களை! பாப்பா மலர்!
களை!
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய அவினாஷ் புத்தகப்பையை தூக்கி எறிந்தான். என்ன அவினாஷ்...! இவ்வளவு கோபமா வறே? என்ன விஷயம்? காபியை கொடுத்தபடி தாய் கேட்டாள்.
காபியை குடித்து முடித்த அவினாஷ் “அம்மா நாளையிலிருந்து ஸ்கூலுக்கு போகமுடியாது” என்று கோபமாகக் கூறினான் அவினாஷ்.அதைக்கேட்ட அவனது அம்மா “ஏண்டா கண்ணா இப்படி சொல்றே? போய்வர ரொம்பகஷ்டமா இருக்கா பசங்க ஏதாவது தொந்தரவு பண்ராங்களா? படிப்பு வாழ்க்கைக்கு ரொம்ப அவசியமாச்சேப்பா ! என்ன விஷயம் எங்கிட்டே தைரியமா சொல்லுடா கண்ணா” என்று பரிவாக கேட்டாள்.
உடனே அவினாஷ் அழுது விட்டான். “எங்க தமிழாசிரியர் ரொம்பக் கோவக்காரரும்மா என்னையே சும்மா திட்டுவாரு இன்னிக்கு என்னை போட்டு அடிச்சிட்டாரு இதபாரும்மா என்று முதுகைக் காட்டியவன் நான் இனிமே ஸ்கூலுக்கு போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தான்.
“கண்ணா ஆசிரியர் தப்பு செய்யாம அடிக்கமாட்டாரு! நீஎன்ன தப்பு செஞ்சே?”
அ.. அது.. வந்து.. “சொல்லு என்ன செஞ்சே?’
“பாடம் நடத்தறப்ப கவனிக்காம வெளிய வேடிக்கை பார்த்தேன்”
“அதுக்காகவா அடிச்சாரு ?”
“ஆமாம்மா!”
“நான் விசாரிக்கறேன் நீ பிடிவாதம் பிடிக்காம ஸ்கூலுக்கு போகனும் சரியா!”
அறை குறையாய் சம்மதித்தான் அவினாஷ்.
மறுநாள் அந்த தமிழாசிரியரை சந்தித்தாள் அவினாஷின் தாய். ‘நான் அவனை காரணமில்லாம அடிக்கலம்மா! பாடம் நடத்தறபோது கவனிக்காம மத்த பசங்களை வம்புக்கு இழுப்பது வகுப்பு நடக்கும்போது சிரிப்பு மூட்டறது சின்னபசங்களை அடிக்கிறதுன்னு அவன் பண்ற வால் தனங்கள் அதிகம்.இப்படி பல தவறுகள் செஞ்ச அவனை பலமுறை கண்டிச்ச நான் அன்னிக்கு கொஞ்சம் நிதானத்த இழந்துட்டேன் அதான் அடிக்கும்படியா ஆயிடிச்சி மத்தபடி பசங்கள பிரம்பால திருத்தறத விட அன்பால திருத்தறதயே நான் விரும்பறவன். அவன்கிட்ட இருக்கற அந்த பிடிவாதமும் குறும்பும் இல்லாட்டி அவன் நல்ல பையன் தான் அந்த கெட்ட குணத்த நாமதான் களையெடுக்கணும்.’ என்றார் தமிழாசிரியர்.
“ரொம்பநன்றி ஐயா! அவனை எப்படியாவது திருத்த முயற்சி பண்றேன் என்று விடைபெற்றுக்கொண்டு மகனை எப்படி திருத்தலாம் என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தாள் அவினாஷின் தாய்.
தோட்டத்தில் இருந்தான் அவினாஷ். “என்ன அவினாஷ் என்ன பண்றே?”
“கீரைப் பாத்தியிலே களை எடுத்தேம்மா!”
“எதுக்கு?”
“என்னம்மா கேள்வி இது? களையை அப்படியே விட்டா கீரை எப்படி நல்லா வளரும்?”
“நல்ல பதில்! ஆமாம் முடி வெட்டிட்டு வந்திருக்கே போல?”
‘ஆமாம்மா!”
“ஏன்? அப்படியே விட்டிருக்கலாம்லே!”
‘ என்னம்மா ஆச்சு உனக்கு இப்படியெல்லாம் கேக்கற?”
“எனக்கு ஒன்னும் ஆகலே நான் கேட்ட கேள்விக்கு பதில சொல்லு?”
‘அப்படியே முடிய வளரவிட்டா வளர்ந்து அசிங்கமாகி சிக்கு பிடிச்சுடாதா?”
‘நல்லா சொன்னே! எப்படி கீரைப் பாத்தியை களை எடுக்காம விட்டா கீரையை களைஅழிச்சிடுமோ முடிவெட்டலன்னா சிக்கு பிடிச்சிடுமோ அதுபோலதான் சின்ன பசங்களான நீங்களும்”
“ஒன்னுமே புரியலம்மா!”
“சொல்றேன், வளர்ற செடிகள்ல களைகள் ஊடுறுவதுபோல வளர்ற பசங்களான உங்க கிட்ட தவறான செய்கைகளான பிடிவாதம், பிறரை அடித்தல், கோள்மூட்டல், விளையாட்டுத்தனம் போன்றவை வளருது அவற்றை முளையிலேயே கிள்ளி எறியணும்.”
“ எப்படி நீ கீரை பாத்தியிலே களை எடுத்தியோ அது போல ஆசிரியர்கள் உன்கிட்ட இருக்கற தீய குணங்கள களை எடுக்கிறாங்க! முதல்ல அன்பா பின்னர் சற்று கடுமையா பூச்சடிச்ச செடிக்கு மருந்தடிக்கிற மாதிரி!”
“இப்ப புரியுதா இனி ஒழுங்கா ஸ்கூலுக்கு போவியா?”
“ அம்மா என்னை மன்னிச்சுடும்மா இப்பவே என் தீய குணங்களை எல்லாம் விட்டுடறேன். நாலையிலருந்து ஒழுங்கா ஸ்கூலுக்கு போய் நல்ல பிள்ளையா நடந்துக்கறேன்” என்ற மகனை தழுவிக் கொண்டாள் அந்த பாசத்தாய்.
(மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! தங்கள் கருத்துக்களை இட்டுச் செல்லலாமே! கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே!
நல்ல கதை சகோ. இப்படி பெற்றோரும் பிள்ளைகளும் புரிந்துகொண்ட காலம் இன்னும் தொடர்கிறதா என்பது தான் சந்தேகம். கண்டிக்கும் ஆசிரியரை மிரட்டுகிறார்களே..
ReplyDeleteஉண்மைதான் சகோ! இது நான் 2000மாவது ஆண்டில் கையெழுத்து பத்திரிக்கையில் எழுதியது. வலையில் எழுதத் துவங்கிய புதிதில் பதிவிட்டேன்! அப்போது படிக்காதவர்களுக்காகவும் என்னுடைய வேலைப் பளுவின் காரணமாகவும் மீள்பதிவு செய்துள்ளேன். கண்டிக்கும் ஆசிரியர்களை மிரட்டுபவர்கள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள் என்பது என்னுடைய திடமான எண்ணம்.
Deleteஅருமையான கதை
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
மனதை நெருடும் கதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான கதை ஆனாலும் எல்லாப் பிள்ளைகளும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள் இல்லையா ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி தான் சொல்லணும். எல்லோரும் ஒரே மாதிரி இருக்க மாட்டார்களே. அல்லவா ? நன்றி வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteநல்ல நீதிக்கதை. நல்ல உதாரணம், இள வயது மனதில் பதியும்படி. நன்றி.
ReplyDeleteநல்லதொரு நீதிக்கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDelete