மொக்க ஜோக்ஸ்! பகுதி 3

மொக்க ஜோக்ஸ்


1.      நம்ம தலைவர் உலகம் புரியாத அப்பாவியா இருக்காரு!
    எப்படி சொல்றே?
  பேஸ்புக்கிலேயும் டிவிட்டர்லயும் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க தலைவரேன்னு சொன்னதுக்கு அந்த பேங்க்லாம் எங்க இருக்குன்னு கேக்கறாரு!

2.      குழந்தை கொஞ்சம் கூட பயமில்லாம ஆள் மாத்தி ஆள் தாவி ஏறிக்கிட்டே இருப்பான்.
வருங்காலத்துல பெரிய அரசியல்வாதியா வருவான்னு சொல்லுங்க!

     3.புலவர் ஏன் இப்போதெல்லாம் அரச சபைக்கு வருவதே     இல்லை அமைச்சரே?
  பேஸ்புக்கில் அப்டேட் செய்வதற்கே நேரம் பத்தவில்லையாம் மன்னா!

4.குற்றப்பத்திரிக்கையை வாங்கினதும் தலைவர் கேட்ட கேள்வியை கேட்டு நீதிபதியே அசந்துட்டாரு!
அப்படி என்ன கேள்வி கேட்டாரு?
சந்தா கட்டாமலேயே எனக்கு எப்படி நீங்க பத்திரிக்கை அனுப்பலாம்னுதான்!

 5.ஆறுமாசத்திற்கு ஒரு முறை கோர்ட் படியேறுகிறாயே! உனக்கு வெட்கமா இல்லை?
இதிலென்ன வெட்கம் எஜமான்! நீங்க கூடத்தான் தினமும் கோர்ட் படி ஏறி வர்றீங்க! வெக்கப்படலியே!

 6.அந்த டாக்டர் கிட்ட போனா உயிரை எடுத்துடுவார்!
அப்ப ஆபரேசன் ஸ்பெஷலிஸ்ட்னு சொல்லு!


 7.அமைச்சரே சாமரம் வீசும் பெண்களை இரண்டு நாட்களாய் காணவில்லையே என்ன விசயம்?
தாங்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லையென ஐ.பி.எல் போட்டிகளுக்கு சென்றுவிட்டார்கள் மன்னா!

 8.தலைவருக்கு வர வர ஜெயில் ஞாபகம் அதிகமாயிருச்சு!
 ஏன்?
புதுப்படம் ரிலீஸ் ஆகுதுன்னு சொன்னா எந்த ஜெயில்ல இருந்துன்னு கேக்கறாரே!

9.தலைவர் சின்ன வீடு வெச்சிருக்கிறது அவரு சம்சாரத்துக்கு தெரிஞ்சி போச்சு!
  அப்புறம்?
அப்புறம் என்ன பிரிச்சு மேய்ஞ்சிட்டாங்க!

 10.அந்த டாக்டர் போலின்னு எப்படி சொல்ற?
 பல்ஸ் பாருங்க டாக்டர்ன்னு சொன்னா எங்க “ஆ’ காட்டுங்கன்னு சொல்றாரே!

 11. வலைவீசீகொண்டிருக்கிறேன்னு சொன்னாரே தளபதி யாருக்கு வலைவீசிக்கொண்டிருக்கிறார்?
பேஸ்புக்கில் தான் மன்னா வலைவீசிக்கொண்டிருக்கிறார்!

12.பாஸ் வச்சிருந்தும் உன்னை பஸ்ஸில இருந்து இறக்கி விட்டுட்டாங்களா ஏன்?
 அது ரயில்வே பாஸ்!

13. முன் பெஞ்ச் பையனை பாத்து காப்பி அடிக்கிறியே உன் பக்கத்துல உக்காந்திருக்கவனைப் பார்….
  அவன் நல்லா எழுதினா நான் ஏன் முன் பெஞ்ச் பையனை பாக்கிறேன்!

14. ஒரு பொண்ணுக்கு அடிக்கடி ‘டாப் அப்’ பண்ணி லவ்விக்கிட்டிருந்தியே என்ன ஆச்சு?
  வேலிடிட்டி எக்ஸ்பெயரி ஆனதால அந்த காதல் ஊத்திக்கிச்சு!

15. அன்பே நான் மூனு மாசமா முழுகாம இருக்கேன்!
   அடச்சே! அதான் இந்த நாத்தம் நாறுதா? சரிசரி! கொஞ்சம் தள்ளி உக்காரு!

16. எங்க ஆபீஸ்ல யாரும் கைநீட்டி லஞ்சம் வாங்க மாட்டோம்..
   அடடா! பேஷ்பேஷ்!
  பேங்க் அக்கவுண்ட்ல போட சொல்லிருவோம்னு சொல்ல வந்தேன்!

17.கிழிஞ்ச துணியோட இருக்கான்னு வேலைக்காரிக்கு சேலை வாங்கி கொடுத்தது வீட்டுக்காரிக்கு தெரிஞ்சு போச்சு!
   அப்புறம்?
என் சட்டையும் பேண்டும் கிழிஞ்சு போச்சு!

18. மன்னரின் நிதிநிலைமை இப்போது மோசமடைந்துவிட்டதா மந்திரியாரே!
  ஏன்?
புகழ்ந்து பாடிய புலவருக்கு பொற்கிழிக்கு பதில் ஓலையைக் கிழித்து செக் கொடுக்கிறாரே!

19. தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போச்சு!
  ஏன்?
தன்னை சந்திக்க வர்றவங்க கிட்ட கன்ஸல்டேசன் பீஸ் வாங்க ஆரம்பிச்சிட்டார்.

 20.          மாப்பிள்ளை ரொம்ப தங்கமானவருன்னு சொன்னதை நம்பி பொண்ணுக் கொடுத்தது தப்பா போச்சு!
      ஏன்?
   அடிக்கடி உச்சியிலே ஏறி உக்காந்துக்கிறாரே!

 21.          அந்த நடிகரோட லவ் ப்ரேக் அப் ஆயிருச்சாமே ஏன்?
புதுசு புதுசா பிகருங்களை பிக்கப் பண்ண ஆரம்பிச்சாராம் அதான்!


 22.          என் புருசன் நான் நில்லுன்னா நிற்பார் உக்காருன்னா உட்காருவார்!
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மாதிரின்னு சொல்லு!

23. கல்யாண பந்தியிலே என்ன அங்க கலாட்டா?
  மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ‘நவரசம்’ வேணும்னு கேட்டு அடம்பிடிக்கிறாங்களாம்!

24. கேபிள் கனெக்‌ஷன் கொடுக்கிறவரை கட்டிக்கிட்டது தப்பா போச்சு!
    ஏன்?
அடிக்கடி சேனல் மாத்திக்கிட்டே இருக்காரு!

25. என்ன இருந்தாலும் கூட்டணி பேசப்போன தலைவரை இப்படி அவமானப்படுத்தியிருக்க கூடாது.
    ஏன் என்ன ஆச்சு?
 போட்டியிடத்தான் சீட்ட கொடுக்கலைன்னு பார்த்த பேச்சுவார்த்தையிலும் உக்கார சீட் கொடுக்காம நிக்க வெச்சு பேசி அனுப்பிச்சிட்டங்களாம்!அனைத்தும் எழுதியது: சா.சுரேஷ்பாபு.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Comments

  1. கோர்ட் படி, பேங்க் அக்கவுண்ட், ஓலையைக் கிழித்து என் அனைத்தும் கலகல...

    ReplyDelete
  2. ரசித்தேன். அனைத்தும் அருமை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2