புகைப்பட ஹைக்கூ 71

புகைப்பட ஹைக்கூ 71


உடைந்ததும்
துளிர்த்தது
நம்பிக்கை!

கை போனாலும்
கைவிடவில்லை!
தூரிகை!

குறைபட்டாலும்
குறையவில்லை
நம்பிக்கை!

வாதம் முடக்கினாலும்
வளர்த்தது
நம்பிக்கை!

படைத்தவன் பிழைசெய்தாலும்
படைப்பில் இல்லை
பிழை!

வலியை மறக்கடித்தது
வரையும்
சித்திரம்!

ஓவியம் பிறக்கையில்
ஒளிகிறது
வாழ்வின் வலி!

ஊக்கம் நிறைகையில்
உறுப்புக்கள்
குறையில்லை!

குறைந்தாலும்
வளர்த்தது
தன்னம்பிக்கை!

உறுதுணையானது
உடன்பிறந்த
ஊக்கம்!

ஒளிரும் நம்பிக்கையில்
மிளிர்கிறது
வாழ்க்கை!

சித்திரம் சொன்னது
சிறுவனின்
நம்பிக்கை!

துயரம் துரத்துகையில்
சிகரம் ஏற்றுகிறது
நம்பிக்கை!

தன்னம்பிக்கை பிறக்கையில்
உடைபட்டன
தடைகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அற்புதம்
  புகைப்படம் தந்த நம்பிக்கையில் விரிந்த
  கவிதை படிப்பவரிடமும் அதை
  ஆழமாய் விதைத்துப் போகிறது
  மனம் கவர்ந்த கவிதை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நம்பிக்கை தந்த புகைப்படம்.

  நல்ல கவிதைகள். பாராட்டுகள்.

  ReplyDelete
 3. // படைப்பில் இல்லை பிழை // உட்பட அனைத்தும் அருமை...

  பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. துயரம் துரத்துகையில் - சிகரம் ஏற்றுகிறது
  நம்பிக்கை!..

  தன்னம்பிக்கை தளராத - அந்த சிறுவன் தன் வாழ்வில்
  எல்லா நலன்களையும் அடைய வேண்டுகின்றேன்..

  ReplyDelete
 5. அற்புதம் நண்பரே
  தன்னம்பிக்கை பிறந்துவிட்டால்
  தடைகள்தான் ஏது

  ReplyDelete
 6. என்னபபா இப்படிக் கலக்குறீங்க!

  துயரம் துரத்துகையில்
  சிகரம் ஏற்றுகிறது
  நம்பிக்கை!

  தன்னம்பிக்கை பிறக்கையில்
  உடைபட்டன
  தடைகள்!//

  புகைப்படத்திற்கேற்ற வரிகள்! சூப்பர்!

  ReplyDelete
 7. அற்புதம், அற்புதம்.
  என்ன ஒரு அருமையான தன்னம்பிக்கை கவிதை.
  வாழ்த்துக்கள் சுரேஷ்.

  நான் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2