அழுக்கு!

அழுக்கு!

 எந்தத்துணியிலுமே எளிதாக வந்து
 ஒட்டிக்கொள்கிறது அழுக்கு!
 கவனக்குறைவான ஒரு நொடி!
 “கப்”பென பிடித்துக்கொள்கிறது கறை!
அதை விரட்ட விதவிதமாய் சவக்காரம்!
அடித்து துவைக்க துணிக்கல்! அது போக இயந்திரங்கள்!
கறைநீக்கும் காரங்கள்!
அதன் பின் மறைக்க நீலம்!
எத்தனைதான் கஷ்டம் பட்டாலும் எளிதில்
விடுவதில்லை அழுக்கு!
வெள்ளைத்துணி என்றால் அதற்கு ஏகவிருப்பம்!
வெளுத்துக் கட்டினாலும் விடாது துரத்தும்!
நம் உள்ளமும் அப்படித்தான்!
எத்தனைதான் நல்வழிகள் போதனைகள்
உபதேசங்கள் உருப்போட்டிருந்தாலும்
ஒருநொடி சஞ்சலம் போதும் உள்ளத்தில் தீமை புக!
குளத்து நீரில் கல்லெறிந்தால் போல
உள்ளத்திலே புகுந்து ஆசை அலைபாயும்!
ஆமை புகுந்தாலும் தப்பில்லை! ஆனால் உள்ளத்தில்
பொறாமை புகுந்தால் புகையும் இயல்புநிலை!
விடாக் கண்டரையும் கொடாது விரட்டும்
கொடிய நோய் சஞ்சலம்! அதுமட்டும் ஆட்கொண்டால்
பீடித்துக் கொள்ளும் சபலம்!
அவலமாகிப் போகும் அனுதினம்!

ஒன்று போய் ஒன்றை அழைக்க ஒவ்வொன்றாய்
நம்மை விரட்ட நல்ல குணம் மாறிப் போக
நாடிவரும் வியாதி! அது நல்லதல்ல சேதி!
துணியழுக்கை தற்காலிகமாய் மறைக்கும் நீலம்!
வெளுக்கையிலே விரைந்து பல்லை இளிக்கும்!
மன அழுக்கினை மறைக்கும் மேற்பூச்சு சாயம்!
சாயம் கலைகையிலே கரையும் வேசம்!
மானம் மரியாதையெல்லாம் ஏறும் கப்பல்!
வேணுமா இந்த விபரீத சிக்கல்!

களைகளை கலையவே எடுக்கவேண்டும் பிரயத்தனம்!
முளையிலே கிள்ளி எறிந்தால் முழித்துக் கொள்ளலாம்!
பிழைத்தும் கொள்ளலாம்! பிழையாகிப் போனதென்றால்
பிழைப்புத்தான் ஏது?

குறைகள் என்றால் கலைந்துவிடலாம் குற்றமில்லை!
கறைகளாக மாறிப் போனால் கரைக்க முடியுமா?
நல்லவை படிய நாளாகும்! அல்லவை என்றால் அப்போதே தோதாகும்! இதுதானே மனித இயல்பு!

விழிப்புடனே இருக்க வேண்டும்! வீணில் வந்து சேரும் கறைகளை விலக்க வேண்டும்!
துயரில்லா வாழ்க்கைதனை அடைய
துணிவுடனே சஞ்சலத்தை துறக்க வேண்டும்.

துணியழுக்கை துவைத்து விரட்டலாம்!
மன அழுக்கை விரட்ட மனதில் புகவேண்டும் ஒளி!
இருளைவிட்டு விலகுவதே அதற்கு நல்லவழி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. அருமை...

    // மன அழுக்கை விரட்ட மனதில் புகவேண்டும் ஒளி! //

    சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. மன அழுக்கை விரட்ட மனதில் புகவேண்டும் ஒளி!
    இருளைவிட்டு விலகுவதே அதற்கு நல்லவழி!
    >>
    அதுக்கும் ஒரு நலவழி சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இருளைவிட்டு விலகணும்னு சொல்லியிருக்கேனே சகோ?

      Delete
  3. சகோதர்ரே..
    சிறப்பு...

    ReplyDelete
  4. பொறாமை எலும்புருக்கி நோய் என்று பைபிள் சொல்கிறது.

    ReplyDelete
  5. நண்பரே வலைப்பக்கம் காணவில்லை? வருத்தமா? உங்களையும் கலய்த்ததற்கு?!!

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்து வருகிறேனே! கூகுள் ப்ளஸ் புரொபைலில் இருந்து ப்ளாக்கர் புரொபைலுக்கு மாறியுள்ளேன். தளிர் சுரேஷ் என கருத்துரை காண்பிக்கும். இந்த குழப்பத்தில் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

      Delete
  6. உடை அழுக்கை அடித்து துவைக்கலாம்
    உள்ளத்து அழுக்கை உணர்ந்தால் தான் அகற்றலாம். இல்லையேல் உருக்குலைய வேண்டியது தான். அதிலும் பொறாமை புகுந்தால் அவ்வளவு தான். சரியாக சொன்னீர்கள் சகோதரா இருளகல ஒளி புகுதல். நன்றி பதிவுக்கு !
    வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  7. சிறப்பாக இருந்தது..

    ReplyDelete
  8. "//மன அழுக்கை விரட்ட மனதில் புகவேண்டும் ஒளி!
    இருளைவிட்டு விலகுவதே அதற்கு நல்லவழி!//" - அழகாகவும் அருமையாகவும் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2