தளிர் ஹைக்கூ கவிதைகள்!1.முகத்தை காட்டி
பயமுறுத்துகிறது!
கண்ணாடி!

2.உயிரற்ற மரத்தில்
உயிருள்ள பூக்கள் 
கம்பத்தில் பறவைகள்!

3.வெம்மை வெளியே
சென்றதில் குளுமை!
மழை!

4.ஒற்றையடிப்பாதையாக
சுருங்கியது மனசு
அதீத காதல்!

5.குளிரில்
முடங்கியது சூரியன்!
மழை!


6.சிக்னல் கிடைத்ததும்
புறப்பட்டது தொடர்வண்டி!
எறும்புகள்

7.அந்தரத்தில் தொங்கின
அஸ்திவாரமற்ற வீடுகள்!
தூக்கனாங்குருவிக் கூடு!

8.வெள்ளை ரோஜாக்கள்
வரிசையாய் அணிவகுத்தன!
பள்ளி பிள்ளைகள்!

9.அடித்ததும்
அழுது பின் சிரித்தது
தேங்காய்!

10.சத்தமிட்டே
நல்லபெயர் வாங்குகிறது
பல்லி!

11.புகுந்த வீட்டுக்கு
செல்கின்றன
புது நாற்றுக்கள்!

12.தண்ணீர் சிதறல்
சுவரில் எழுந்தது
நவீன ஓவியம்!

13.வீட்டுக்கு வீடு விருந்தழைப்பு
திகைத்த காக்கை
பண்டிகை நாள்!

14.தொட்டதும்
பிடித்துக் கொண்டது
மின்சாரம்

15.முகத்தை திருப்பிக்கொண்டது
முழுநிலவு
அமாவாசை

16.வெடிச் சத்ததில்
தொலைந்து போனது
பறவைகள்!


17.குளத்தில்
கோலம் போட்டது
மழைத்துளி!

18.கண்சிமிட்டி அழைத்தது
வணிக வளாகம்
ஒளிரும் விளக்கு!

19.சுட்டுத் தள்ளி
சுவைத்தார்கள்
தீபாவளி பலகாரம்!


20.கவியும் இருட்டில்
காணாமல் போனது
ஊர்!

தமிழ் தோட்டம் என்னும் தளத்தில் நான் எழுதி பாராட்டுப்பெற்ற சில ஹைக்கூ கவிதைகள் இது. இங்கே சேமித்து வைத்துக்கொள்ள வசதியாக இடுகை இட்டுள்ளேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

 1. அனைத்தும் அருமை... ரசித்தேன்... பாராட்டுகள்...

  ReplyDelete
 2. வணக்கம் தளீர்,
  மழைப் போட்ட கோலம்,
  அனைத்தும் அருமை,
  வாழ்த்துக்கள்.
  நன்றி.

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை !

  ReplyDelete
 4. வழக்கம்போல எல்லாமே அருமை.

  ReplyDelete

 5. ஹை கிளாஸ்
  ஹைக்கூ

  ரசித்தேன்
  ரசிக்கின்றேன்
  ரசிப்பேன்.

  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 6. வழக்கம்போல்
  துளிப்பாக்கள்
  துளி தேன்
  அருமை
  தொடர்க
  தொகுக்க
  ஒரு
  மின்னூலை

  ReplyDelete
 7. தங்களின் பல்துறைப் புலமை கண்டு வியக்கிறேன்.

  அனைத்துக் கவிதைகளையும் ரசித்தேன்.

  நன்றி.

  ReplyDelete
 8. அனைத்துமே அருமை. குளத்தில் கோலம் போட்ட மழைத்துளி என்னை அதிகம் கவர்ந்தது.

  ReplyDelete
 9. அருமை... அருமை... ரசித்தேன்.

  ReplyDelete
 10. ஒவொருமுறையும் அசந்து தான் போகிறேன். அனைத்தும் அழகு ரசித்தேன். wow செம செம செம வாழ்த்துக்கள்..! நன்றி !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!