. அருமை..... பாராட்டுகள்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2