தளிர் சென்ரியூ கவிதைகள்!
தளிர்
சென்ரியூ கவிதைகள்!
அணியவில்லை
மூடி!
ஒளிந்துகொள்
ஓடி!
தலைக்கவசம்!
உறைபோட்ட
நிலங்கள்!
இரைக்க மறுத்த
நீர்!
சிமெண்ட்
சாலைகள்!
செயற்கை
உரங்கள்
செழித்தது
வட்டிக்கடை!
ஓட்டை
விழுந்தது
கிழிந்து
போனது வானிலை!
ஓசோன்!
இறைத்த காசில்
பொறுக்கி
எடுக்கப்படுகின்றது
தேர்தல்
வெற்றிகள்!
தூக்கில்
இட்டார்கள்!
கதறவில்லை!
தின்பண்டங்கள்!
கஞ்சி ஆறுமுன்
பசி ஆறியது
ஆடு!
சுவரொட்டி!
வளிக்கு
வலி எடுத்தது!
தொழிற்சாலை
புகை!
போதை
அழைத்ததும்
தவறுகின்றது
பாதை!
ஓடிப்போனார்கள்!
உடைந்துபோனது
ஊர்!
விளையும் முன்
அறுவடை
செய்கிறார்கள்!
குழந்தைத்
தொழிலாளர்கள்!
இளைக்க இளைக்க
வருந்துகிறது
மனசு!
பணப்பை!
அள்ளிக்
குவித்தார்கள்!
தள்ளிப்போனது
பாசனம்!
மணல்!
உயிரை
உறிஞ்சினார்கள்!
ஊற்றெடுக்கவில்லை
நீர்!
மணல்!
வானுயர்ந்த
கட்டிடங்கள்!
வழி அனுப்பின
காற்று!
துரித
உணவுகள்!
துறத்துகின்றது
ஆயுள்!
வெட்டுபட்ட
மரங்கள்!
கட்டுப்படுத்தின!
மழை!
ரணங்களை
கரைக்க
பணங்களை
பறிக்கின்றன
மருத்துவமனைகள்!
இலக்கினை
எட்டுகையில்
விளக்கினை
இழக்கின்றன குடும்பங்கள்!
டாஸ்மாக்!
உணவுக்கு ரேசன்!
குடிப்பதற்கு அளவில்லை!
முரணான அரசு!
இன்றைய வலைச்சரத்தில் எனது பதிவைக் காண இங்கு: இணையக் கடலில் ஓடும் சிற்றாறு நான்
தங்கள்
வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!
நன்றி!
பாதை, தேர்தல் வெற்றி, டாஸ்மாக் என அனைத்தும் சும்மா "நச்"
ReplyDeleteஅனைத்துமே அருமை நண்பரே. பாராட்டுகள்.
ReplyDelete//தூக்கில் இட்டார்கள்!
ReplyDeleteகதறவில்லை!
தின்பண்டங்கள்!//
என்ன அருமையான கற்பனை .
வாழ்த்துகள்
பணப்பை!
ReplyDeleteமருத்துவமனைகள்!
முரணான அரசு!.....என அனைத்தும் அருமை.
வழக்கம்போல கவிதையில் அசத்திவிட்டீர்கள். வலைச்சரத்தில் ஆசிரியர் பணியாற்றிக்கொண்டு இங்கேயும் பதிவு செய்யும் தங்களது விடாமுயற்சிக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteஉணவுக்கு ரேசன்!
ReplyDeleteகுடிப்பதற்கு அளவில்லை!
முரணான அரசு!
உண்மை உண்மை
வணக்கம் தளீர்,
ReplyDeleteஅனைத்தும் அருமை,
நன்றி.
தூக்கில் இட்டார்கள்!
ReplyDeleteகதறவில்லை!
தின்பண்டங்கள்!
கஞ்சி ஆறுமுன்
பசி ஆறியது ஆடு!
சுவரொட்டி!
போதை அழைத்ததும்
தவறுகின்றது
பாதை!
இலக்கினை எட்டுகையில்
விளக்கினை இழக்கின்றன குடும்பங்கள்!
டாஸ்மாக்!
உணவுக்கு ரேசன்!
குடிப்பதற்கு அளவில்லை!
முரணான அரசு!
சுப்பர் சூப்பர்....